அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, July 28, 2009

சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்


ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிகாலத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த சிரியாவை சரிக்கட்டுவதற்கு அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஜார்ஜ் மிச்சேல் மீண்டும் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார்.
சிரிய அதிபர் பஸ்ஸாருல் அஸதுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் மிச்சேல் தெரிவித்தார். அரப் இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைகளில் சிரியாவின் பூரண பிரநிதித்துவத்தை அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது. இஸ்ரேல் சிரியாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கும் என மிச்சேல் குறிப்பிட்டார்.
சிரியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மிச்சேல் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். பதவியேற்றபின் இரண்டாம் முறையாக மிச்சேல் சிரியா சென்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சிரியாவை தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடாகவே கருதியிருந்தார்.இதனால் இரு நாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஒன்றும் இல்லாமலிருந்தது. ஈரானுடனான சிரியாவின் உறவின் விரிசல் ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம். அதே நேரத்தில் இஸ்ரேல் கைப்பற்றியுள்ள கோலான் குன்றுகளை சிரியாவிடம் ஒப்படைக்காதவரை சமாதானத்திற்கு சாத்தியமில்லை என்று பஸ்ஸாருல் அஸத் மிச்சேலிடம் தெளிவுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:

No comments: