அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, September 13, 2009

குரங்கு காய்ச்சல் ஆபத்தானது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கோலாலாம்பூர்: விஷக்காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வரிசையில் அடுத்து குரங்கு காய்ச்சல் வந்துள்ளது. நோய் வாய்ப்பட்ட குரங்குகளில் உள்ள வைரஸ்கள் மூலம் மனிதர்களிடம் இந்த காய்ச்சல் பரவுகிறது. நீண்ட வால் குரங்குகளிடம் இருந்துதான் இந்த பாதிப்பு அதிகமாக வருமாம். மலேசியாவில் குரங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டி லும் குரங்கு காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

குரங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவுவது இல்லை. ஆனால் அந்த நோய் தாக்கினால் ரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படும் மூச்சு விட கஷ்டப்பட வேண்டியதிருக்கும். உரிய மாத்திரை சாப்பிடாவிட்டால் சிறு நீரகங்களை குரங்கு காய்ச்சல் பழுதாக்கி விடும். எனவே குரங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

இந்தியாவில் காய்ச்சலை பரப்பும் தன்மை கொண்ட குரங்குகள் இல்லை. எனவே இந்தியர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சுற்றுலா பயணிகள் மூலம் குரங்கு காய்ச்சல் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது


No comments: