* எனில், ஜிஹாதைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? எனது பார்வையில் செப்டம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜிஹாத் அல்ல. ஆனால், இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் ஃபலஸ்தீனிலும் ஏகாதிபத்திய ஆக்ரமிப்புகளை எதிர்த்துத் தோற்கடிப்பதற்காக நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். * செப். 11க்குப் பிறகு, மேற்குலகு இயல்பான அடிப்படைக் காரணம் இன்றி இஸ்லாமை எதிரியாகக் கருதுவதைக் குறித்தும் மேற்கத்திய நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைக் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? அவர்களுக்கு இயைந்த, அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கொள்கையே இஸ்லாமாக இருக்க வேண்டும் மேற்கத்தியர் விரும்புகின்றனர். * இஸ்லாத்தைக் குறித்த அறிவின்மையா இதற்குக் காரணம்? இல்லை, இஸ்லாம் எளிதில் பரவி விடும் என்ற பீதியே அதற்குக் காரணம். குற்றங்கள் அதிகரித்த வேளையில், காவல்துறையினை உபயோகித்து அமெரிக்கா சில மாநிலங்களில் மதுவினைத் தடை செய்ய முயன்றது. அம்முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் எவ்வித நிர்பந்தமோ முயற்சியோ இன்றிச் சுயமாக மதுவை விலக்குகின்றனர். மனிதச் சட்டங்களால் கட்டுப் படுத்த முடியாத மக்களை இஸ்லாம் கட்டுப் படுத்தி விடுவதால், "பயப்படவேண்டிய ஒரு சக்தி இஸ்லாத்தில் உண்டு" என்று புரிந்து கொண்டு அவர்கள் அச்சப் படுகின்றனர். * இஸ்லாத்தைக் குறித்துத் தவறான பலப் புரிந்துக் கொள்ளல்கள் மேற்கில் உண்டு - முக்கியமாக பெண்களின் விஷயத்தில். அதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நான் அறிந்துள்ள முஸ்லிம் பெண் சக்தியுடையவள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் அவள், அவளுடைய இலட்சியத்தை நிறைவேற்றுகின்றாள். அவள், மனதில் பிரிவினைச் சிந்தனை ஊட்டப்பட்டவளல்ல. முஸ்லிம் பெண்களுக்கிடையிலான சகோதரத்துவம் மேற்குலகின் வயிற்றைக் கலக்க வைக்கிறது என்பதையும் நாம் அறிந்துக் கொள்ள வேன்டும். * வளர்ந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் பெயர் கொண்ட இஸ்லாத்தை விமர்சிக்கும் பங்களாதேஷ் பெண்மணி தஸ்லீமா நஸ்ரின், ஸோமாலியா பெண்மணி அயான் ஹர்ஸி அலி, அமெரிக்கப் பெண்மணி ஆமினா வதூத் போன்றவர்களை நீங்கள் அறிவீர்களா?. அவர்களைப் பற்றிய உங்களது கருத்து என்ன? அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. அவர்கள் அதிகமாகவும் சம்பந்தமில்லாத வேறு சில விஷயங்களைக் குறித்துமே எப்பொழுதும் பேசுகின்றனர். இஸ்லாம் எவரையும் கட்டாயப் படுத்துவதில்லையே?, அவர்களுக்கு இஸ்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க மார்க்கமாக இல்லையெனில், அதனை விட்டு அவர்கள் விரும்பியதை ஏற்றுக் கொள்ளலாமே?. அவர்கள் இப்பொழுதும் ஏன் முஸ்லிம்கள் என்ற பெயரில் தொடர வேண்டும்? * துருக்கி, துனூஷியா போன்ற முஸ்லிம் நாடுகளில் பர்தாவிற்கு எதிராக அறிவிக்கப்பட்டப் போரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? துருக்கி பல்கலைகழகத்தில் பர்தாவைக் குறித்துப் பேசுவதற்கு அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, ஒரு மாதம் முன்னர் நான் அங்குச் சென்றிருந்தேன். பர்தா அணிந்து சென்றிருந்த என்னை, பர்தாவை நீக்காவிட்டால் உள்ளே விடமாட்டேன் எனக் கூறி ஒருவர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நான் அவரிடம், "உங்களின் இச்செயலைக் குறித்து ஒருநாள் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூற வேண்டிய நிலை வரும் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?. நீங்கள் பர்தாவை அகற்றக் கோருவது, உங்களின் உடன்பிறந்த சகோதரியிடமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் நிலைபாடு என்னவாக இருக்கும்?" எனக் கேட்டேன். அவர் என்னிடம் மன்னிப்பு கோரிக் கொன்டு, "நான் எனக்கிடப்பட்டப் பணியினை மட்டுமே செய்கின்றேன்" என்று கூறினார். "இரத்த உறவிலுள்ளவர்களைப் பாதுகாக்க வேன்டிய கடமையுள்ள ஒருவருக்கு இவ்விதம் பதில் கூற இயலாது" என நான் அவரிடம் கூறினேன். பர்தா அணிந்துக் கொண்டே அப்பல்கலைகழகத்தில் நான் உரையாற்றினேன். உரையின் நடுவே, "துருக்கியின் தெற்குப் பகுதியில் சென்று நான் மது அருந்தவோ அல்லது எனது உடையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ அகற்றினால் என்னை எவரும் தடுக்கமாட்டார்கள் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். இங்கு பர்தா அணிவதற்குத் தடை கூறும் இராணுவத்தினர், தங்களின் பெண் மக்கள் தெற்குப் பாகத்தில் சென்று மேற்கூறிய கேவலமான செயல்களைச் செய்வதை அனுமதிப்பார்களா?" எனக் கேட்டேன். இதனைக் கேட்ட சபை கோபாவேசமானது. அதற்கான காரணம், துருக்கியர்கள் அவர்களின் பெண்களையும் பெண் குழந்தைகளையும் குறித்து ஏதாவது விமர்சித்தால் அதனைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதே. * பர்தாவை விலக்கக் கோரிப் போராடும் சில முஸ்லிம் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட என்னைப் போன்றவர்கள் பர்தாவோடு எடுக்கும் நிலைப்பாட்டை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்பதல்லாமல் அவர்களுக்குத் தனியாகக் கூறுவதற்கு விஷயம் ஏதும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் செயல்பட்டுக் கொள்ளுங்கள்; இஸ்லாத்திற்காக நாங்கள் நினைப்பது போன்று செயல்பட எங்களை விட்டுவிடுங்கள் என்பதே அவர்களிடம் நான் கூற விரும்புவதாகும். * மேற்குலகில் இஸ்லாத்தின் எதிர்காலத்தைக் குறித்து உங்களின் கருத்தென்ன? எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். இன்று மக்கள் கடைப்பிடித்து வரும் குருட்டுத்தனமான வாழ்க்கையும் மோசமான பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் உண்மையைத் தேடுவதற்கு ஆரம்பித்திருக்கின்றனர்.. இக்காரணத்தாலேயே அடுத்த 100 ஆண்டுகளுக்குள் மேற்கத்திய வளர்ந்த நாடுகளிலெல்லாம் இஸ்லாம் அதிகாரம் செலுத்தும் என நான் கூறுகிறேன். மேற்குலகில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இஸ்லாத்தில் காட்டும் உறுதியும் அதற்காகப் போராடும் சக்தியும் அபாரமானதாகும். குத்ஸின் விடுதலைக்காக நம்மைத் தலைமையேற்று செலுத்தும் ஒரு ஸலாஹுத்தீன் அய்யூபி அங்கு உருவாகுவார் என நாம் எதிர்பார்ப்போம். (நிறைவுற்றது) |
Saturday, February 28, 2009
கஸ்ஸா - உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்! - பகுதி 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment