அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, September 17, 2009

பாஜகவை அத்வானி சர்வாதிகாரித்தனமாக நடத்துகிறார் - கூட்டணி கட்சி குற்றச்சாட்டு.

பாரதிய ஜனதா கட்சியை அத்வானி சர்வாதிகாரித்தனமாக நடத்துகிறார் என இந்திய தேசிய லோக் தள் கட்சி பொதுச் செயலாளர் அஜய் செளதாலா குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே உட்கட்சி பூசலிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அத்வானியை சர்வாதிகாரி என கூறியிருப்பது அத்வானியின் செல்வாக்கிற்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இணைய தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த அஜய், பாஜக, எப்போதும் கூட்டனி கட்சிகளை தங்களின் ஆசை, அதிகாரத்திற்கு தான் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், கூட்டனி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பதை ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக, ஆந்திராவில் சந்திர பாபு நாயுடு, ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக், ஜம்மு-காஷ்மீரில் பாரூக் அப்துல்லாஹ் ஆகியோருடன் பாஜக வைத்துக் கொண்ட உறவினையும், பிறகு முறித்துக் கொண்டதையும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் அத்வானியை பிரதமராவதை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று கூறிய அவர், மோடியை எதிர்கால பிரதமராக முன்னிறுத்தியதும், வருன் காந்தி, சிறுபான்மை மக்களை குற்றம்சாட்டி பேசியது, பாஜகவின் தோல்விக்கு காரணங்கள் என்றார்.


No comments: