அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 27, 2009

இந்தியாவும் பலதாரமணமும்

ஒரு துர்பிரச்சாரம்

மேலை நாட்டினர் செய்யும் பிரச்சாரத்தின் எதிரொலியாக கீழை நாட்டின் படித்தவர்கள் எனப்படுவோர் தங்களின் மேற்கத்திய குருமார்களின் ஜால்ராக்களாக இஸ்லாத்தின் பலதாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.குறிப்பாக,இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் சிலர் தங்களைத் தாங்களே "முற்போக்கு வாதிகள்" என்றும் "அறிவுஜீவிகள்"என்றும் கூறிக்கொள்கொள்வோர் இக்கொள்கை பெண் இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் கொடுமை என்றும் சமூகத் தீமை என்றும் சாடுகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்வது சமூகரீதியில் பலன் தரத்தக்கதா இல்லை தீமை விளைவிப்பதா?என்பதைப் பின்னால் விரிவாக விவாதிப்போம். ஆனால் பலதாரமணத்திற்க்கு அனுமதி அளிப்பதையும்,அதனை நடைமுறையில் செயல்படுத்தி வருவதையும் ஒப்பு நோக்கினால் பண்டய கால இந்து சமூகத்தில் மட்டு மல்ல; இன்றைய இந்து சமூகத்திலும் பலதாரமணம் முஸ்லிம்களைவிட அதிகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.இந்நிலையில் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகளை மணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள் என்பது சிலரின் அரசியல் பிரச்சாரத் தந்திரமே தவிர உண்மை ஏதுமில்லை.

திசை திருப்பும் முயற்சி

பிரச்சனை என்னவென்றால்,முஸ்லிம்கள் சில நிபந்தனைகளுடன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரை மணம் முடித்துக் கொள்ளலாம் என அவர்களின் மார்க்கம் அனுமதி தந்திருக்கிறது.சிலர் பொதுச் சட்டம் என்ற பெயரில் அந்த உரிமையை பறித்திட முனைவதை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.பிரச்சனையைத் திசை திருப்பிவிட சிலர் முஸ்லிம்கள் கணக்கின்றி குழந்தைகளைப்பெற பல பெண்களைத் திருமணம் செய்கின்றனர் எனக் கூக்குரலிடுகின்றனர்.ஆனால் நடை முறையில் பார்த்தால் விஷயம் நேர்மாறாக இருப்பதைக் காணலாம். எனவே,இங்கு நாம் முந்தைய ஹிந்து சட்டங்களிலிருந்தும் முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்தும் மேற்கோள்கள் காட்டுவதுடன் நவீன இந்தியாவில் பலதாரமணம் சம்பந்தமாக ஆய்வுகள் காட்டும் புள்ளிவிபரங்களையும் சமர்ப்பிக்க முயல்கிறோம்.அதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் எந்தச் சமுதாயத்தில் அதிகம் என்பது வெளிப்படுவதுடன் முற்போக்கு(?)என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோரின் பொய் முகமூடியும் கிழிந்து விடும்.

பண்டைய இந்து சமுதாயத்தில் டாக்டர் அ.ச.அல்டேகர் என்பவர் The position of women in Hindu civilization என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
it is true that Monogamay normally prevailed in Hindu society..The Vedic gods also are monogamous in paractice however polygamy often prevailed in the rich and ruling sections of socity.
ஒரு தார மணம் என்பது ஹிந்து சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது.வேதம் கூறும் பல கடவுள்களும் ஒரு தாரத்தினை உடையவர்களாக இருப்பினும் நடைமுறையில் பலதார மணம் என்பது பொருளாதாரத்தில் மேலோங்கி நின்றவர்களிடமும் ஆளும் வர்க்கத்தினர்களிடமும் அதிகம் இருந்தது. மேலும்,இந்து புராணங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் புரிந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைக்கின்றன என்று சில ஆதாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
1.அரசு பதவிக்காக முடிசூடும் வைபவத்தின் போது அரசரின் அருகில் குறைந்தது நான்கு மனைவிகளாவது இருப்பது ஏற்புடைய தகுதியாகக் கருதப்பட்டது.

2.பிதர் மனுவிற்கு(FATHER MANU) பத்து மனைவியர்கள் இருந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
3..அயிடேரியா பிராமன்Aittaria Brahmana) நாட்டு மன்னன் ஹ்ரேஜ் சந்திராவிற்கு 100 மனைவியர்கள் இருந்தனர்.
4.இந்து மக்களால் வணங்கப்படும் அவதார புருஷர் ஸ்ரீராமரின் தந்தை தசரத மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.சமீபத்தில் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இராமயன நிகழ்ச்சியிலும் இதனைக் காட்டப்பட்டது.
பெண்களே விரும்பியது
முடிவாக ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் புரிவது அக்காலத்தில் முற்றிலும் வழக்கமாக இருந்ததை சமஸ்கிருதமே மேற்கோள்களுடன் ஆசிரியர் அல்டேகர் விவரித்துள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகிறார்.அக்காலத்தில் பெண்கள் தங்களின் கணவனை மேலும் பல பெண்களை மணம் புரியும்படி கோருவர்.ஏன் என்றால்,அக்காலத்தில் திருமணம் என்பதின் நோக்கம் கணவனுக்கு உறுதுணையாக அவனுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதுதான்.எனவே தனியாக இருந்து சிரமப்படுவதை விட இன்னும் சிலர் இருந்தால் தனக்கு உதவியாக இருக்குமே என எண்ணியே அப்பெண்கள் பலதர மணத்தினை விரும்பினார்..
குழந்தைக்காக மறுமணம்
அதே ஆசிரியர் காமசாஸ்திரத்தின் மேற்கோள்களுடன் மேலும் எழுதுகிறார். இந்து மதத்தில் திருமணத்தின் மூலம் ஆண்குழந்தையினைப் பெறுவது நிபந்தனையற்ற அவசியமாகக் கருதப்பட்டது. தன் மனைவி மலடியாக இருந்தால் குழந்தைக்காக மறுமணம் புரிவது ஆணுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.இன்னும் கூறப்போனால் மலடியான பெண் தன் கணவனை வேறோரு மணம் புரிய வற்புறுத்தவேண்டும் எனவும் சில நூல்கள் எழுதியுள்ளன.

No comments: