அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 13, 2009

இம்மாதத்தின் பன்னீர்த்துளிகள்தான் ஏனைய 11 மாதங்களிலும் வாசம் வீசப்போகின்றது .

ஓர் மாலைப் பொழுது சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விண்மீன் களைக் கண்டு ஒழிந்துகொள்ளும் நேரம். கடற்கரையிலே தூவிவிட்ட மணற்துகள்களைப் போல் மக்கள் கூட்டம். ஆரவாரமாயும், குதூகலமாயும் நிறைந்த உள்ளங்கள்வானத்தைப் பார்வைகளால் சுற்றி வருகின்றன. வானத்தில் என்னதான் அதிச யம் இருக்கிறது...? என்று உங்கள் எண்ணங்கள் கதைத்துக் கொள்வது என் செவிகளுக்குக் கேட்கிறது. வேறொன்றுமில்லை. ரமழானை வரவேற்க தலைப்பிறை தென்ப டுமா..?! என்ற ஏக்கம்தான்!

உண்மையிலேயே இறைவன் அருளிய பெரும் மாண்புமிக்க மாதம்தான் ரமழானென கூற முடிகி றது. இறை மொழியும் எம்நபிக்கு வஹியாய் வந்து சேர்ந்ததும் இம்மா தத்திலேதான். பாவங்கள் போக்கி இறையோனின் அருள் போர்த்திக் கொள்ளும் உன்னத லைலதுல் கத்ர் இதிலேதான்மறைந்திருக்கிறது. திருமறையும் இவ்வாறு கூறுகிறது;

"ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் (எனும் வேதம்)இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையை) பிரித்தறிவித்து நேரான வழியைத்தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே,உங்களில் எவர் இம்மா தத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்..." (அல் பகறா: 185)

இப்படியாகத் தொடர்கிறது இவ்வசனம்.

ஈமானிய நெஞ்சங்களே! இப் புனிதம் பூத்துக் குழுங்கும் இம்மா தத்தை நாம் இழந்தால் எம்மைவிட நஷ்டவாளராக யாரிருக்க முடியும்...?! சிந்தனையை சிறிது அலசிப் பாருங் கள். ஒரு கனம் நாம் கடந்து வந்த ரமழான்களில் பார்வையை விட்டுப் பாருங்கள்.

இறையச்சத்தோடு, ஈமானிய உணர்வோடு எத்தனை ரமழான் களை கடந்து வந்திருப்போம். ஓரி ரண்டாவது... நிச்சயம் இல்லாமலி ருக்கும். கூடியதுநோன்பின் சில நாட்கள் உற்சாகத்தோடு, அமல்கள் செய்து கடத்தியிருப்போம். ஆனால், போகப் போக வலுவில்லாமல் எம் உள்ளங்கள் ஆசைகளுக்கும் வீணுக் கும் இடம் கொடுத்திருக்கும். நான் சொல்வது உண்மைதானே...?யதார்த் தத்தில் இவை இல்லாமலில்லை. நானும்தான் நீங்களும்தான் நிச்சயம் பழைய ரமழானினது பக்கங்களை மீட்டிப் பார்க்க வேண்டும். இதன் மூலமல்லவா இந்த ரமழானையா வது உயிர்ப்புள்ளதாக கழித்திட முடியும்.

வரட்சியான இதய எண்ணங் களை நீரூற்றி செழிப்பான தரையாக மாற்ற இந்நோன்புகள் நிச்சயம் பயிற்சியளிக்கும். இந்த ஒரு மாதத் தில் எம் உள்ளங்களில் தெளிக்கும் பன்னீர்த்துளிகள்தான் நாளையாகப் போகும் பதினொரு மாதங்களிலும் வாசம் வீசப் போகிறது. அப்போது எப்படி நாம் அலட்சியமாய் இருந் திட முடியும்...? ஆதலால் தற்போதி லிருந்தே நாம் எம்மை தயார்படுத்த வேண்டும். எப்படி தயார்படுத்துவது என்று உங்கள் சிந்தனை ஓடுகிறதா? கேளுங்கள்.

கடந்த ரமழானினது நோன்புகளினை உம் விழிகளுக்குள் காட்சிப்ப டுத்துங்கள். உங்களது அமல்கள், செயற்பாடுகள் எந்நிலையில் இருந்தது? எல்லா நோன்புகளையும் உளத்திருப்தியோடு பிடித்தேனா? அல்லாஹ்விற்குப் பொருத்தமான முறையில் அந்நோன்புகள் இருந்ததா? எனது தொழுகைகள் எவ்வாறிருந் தது? குர்ஆனுடனான தொடர்புகள் என்னுள் நெருங்கியிருந்ததா?ஒவ்வொரு பத்தினதும் சிறப்பறிந்து எனது செயற்பாடுகள் அமைந்திருந்ததா?...இப்படியாக உங்களது நினைவுகளை வரிசைப்படுத்துங்கள்.

அதன்படி எம்மை அடையவிருக்கும் ரமழானினை உள்ளத்தில் கனவு காணுங்கள். கண்ட கனவுகளை சிந்த னையில் விட்டு மனதினுள் எழுதிக் கொள்ளுங்கள். அதுதான் திட்டமிடலாக மாறும். இப்பொழுது புரிந்து ணர்ந்தீர்களா? தயார்படுத்துவது எப்படி என்று...?! புதுப்புது வித்தியாச மானவிடயங்களையும் புகுத்திக் கொள்ளுங்கள்.

சொந்தங்களே! சென்ற ரமழானில் வாழ்ந்த எத்தனையோ உயிர்கள் இந்த ரமழானை அனுபவிக்க இறைவன் விதியில் அவனிடமே அழைத்துக் கொண்டிருப்பான். ஆனால் எமது அதிஷ்டம் இந்த ரமழானையும் அடையும்பாக்கியத்தை அவன் எமக்காய் விட்டிருக்கிறான். ரமழானில் எம்உணர்வுகளையும், உள்ளத்தையும், உடலினையும் அழுக்ககற்றி தூய்மையாகதயார் படுத்துவோம். எமது ஆசைகள் எம்மை மீறாமல் தடையிட்டுக் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் இந்த ரமழானை எமக்குத் தந்து தக்வாவை ஊட்டி இறையச்சத்தில் திளைக்க உறுதிகள் எம்முள் புடம் போடட்டும்.

"ரமழானே! உன் நினைவுகள்

என்னுள்ளும் அலைமோதுகின்றன...

என் உணர்வுகளுக்கு சுவாசமளிக்க

ஓடிவா...!!!"

No comments: