அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 27, 2009

குஜராத் மாநில வளர்ச்சிக்கு நரேந்திர மோடிதான் முழு காரணமா?



குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளி வாகப் புரியும்.



1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தி யாவின் முதல் மூன்று மாநிலங் களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத் திற்கு வந்தது. மின்உற்பத்திக்குத் தேவை யான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங் கிரஸ் ஆட்சியில் உருவாக்கப் பட்டது.



நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக் கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின்சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை அனைத்துமே குஜ ராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.



குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறு வதில் என்ன வியப்பு இருக்க முடியும்? வழக்கமான முன் னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர் களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர். அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்ட தாகக் கூற முடியாது.




மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள் ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக் கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது. தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகை யில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது. அண்மை யில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல் யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.



2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர் களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங் களில் செய்யப்படும் முதலீடு களைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாட காவுக்கு இணையாக இருப் பதாகவும் தெரிவித் துள்ளது. தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள் ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள் ளது.



ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன? இதற்கு இரண்டு கார ணங்கள் உண்டு.
இங்குள்ள அனைத்து இந்து மதவாதிகளும் நுண் ணறிவு என்பதே அற்றவர்கள். மதக் கலவரங்களை முன் னின்று நடத்தும் திறமை படைத்தவர் என்பது மட் டுமே அவர்கள் மோடியைக் கொண்டாடுவதற்கான கார ணம். விரைவில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியில் இறங்கு முகம் தோன்றவே செய்யும். அதனால் வெகு கைலமாக முன்னணியில் இருந்த குஜராத் பின்நிலையை அடையும். ஆனால், ரத்த ஆறை ஓடச் செய்யும் திறமையை விட மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக் குத் தெரியாது. குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச் சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார்.. இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.



தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவ னங்களைக் கவர்ந்தது. தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய் தார்கள். ஆனால் அவர் களுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாது காப்பு மட்டும் கொடுக்க வில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார். இது இதற்கு முன் எப் போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.



தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின. அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும். செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தி யாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.



( 31-1-2009 நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் தீபங்கர் குப்தா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது.)

No comments: