நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக |
நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள் Posted: 12 Aug 2009 08:06 AM PDT யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி) விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவிற்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம். |
நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் Posted: 12 Aug 2009 08:04 AM PDT 1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா) 2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி) விளக்கம்: நோன்பாளி, நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே, நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். இன்று முஸ்லிம்களில் பலர், நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன். |
Posted: 12 Aug 2009 08:01 AM PDT |
பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது Posted: 12 Aug 2009 07:50 AM PDT 1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி) 2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்) விளக்கம்: கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரீத்தம் பழம் அதுவும் கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும். |
Thursday, August 13, 2009
நோன்பாளிகளே உங்களைத்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment