அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, July 28, 2009

ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்த பிரிட்டீஷ் எம்.பிக்கள் கோரிக்கை

இஸ்ரேலிய சியோனிஷ ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக தற்காப்புபோராட்டத்தை நடத்தி வரும் ஃபலஸ்தீனின் முக்கிய அமைப்பானஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பிரிட்டீஷ் எம்.பிக்கள்அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஹமாஸை புறந்தள்ளிவிட்டு சமாதான நடவடிக்கைகளுக்கு எந்தவிதமுன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அனைத்துகட்சி எம்.பிக்கள்அடங்கியவெளிநாட்டு விவகாரக்குழு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது.அனைத்து கட்சிகளைச்சார்ந்த எம்.பிக்கள் அடங்கியகுழு இரண்டுவருடத்திற்கு முன்பும் இதுப்போன்றதொரு அறிக்கையை அரசுக்குஅளித்திருந்தது. லெபனானில் தற்காப்புப்போராட்டத்தை நடத்தி வரும்ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கார்டன் பிரவுன் அரசுஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
பேச்சு வார்த்தைகளில் ஹமாஸையும் உட்படுத்தவேண்டாம் என்றமத்தியகிழக்கு நான்கு பேர் குழுவின்(Middleeast quartet) கொள்கையால் எந்தமுன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் தங்களுடையகருத்து என்று எம்.பிக்கள் குழு கூறியுள்ளது.
ஹமாஸின் ஒத்துழைப்பு இல்லாமல் நிலையான அமைதிக்கு சாத்தியமில்லை.காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் முடிந்து 6 மாதமாகியும்இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. கலவரத்தைஉருவாக்கும் வாய்ப்புகள் தற்ப்பொழுதும் உள்ளன.இத்தகைய சூழலில் மீண்டுபிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஹமாஸின் நிலைப்பாட்டில்மாற்றம் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளிலும் நான்கு பேர்க்குழு(quartet) தோல்வியையே தழுவியுள்ளது.இவ்வாறு அக்குழு தனதுஅறிக்கையில் கூறியுள்ளது.
Middleeast quartet
என்பது அமெரிக்கா, ரஷ்யா,.நா, யூரோப்பியன்யூனியன் ஆகியன அடங்கிய குழு. இதில் ரஷ்யா மட்டும்தான் ஹமாஸுடன்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments: