அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 25, 2009

[நிழல்களும் நிஜங்களும்] புலிகளுக்கு புறவாசலை திறந்துவிட்டதா பா.ஜ.க.!


'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' இது அரசியல்கட்சிகளின் வேதமொழி. 'முஸ்லிம்களுக்கு எதிரி நமக்கு நண்பன்' இது இந்துத்துவாவின் வேதமொழி. இந்துத்துவாக்கள் இந்தியாவில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என நாம் நினைத்தால் ஏமாந்துபோவோம்உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளோடு கைகோர்த்து உலகஅளவில் முஸ்லிம்களை கருவறுக்கும் 'ஆக்டோபஸ்' கரங்கள் இந்துத்துவாவுடையது என்பதுதான் உண்மை.
சமீபத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி, இந்தியாவில் இந்துத்துவா ஆட்சியை ஏற்படுத்த இஸ்ரேலிடம் உதவி கோரிய செய்தி நாம் அறிந்ததே! இப்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைகொண்ட விடுதலைபுலிகளுக்கு உதவிய செய்தியும் வெளியாகியுள்ளது.
இலங்கையில்போரை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் ம.தி.மு.க. சார்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அத்வானி கலந்துகொண்டார். அத்வானி மேடையில் இருக்கும்போது வைகோ பேசியதாக அவர்களின் அதிகாரப்பூர்வ இதழான சங்கொலியில் வந்துள்ள செய்தியிலிருந்து ஒருதுளி;
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ மந்திரியாக இருந்தார்.விடுதலைபுலிகளுக்கு பன்னாட்டுக்கடலில் போகின்ற எந்தப்பொருளையும் தடுக்கக்கூடாது என்று வாஜ்பேயி, அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியோர் முடிவுஎடுத்தனர். இதை நான் தில்லியில் பதிவு செய்ய விரும்புகிறேன் இதுபோன்று இன்னும் பல செய்திகளை காலம் வரும்போது பதிவுசெய்வேன் என்று பேசியுள்ளார்.
வாஜ்பேயி ஆட்சியிலிருந்தபோதும் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்தானே! தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு செல்லும் பொருட்களை கண்டுகொள்ளாமல் இருக்க இவர்கள் முடிவெடுத்து இருந்திருக்கிறார்கள் எனில், இவர்களின் எண்ணம் என்ன? விடுதலைப்புலிகள் மீது இவர்களுக்கு கருணை வந்தது ஏன்? தமிழ் பற்றினாலா? இல்லை இல்லை. புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் எனவே புலிகள் மூலம் முஸ்லிம்களை கருவறுக்கலாம் என்ற எண்ணம்தானே!
இதைதான் இனம் இனத்தோடு சேரும் என்பார்களோ!

No comments: