அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 27, 2009

மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை

மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை


மேலூர்,பிப்.22-

மேலுர் அருகே படித்த பள்ளியிலேயே கதவை உடைத்து லேப்-டாப்கள் திருடிய பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

`லேப்டாப்` திருட்டு

மேலூர் அருகே உள்ளது எஸ்.கல்லம்பட்டி. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக 3 லேப்டாப் கம்ப்ïட்டர்கள் வழங்கப்பட்டன. ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள இந்த கம்ப்ïட்டர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விட்டு பள்ளியில் உள்ள பீரோவில் வைத்து விட்டுச்செல்வது வழக்கம். இதே போல் கடந்த வாரமும் பயிற்சி முடிந்ததும் `லேப் டாப்'களை பள்ளி தலைமை ஆசிரியர் சகாதேவன் பீரோவில் வைத்து பூட்டி விட்டுச்சென்றார்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பள்ளியை திறக்கச் சென்ற போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டு இருந்த `லேப்-டாப்'கள் திருடப்பட்டு இருப்பது கண்டு தலைமை ஆசிரியர் சகாதேவன் திடுக்கிட்டார். இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், போலீஸ்காரர்கள் சுப்பையா, வேலு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

மாணவர்கள் சிக்கினர்

இதில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீது சந்தேகம் வந்தது. இதைத்தொடர்ந்து அதே எஸ்.கல்லம்பட்டியை சேர்ந்த கல்லாணை என்பவரது மகன் பிரபு (வயது13) என்பவனை மேலுர் அருகே உள்ள முனிக்கோவில் என்ற இடத்தில் வைத்து பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பள்ளி கதவை உடைத்து உள்ளே புகுந்து பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து லேப்டாப்களை திருடியதை போலீசில் ஒப்புக் கொண்டான். அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மாயழகு மகன் வீரன் (14), சுப்பையா மகன் அருண் (13), மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் அக்ரகாரத்தை சேர்ந்த வீரணன் மகன் மாணிக்கம் (15) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இவர்களது வீடுகளில் மறைத்து வைத்து இருந்த 3 லேப் டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிரபு, வீரன், அருண் ஆகிய 3 பேரும் லேப்டாப்களை திருடிய கல்லம்பட்டி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட 4 பேரும் மேலுர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு தமிழரசி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments: