கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான குழுமச் சகோதரர்களுக்கு
கேள்வி1. நபி(ஸல்) அவர்கள் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா (உரை) நிகழ்த்தியுள்ளார்களா?
கேள்வி2. முதல் கேள்விக்கு ஆதாரம் இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எந்த நபித்தோழரின் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா(உரை) நிகழ்த்தினார்கள்?
கேள்வி3. திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தால் நிக்காஹ் நடக்கும் முன் குத்பா(உரை) நடத்த வேண்டுமா? அல்லது நிக்காஹ் நடந்து முடிந்த பின் குத்பா(உரை) நிகழ்த்த வேண்டுமா?
குறிப்பு: திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில் தரவும். தாங்கள் பதில் அளிக்கும் எல்லா தலைப்புகளின் கீழ் குறிப்பிடும் ஹதீஸ்களின் அறிப்பாளர் வரிசையையும் சேர்த்து பதிலளித்தால் அதன் தரத்தை பரீசீலனை செய்ய வசதியாக இருக்கும். அல்லது அரபி டெக்ஸ்டை பேஸ்ட் செய்துவிட்டால் கூட போதுமானது.
- சிராஜ் ஏர்வாடி
பதில்:- வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
தொழுகையில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் பிற தேவைகளின் பொழுது ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் நபி (ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
தொழுகையில் தஷஹ்ஹுத் ''அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாவது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும்,
தேவைகளின் போது ''அல்ஹம்துலில்லாஹி நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வநவூது பில்லாஹி மின்ஷுருரி அன்புஸினா வஸய்யிஆதி அஃமாலினா, மன்யஹ்திஹில்லாஹுஃபலா முளில்ல லஹ், வமன்யுள்லில் ஃபலா ஹாதிய லஹ் வஅஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும் மேலும் மூன்று வசனங்களையும் ஓதுவார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் - திர்மிதீ 1023 நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)
மூன்று வசனங்கள் 3:102, 4:1, 33:70 ஆகியவை என்று ஸுஃப்யான் ஸவ்ரீ விளக்கமளிக்கிறார்கள்.
3:102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்¢ மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
4:1 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்¢ அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
33:70 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதுவதன் பொருள்:
''எல்லாவித கண்ணியமும் தொழுகைகளும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது ஸலாமும், இறையருளும், பரக்கத்தும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.''
பிற தேவைகளில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதின் பொருள்:
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது! அவனிடமே உதவி தேடுகிறோம், பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், தீய செயல்களை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம்! எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் இல்லை.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ
قَالَ عَبْثَرٌ فَفَسَّرَهُ لَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ
திருமண நிகழ்வுகளில் மட்டுமின்றி, எல்லா நிகழ்ச்சிகளிலும் உரையாற்றும் மேற்கண்ட உறுதி மொழியை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். திருமணத்தின் போது இந்த குத்பாவைக் கண்டிப்பாக ஓதவேண்டும் என்று இல்லை! குத்பா நிகழ்த்தவில்லை என்றாலும் திருமணம் நிறைவேறிவிடும்.
''நான் நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் முத்தலிப் மகளார் உமாமாவை மணமுடித்துக் கேட்டேன். அவர்கள் குத்பா ஓதாமல் எனக்கு அவரை மணமுடித்து வைத்தார்கள்.''அறிவிப்பவர் பனூ ஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர். (நூல் - அபூதாவூத் 1810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ الْعَلَاءِ ابْنَ أَخِي شُعَيْبٍ الرَّازِيِّ عَنْ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي سُلَيْمٍ قَالَ
خَطَبْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَامَةَ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ فَأَنْكَحَنِي مِنْ غَيْرِ أَنْ يَتَشَهَّدَ
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
அன்புடன்,
AMZATH KHAN
-~---------- ~----~--- -~----~-- ----~----
No comments:
Post a Comment