வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றிலேயே கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக அங்கு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் பேர் வேலையில்லாதோருக்கான நிவாரண நிதியைப் பெற விண்ணப்பித்துள்ளனராம்.
கடந்த 1982ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் அதிக அளவிலான பேர் வேலையில்லாதோருக்கான நிதியைக் கோரி விண்ணப்பித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்காவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை 51 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 1967ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவுக்கு வேலை இல்லாதோர் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
வரும மாதங்களில் வேலை இல்லாதோருக்கான நிதியைக் கோருவோரின் எண்ணிக்கை ஏழரை லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வார காலங்களில் வேலையில்லாதவர்களின் சராசரி எண்ணிக்கை 49 லட்சத்து 32 ஆயிரத்து 250 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட 89 ஆயிரத்து 250 அதிகமாகும்.
இதற்கிடையே வேலையில்லாதோருக்கான நிவாரணத் தொகை 25 டாலர் அதிகரிக்கப்பட்டு 300 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர 2400 டாலர் வரை வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment