அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 9, 2009

யூ. ஏ ஈ தொழிலாளர்களுக்கான தங்குமிடம் குறித்து புதிய விதிமுறை


கட்டிடத் தொழிலாளி ஒருவர்
கட்டிடத் தொழிலாளி ஒருவர்
ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளிகள் தங்கவைக்கப்படும் இடம் தொடர்பில் அந்நாடு புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.

தொழிலாளி ஒருவருக்கு குறைந்தது மூன்று சதுர மீட்டர் இடமாவது வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு அறையில் பத்து பேருக்கு மேல் தங்கவைக்கப்படக் கூடாது என்றும் தற்போது வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு விதிகள் கூறுகின்றன.

தொழிலாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் குளிரூட்டி வசதி, திறந்த வெளிகள், ஓய்வு மற்றும் கேளிக்கை வசதி போன்றவற்றை மேம்படுத்துதல் தொடர்பான விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்டின் கட்டுமான தொழில்துறையில் லட்சக்கணக்கான தெற்காசியத் தொழிலாளிகள் வேலைபார்க்கிறார்கள்.

ஆனால் இந்த வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் நிறைவேற்றவும் தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்கள் வரையான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை நிறைவேற்றாதவர்களுக்கு எவ்விதமான தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெளிவாக இல்லை.

No comments: