பெண்களுக்கெதிரான பயங்கரம் ஆஃப்கானில் பரவுகின்றன.
முத்துப்பேட்டை, அபூ அப்ஃரின்.
அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆக்கிரமிப்பால், ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்.
திரைப்படம் பாவச்செயல் என்று கூறிக்கொண்டு இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமையானது, இன்று கலாச்சாரத்திற்கும் அனாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமாக்கவர்ச்சி நட்சத்திரங்களின் வருகை என்று தற்போது நிலைமையே தலை கீழாக மாறி விட்டது. உலக அழகிகள் உலா வருவதும் இங்கிருந்து தான். நடக்க தெரிந்தும் முள்கள் குத்தியதைப்போல் ஒரு பிரம்மையையும், பணக்கார தோரணையில் ஒரு கஞ்சத்தனமான ஆடையுடனும், கேமரா பார்வைகளுக்கு பல நுணுங்களை கற்றுக்கொடுக்கும் பாவைகளாகவும், மற்றும் சளைக்காமல் பத்திரிகைகளில் இடம் பெறும் நொறுக்கு தீனியாகவும் ஆப்கானிஸ்தான் அழகிகள் ஆகி விட்டார்கள்.
சமீபத்தில் அங்கு நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில், அழகி ஒருத்தி அந்நாட்டு தேசியக்கொடி வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை உடுத்தி வலம் வந்து, பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்தாள். அத்துடன் இங்குள்ள சிறார்கள், படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கிறார்களோ இல்லையோ ஆனால் தெருக்களில் ஆபாச போஸ்டர்களை, சினிமா நடிகைகளில் கவர்ச்சி படங்களையும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதனை பத்திரிகை வாயிலாக நாம் கண்டோம்.
மேலாதிக்க நாட்டின் இசையானது அந்நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் திண்ணமே. ஆம்.. இசையினை இந்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதிற்காக வேண்டி மேலாதிக்க சக்திகள், பல டாலர் தொகையினை செலவு செய்கின்றன இங்கு எனலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை குறிவைத்தே இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இளமையில் கற்றால் மறக்க மாட்டார்கள் என்பதால் இது போல் பல சூழ்ச்சி மாயைகள்
'ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு ப்பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.'அல் குர்ஆன் 33 : 54
உஸ்பெஸ்கிதான் எல்லை மாகாணத்தில், மஸர்-இ-ஷரிப் நகரத்தில் நாகசாந்த் இசைப்பயிற்சி பள்ளியில், ஆறு மாத காலத்திட்டத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி கூடத்தில் 18 பெண்கள் அடங்கிய குழுவானது இசையினை கற்றுக்கொடுக்கிறார்கள் பிறருக்கு. இங்கு, பெண்கள் எப்படி பாடுவது, மற்றும் இசைக்கருவிகளான கீ போர்டு, தபாலா எப்படி வாசிப்பது என்பதினை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பழைய மற்றும் புதுமையான இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இது போல் இசையாலும், பாட்டாலும் சிறு உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானில் தூவி விட்டு அவற்றில் குளிர் காய்கிறது ஆதிக்க சக்திகள். குறிப்பாக 2006 வருட வாக்கில், இந்நாட்டில் டாலர் 9,000 மதிப்பின் படி, ஆதிக்க சக்திகளின் கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்க வேண்டி செலவிட்டு இருந்தது அமெரிக்க சக்திகள்.
இது ஒரு சிறிய சாம்பிள் தான் இது போல் எத்தனையோ கோடிகளை கொடுத்தாவது பல வகைகளிலும் வளரும் நாடுகளையும் வளரும் இளைய சமுதாயத்தினை கெடுக்கவும் ஆதிக்க சக்திகள் முயற்சிகளை மேற் கொண்டு தான் இருக்கிறது.இங்கு படிக்கும் 14 வயதான ஜாக்ரா அம்ரி, கருத்தானது 'சிறு வயது முதல்கொண்டே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், பெண்களும் இசைத்துறையில் சாதிக்கலாம், நானும் வருங்காலத்தில் ஒரு புகழ் பெற்ற இசைக்கலைஞானியாக வருவேன் என்று உறுதிப்பட கூறுகிறார். இங்கு படிக்கும் வயதில் குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா 25 வயதான மாசோமா மாஸாரியும் இங்கு தான் இசைப்பயில்கிறார். மேலும் அம்ரி கூறுகையில், இசையானது ஒரு கெட்ட வழிக்குக்கொண்டு செல்லும் என்று சில பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளை இசை பயில விடுவதில்லை என்கிறார் இவர். ஆகையால் தான் ஆப்கானிஸ்தானில் முன்பு இசைக்கும், பாடலுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவரின் பேச்சானது மேலாதிக்க சக்திகளுக்கு உறுதுணை புரிவது போல் தான் உள்ளது.
தாலிபான் அரசானது போனப்பின் தான் நாங்கள் இருண்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளோம் என்று இங்குள்ள சில பெண்களும் புதுமை விரும்பிகளும் சொல்கிறார்கள். ஆனால் இத்தகைய வெளிச்சங்கள் எல்லாம் இருள் தான் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை..? மறுமை வாழ்விற்கு செல்லக்கூடிய அந்த கார் இருளினை மறந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. தலிபான் ஆட்சி இருக்கும் போது இத்தகைய கலாச்சாரம் கட்டுபாட்டில் இருந்தது எனலாம்.
அன்று,
பெண்கள் வெளியில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லமாட்டார்கள் மற்றும் புர்க்காவால் முகங்களையும் மற்றும் உள்ள பிற உடல் பகுதியினையும் கவனமாக மூடி மறைத்துக்கொள்வார்கள். ஆனால் மேற்கத்தைய கலாச்சாரம் இங்கு பரவி விட்டதால் புதுமையான ஆடையினை உடுத்திக்கொண்டு எந்தவிதமான துணையும் இல்லாமல் இங்குள்ள பெண்கள் வலம் வருகிறார்கள் தன்னந்தனியாக.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண்களில் எடுத்துக்கொண்டால் பாதி பேர்கள் பக்கத்து நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனலாம். மற்ற நாடுகளான ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் நாட்டினை சார்ந்த பெண்கள் இங்கு அதிகம் உள்ளார்கள். அவர்கள் தாங்களும் சுதந்திர வாழ்வினை விரும்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு அனாச்சாரம் என்ற சகதியில் வீழ்ந்து விட்டார்கள்.
ஆள் பாதி.. ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தது. கலாச்சாரங்கள் மற்றும் அனாச்சாரங்கள் அதிகரித்து விட்டமையால், ஆடை கால் பாதி.. ஆள் முக்கால் பாதி.. என்ற புது மொழியானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் பரவி விட்டது ஆதிக்க சக்தியால்..!..?
'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திர மானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவானக, மிகக்கிருபையுடையவனாக இருக்கின்றான்.'அல் குர்ஆன் 33 : 59
பெண்களை ஏக இறைவன் பலஹீனத்திற்கு மேல் பலஹீனமாக தான் படைத்து உள்ளான். ஆனால் அந்த பலஹீனத்தை தம்முடைய பலமாக எண்ணிக்கொண்டு பல ஆதிக்க சக்திகள் பெண்களை எல்லாத்துறைகளிலும் புகுத்தி மகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு இஸ்லாமிய பெண்களை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகத்துறையில் பணிபுரியக்கூடியவர்களாகவும் ஆக்கி உள்ளது. இவற்றில் பணி புரியும் இப்பெண்கள், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு உண்மையான செய்தியினை மறைத்து விடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் இந்த செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் மார்க்க பற்றும் மற்றும் மதப்பற்றும் உள்ளவர்கள் அவர்களை, அவர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று மிரட்டல் விடுகிறார்கள்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் 'ஃபெமினென்சா' என்ற பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்துவ சகோதரி ஒருவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தினை, பிரபல இஸ்லாமிய மாத இதழ் (பார்க்க – விடியல் வெள்ளி ஜீன் 2007 இதழ் பக்கம் 8 மற்றும் 9) வெளியிட்டு இருந்தது.
'முஸ்லிம் பெண்களுக்கு ஒரு கிறிஸ்துவ சகோதரியின் எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு அந்த கட்டுரை இருந்தது. அதனின் சாராம்சம் இதோ.
.அமெரிக்கர்களின் திரைப்படமும், இசையும் நடனமும் பாடலும் தீமைகளை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. முஸ்லிம் பெண்களை மனோ இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடைமுறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான். மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதை அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று உங்களை நம்பவைக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது. சகோதரிகளே.. ஏமாந்து விடாதீர்கள்.. உங்களை நாசமாக்க அவர்களுக்கு (மேற்கத்தியர்களுக்கு) வாய்ப்பை கொடுக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்ததை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள் என்று அந்த சகோதரி, அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இந்த எச்சரிக்கையானது, புதுமைகளை கண்டு புது யுகம் படைக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல.. அனாச்சார சீரழிவால் நாள்தோறும் புதைந்துக்கொண்டு இருக்கும் பல நாட்டில் உள்ள நம்முடைய சகோதரிகள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக தான் அமையும் என்ற நம்பிக்கையுடன்..! வாழ்க்கை முன்னேற்றமும் மற்றும் ஆடம்பர வசதியும் தேவை தான் ஆனால் அதுவே வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தால்..
வருங்காலங்கள் என்ன செய்ய போகிறது..? 1992 ம் வருடத்தில், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான தாஸிகிஸ்தான் (Tajiskistan) பகுதியில் துவங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு போரில் புதைக்கப்பட்ட பல வெடிப்பொருட்கள் தற்போது வெடித்து சிதறுகின்றன. சமீபத்தில் அந்த பகுதியினை சார்ந்த 'சலீம் ஷாய்முதிநாவ் (Salim Saimuddinov) என்ற சிறுவன் தன்னுடைய அண்ணனுடன் மலைப்பிரதேசத்திற்கு சென்று அடுப்பு எரிக்க விறகு எடுக்க சென்று இருக்கின்றான். (அங்கு துவங்கப்பட்ட போரால் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டு உள்ளது என்பது குறிப்படத்தக்கது). அங்கு அவனது காலடியில் பந்து போன்ற ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. அதனை அவன் விளையாட்டுக்காக உதைத்து இருக்கின்றான். தீடிரென்று வெடித்து அந்த சிறுவனின் கால் மற்றும் முகங்கள் பாதிக்கப்பட்டது. அதனை பற்றி அங்குள்ளவர்கள் குறிப்பிடுகையில் இந்த வகையான வெடிப்பொருட்கள் கிளாஸ்டர் பாம் (Cluster Bombs – ShOAB-0.5) என்று அழைக்கப்படுகிறது. இது பயங்கரமான சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள். இது போல் இன்னும் பல வகையான வெடிப்பொருள்கள் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் இத்தகைய வெடிப்பொருட்களானது, செசன்யா உகாண்டா கியூபா, சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இங்குள்ள சிறார்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள போகிறார்களோ..!
தற்போது அமெரிக்காவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் உள்ள சின்னஞ்சிறு மலர்கள் பிறக்கும் போதே பல இன்னல்களுக்கு ஆளாகி தான் பிறக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் ஏதொவொரு வகையில் ஊனமாக தான் பிறக்க செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அந்த அந்த நாடுகளில் பயன்படுத்த படும் இது போல் உள்ள இராசயன வெடிப்பொருட்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம்.
தொட்டிலில் உறங்கும் குழந்தைகளின் நினைவுகள் இரத்தச்சுவடுகளோ..!..? தாமரை மலர் போன்ற கைகளை காணும் போது இரத்தக்கறை தான் மிஞ்சம் என்ற உணர்வுடன் பல(ர்) பிஞ்சுகள்.. பல நாடுகளில்..குழந்தையின் அழுகுரல்.. பசியா..!.. தூக்கமா..? பிறருக்கு தெரியாத பாஷைகள். தாய்க்கு மட்டும் தெரியும்.. ஆனால் கண் விழிக்கும் போது அந்த தாயினை பார்க்க முடிய வில்லை. பாசம் அறிந்த தாயினை துக்கமாக்கிய துரோகிகளால் கரைந்த கண்ணீர்த்துளிகள் ஏராளம்.
துப்பாக்கி துணையுடன் மொட்டுகளை சிறு பருவத்தில் பிய்த்தெறிய கல் நெஞ்சங்கொண்ட கயவர்களுக்கு என்ன துணிச்சல்..சிறு மலர்களை சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து தான் போய் விட்டது என்ற ஆச்சரியங்கள் ஒவ்வொரு நாளும்..?..!
ஏக இறைவன் இந்த உலகத்தினை மிகவும் அழகாக படைத்து இருக்கிறான். அதில் எத்தனையோ இயற்கையான வித்தைகள் இருக்கின்றன். ஆனால் அந்த வித்தைகளை அழிக்கக்கூடிய அளவில் தற்போது ஆதிக்கசக்திகளானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் மற்றும் இடங்களில் குண்டுகளை பொழிந்து அங்கு மாசுக்களை உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பல நாடுகளில் மாசுக்கள் அதிகமாக படிந்து வருகின்றன என்றால் மிகையாகாது. அந்தந்த நாடுகளில் உள்ள மாசுகட்டுப்பாடு அமைப்பானது பல போராட்டங்களையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் மக்களின் மத்தியில் செய்து வருகிறது.
வானங்களிலுள்ளவையும், இன்னும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்கு கேட்பான். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பான். அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 2: 284
No comments:
Post a Comment