
பின்னர் இவர் 2005 ஆம் ஆண்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இவருடைய வழக்கை மறு ஆய்வுச்செய்ய உத்தரவிட்டது.அதில் இவர் தவறான எண்ணத்தின் அடிப்படையில் தவறான அத்தாட்சியின் மூலம் கைதுச்செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க அப்பீல் நீதி மன்றம் விடுதலைச்செய்ய உத்தரவிட்டது.
அல்மொயாதிற்கு 2005 ஆம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றம் 75 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. அவருடைய உதவியாளரான முஹம்மது ஸயதிற்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தன.அவருடைய உதவியாளரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் அநியாயமான முறையில் சிறைபிடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள ஷேஹ் அல் மொயாத் தாயகமான யெமனுக்கு திரும்பியபொழுது அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் சிறப்பான வரவேற்பை விமான நிலையத்தில் அளித்தனர்.
செய்தி :
செய்தி :
No comments:
Post a Comment