- வங்கியில் முதலீடு, வங்கியில் வேலை, வட்டிக்கடை நடத்துதல், வட்டிக்கடையில் வேலைப் பார்த்தல், கந்து வட்டிச் சிந்தனை என்று இதை பலவாறாக குறிப்பிடலாம்.
2) சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட வட்டிக் கடையை - வங்கியை நோக்கி ஓடி தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முயலுதல்.
- சற்று முயற்சித்து அல்லது கொஞ்சம் பொருமையாக இருந்து பிரச்சனையை சரி செய்துவிட முடியும் என்ற நிலை இருந்தும் அவசர உலகத்தை விட அவசரமாக தன் நிலையை மாற்றிக் கொள்பவர்களால் வட்டி வளர்கின்றது.
இந்த இரண்டு நிலைக்கு உட்படாத எதுவும் வட்டிக்கு துணைப் போகுதல் என்ற நிலையைப் பெறுவதாக நமக்குப் புலப்படவில்லை.
உலக அளவில் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் முதல் தேசிய - மாநில சிறு நிறுவனங்கள் வரை உள்ள கோடான கோடி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிக மையங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என்று அனைத்து இயக்கமும் வங்கியுடன் தொடர்புள்ளதுதான். வங்கியில் முதலீடு அல்லது வைப்புத் தொகையும் வங்கியிலிருந்து எடுக்கப்படும் தொகையும் அந்தந்த நிறுவனங்களில் கணக்கெழுதப்படுகின்றன.
இப்படி எழுதப்படும் கணக்குகள் அந்தந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்காக இருக்குமே தவிர வட்டிக் கணக்கு எழுதுவதாக ஒரு போதும் ஆகாது.
வங்கியில் தொடர்புள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து கணக்கெழுதுவதெல்லாம் வட்டிக்கு துணை போகும் என்று யாராவது கருதினால் 'கணக்கியல்' கல்வியிலிருந்து முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த வேண்டி வரும். ஏனெனில் கணக்கியல் கல்வி என்பது வங்கியின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ தொடர்புள்ளதாகவே இருக்கும்.
இப்படி ஒரு விதியை இஸ்லாம் விதிக்கவில்லை. இஸ்லாமிய பொருளாதார சிந்தனையும் - வட்டிப்பற்றிய ஒரு பரந்த ஆய்வும் தமிழக முஸ்லிம்களிடம் இல்லாததுதான் இத்தகைய சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றது.
வட்டியுடன் நமக்கு நேரடியான தொடர்பு இல்லாத நிலையில் நாம் எழுதும் எந்த கணக்கும் வட்டிக் கணக்காக ஆகாது. 'வட்டிக்கு எழுதுபவரை நபி(ஸல்) சபித்துள்ளார்கள் என்ற சபிப்பில் இந்த கணக்கர் அடங்க மாட்டார்.
No comments:
Post a Comment