அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 25, 2009

ஆயுத பலம் அமைதி எங்கே? அபூஅஃப்ரின்


ஆங்காங்கே அரை தூக்கத்தில் பரண் மேல் பதுங்கிக் கிடந்த தீவிரவாதத்தினை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பிரச்சனையின் மூலம் குளிர் காய்ந்த ஆதிக்க அமெரிக்க தற்போது சமாதான பேச்சு வார்த்தைக்கு வழி வகுக்கிறது என்ற போர்வையில் உலக மக்களின் நிம்மதியினை நித்தமும் கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை தான். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா கையாண்ட அணுகு முறைதான் தீவிரவாதமும் மற்றும் தீவிரவாதிகளும்; வெறிகொண்டு எழுந்ததற்கு ஒரு காரணமாக இருப்பதாக பல உலக தலைவர்களின் கருத்தாகும். இதனால் தான் என்னவோ அடிக்கடி அமெரிக்காவில் நாட்டில் அந்த நாட்டு அரசிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
ஈராக் நாட்டிற்காக வேண்டி மேலும் 50 மில்லியன் டாலர் வேண்டும் என்ற கோரிக்கையினை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் சமீபத்தில் கேட்டு உள்ளார். தற்போது ஈராக் நாட்டிற்காக மட்டும் ஒரு வாரத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுவதாக அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் Washington Post தெரிவித்து உள்ளது.
ஈராக்கில், அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக தன்னுடைய படைகளை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு அனுப்பி வைத்து இருந்த இங்கிலாந்து நாடு தன்னுடைய படைகளை ஈராக்கில் உள்ள எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள பஸாரா என்ற இடத்திலிருந்து 2.9.07 அன்று இரவு 11 மணி அளவில் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த தகவலை ஈராக் நாட்டு படைத்தலைவரான General Mohan Farhad ( Commander of Basra Millitary Operations) அவர்கள் கூறினார்கள். இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமரான Gordon Brown அவர்களுக்கு அந்நாட்டில் பல பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளும் அங்கு ஆரம்பித்து விட்டன என்பதனை கருத்தில் கொண்டும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்றும் இங்கிலாந்தை சார்ந்த மக்கள் கூறிகிறார்கள்.
உலக வரலாற்று ஏடுகளில் வைர முத்திரையாக இருந்த இங்கிலாந்தும் தங்கள் பாரம்பரியம் கௌவரத்தை மறந்த அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு திரியும் கேவலமான போக்கை கைவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அங்கிருந்து முற்றிலும் படைகளை விலக்கிக்கொள்ள மற்ற நாடுகளும் முயற்சியினை எடுக்க வேண்டும்.
இஸ்ரேல் மற்றும் ஆதிக்க சக்திகள் பாலஸ்தீன நாட்டில் தொடுத்த தாக்குதல்களை ஆரம்ப கட்டத்திலிருந்து கண்டித்த வளைகுடா நாட்டின் முன்னோடியாக இருந்தது ஈரானும் அதனுடைய அதிபருமான அஹமதிநிஜாத் அவர்கள் மட்டும் தான் என்றால் மிகையாது. தற்போது இத்தகைய தாக்குதல்களை பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றினை எடுப்பதற்காக வேண்டி, அவரால் இணையத்தளம் ஒன்றானது தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் முகவரியானது http://www.ahmadinejad.ir/ என்பதாகும். இந்த இணையத்தளம் முகவரிக்கு நாம் நுழைந்தால் அவருடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தினை பற்றியும், தற்போது ஈரானில் ஏற்பட்ட வளர்ச்சியினை பற்றியும், முக்கியமாக அமெரிக்காவிற்கு அவர் பகிரங்கமாக அனுப்பிய கண்டன கடிதத்தின் சாராம்சமும்; இந்த இணையத்தளத்தில் உள்ளன. இவரின் இந்த இணையத்தளமானது பார்ஸி மொழியிலும், அரேபிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மற்றும் பிரான்ஸ் மொழியிலும் வடிவமைக்கபட்டுள்ளது என்பதினையும் குறிப்பிட்டு சொல்லலாம்.
மற்றும் தற்போது நடைபெறும் இஸ்ரேல் மற்றும் மற்றும் பாலஸ்தீன பிரச்சனையானது இன்னுமொரு உலக போருக்கு வழியினை ஏற்படுத்தி தருமா என்ற கருத்தினையும் அறியவதற்காக வேண்டியும் இதனை அவர் ஏற்படுத்தி உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தில் செல்லுபவர்கள் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விக்கு ஆம், இல்லை என்று பதிலை அளிக்க வேண்டும்.
வன்முறையும் பயங்கரவாதமும் எப்போதும் நிலையாக நீடிக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாட்டின் ஏற்படும் சூழ்நிலைகளால் ஏவிவிட்டவனையே அது திருப்பித்தாக்கக்கூடும் அல்லது தானே துவண்டு வீழ்ந்து விடும் என்பதும் வரலாற்று ஏடுகளில் நாம் கண்ட உண்மையும் கூட. இருப்பினும் இன்றைய காலக்கட்டமானது தீவிரவாதம் என்பதிலிருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டிய கால கட்டத்திற்கு நாம் அனைவரும் ஆளப்பட்டு உள்ளோம்.
உலகில் எந்த மூலையில் தீவிரவாதம் நடந்தாலும் ஆதிக்க சக்திகளின் ஊடகத்துறையானது முன்னுரிமை கொடுப்பது என்னவோ, நம்முடைய சமுதாயத்தினருக்கு தான் என்றால் மிகைப்படுத்த பட்ட செய்தியாக போய் விட்டது என்ன செய்வது. அமைதிப்பூங்கா என்று பெயர் எடுத்துக்கொண்டு இருக்கும் இந்தியாவிற்குள் நைசாக தீவிரவாத்தினை ஆங்காங்கே தூவி வேடிக்கை பார்க்கலாம் என்ற நப்பாசையுடன் அமெரிக்கா அடி எடுத்து வைக்கிறது இந்திய மக்களே.. கொஞ்சம் எச்சரிக்கையாக நாம் இருந்தால், இந்த 60 ஆண்டு கால சுதந்திரத்தினை நாம் மேன்மேலும் பாதுகாக்கலாம் இத்தகைய கயவர்களிடமிருந்து..
உலகில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களும், அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் தான். இதனை மறந்தும் மற்றும் மறைத்தும் ஆதிக்க சக்திகள் கொண்ட ஊடகங்கள் உண்மையினை சொல்லாமல் பொய்யினை திரிக்கின்றன. குறிப்பாக இலங்கை பிரச்சனையாக கொஞ்சம் பார்த்தோமனால் அங்கு அதிகமாக கொல்லப்படுவது இந்த சமுதாய மக்களாக தான் இருக்கும். 14.8.06 அன்று இங்கு நடந்த குண்டு வெடிப்பிற்கு பலர் பலியாகி உள்ளார்கள். குறிப்பாக சிறுவர் பாதுகாப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்த பள்ளி சிறுவர், மற்றும் சிறுமிகள் ஏராளமானவர்கள் இறந்து விட்டனர்கள். ஆனாலும் அந்த சமயத்தில் அந்த பிரச்சனை இலங்கையில் நடந்தாலும் சில விஷம் பிடித்த விஷமிகள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை எப்படியாவது நடத்துவோம் என்ற நம்பிக்கையுடன் நடத்திக் காட்டி விட்டார்கள் என்பது நமக்கு தெரியும்.
மத்திய கிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று சில மாதங்களுக்கு முன்பாக கூறினார்கள் சிரியா மற்றும் ஈரான் அதிபர்கள். அல்ஹம்துலில்லாஹ்.. புதிய மத்திய கிழக்கு உதித்துள்ளதாக கூறும் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் அவர்கள், அந்தப்பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பார்வை ஒரு மாயை தோன்றம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய மத்திய கிழக்கு உதயமாவதைப்பற்றி பற்றி பிரிட்டனும், அமெரிக்காவும் பேசிக்கொண்டு இருந்ததே ஒழிய, இங்குள்ள மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து அவைகள் அக்கறை கொண்டிருக்கவி;ல்லை என்ற ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் தெரிவித்துள்ள கருத்தானது ஏற்புடையதாக உள்ளது.
அமெரிக்க குடியரசு நாடுகளில், சராசரியாக 100 நபர்களில் 90 சதவீதமான நபர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் உள்ளன. உலகத்தில் ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. உலகில் சாராசரியாக 875 மில்லியன் அமெரிக்கா மக்கள் தொகையில் 270 மில்லியின் மக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த அறிக்கையினை ஜெனிவா நாட்டைச்சார்ந்த (Small Arms Survey 2007 Geneva – based Graduate Institute of International Studies.) அமைப்பானது கூறி இருப்பதாக துபாயிலிருந்து வெளிவரும் Khaleej Times என்ற செய்திப்பத்திரிகையை 30.8.2007 அன்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அந்த அறிக்கையின் படி, 8 மில்லியன் மக்கள் தொகையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் புதிய ஆயதங்களை 4.5 மில்லியன் மக்கள் வாங்குகிறார்கள். உலக அளவில் பார்த்தால் சராசரி 7 நபர்களில்; ஆயுதங்கள் வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு நபராக இருக்கும். அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால் அங்கு 10 நபர்களில் ஒரு நபரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன.
சீனாவில் சராசரியாக 100 நபர்களில் மூன்று நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. 40 மில்லியன் மக்கள்களிடம் தற்போது சீனாவில் தற்காப்பு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 மக்களில் நான்கு நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மன், பிரான்ஸ், பாகிஸ்தான், மெக்ஸிகோ, பிரெசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.
ஏமன் நாட்டில் 100 மக்களில் சாராசரியாக 61 நபர்களிடம் துப்பாக்கி ஆயுதங்கள் உள்ளன. பின்லாந்து நாட்டில் 56 நபர்களிடமும், சுவிஸ்லாந்து நாட்டில் 46 நபர்களிடமும், ஈராக் நாட்டில் 39 நபரிடமும், செர்பியா நாட்டில் 38 நபர்களிடமும், மற்றும் பிரான்ஸ் கனடா சுவீடன் ஆஸ்திரேலியா ஜெர்மன் போன்ற நாடுகளில் சராசரியாக 30 நபரிடம் இது போன்ற ஆயுதங்கள் உள்ளன. ஏழை நாடான நைஜீரியாவில் சராசரியாக 100 நபர் இருந்தால் ஒரு நபரிடம் மட்டும் தான் ஆயுதங்கள் உள்ளன.
அமெரிக்கா மற்றும் உள்ள பல மேலை நாடுகளில் உள்ள பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பாடப்புத்தகங்களுக்கிடையே கைத்துப்பாக்கியினையும் சுமந்து செல்கிறார்கள். அவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொள்ளும் பல மாணாக்கர்களை பற்றிய பல செய்திகளை நாம் படித்து இருக்கின்றோம். சில சமயங்களில் பெற்றோர்களை சுடக்கூடிய அளவிற்கும் மாணாக்கர்கள் சென்று விடுகிறார்கள்.
அமெரிக்கா நாட்டைச்சார்ந்த சிறு குழந்தை ஒன்று சமீபத்தில் காணாமல் போய் விட்டது. அதற்காக வேண்டி பல பத்திரிகைகளில் பல டாலர்கள் செலவு செய்து பல விளம்பரங்களை கொடுத்தார்கள். அந்த குழந்தையினை தேடுவதற்கு பல வீணாண செலவுகள் செய்தார்கள். பல பரப்பரப்புகள்.. அந்த சமயத்தில்.. ஆனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் பல நாடுகளில் பல குழந்தைகள் மாய்ந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதற்காக வேண்டி பல செலவுகள்.. பல கோடிகள்..

No comments: