மகனை பதவி விலக சொல்வாரா ராமதாஸ்?
டாக்டர் ராமதாஸ் அவர்கள் மீது நமக்கு பல விஷயங்களில் மரியாதை உண்டு. அதே நேரம் அவரது அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு எப்போதுமே மாறுபட்ட கருத்து உண்டு. அவரோடு அரசியல் களத்தில் இணைந்து செயல்பட முடியாததற்கு இது ஒரு முக்கிய காரண மாகும்.
சமூக நீதி, மது, ஆபாச எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை அவர் எந்த அணியில் இருந்தாலும் நாம் ஆதரிப் போம். அதேநேரம், அவரது தான்தோன்றித் தனமான சில கருத்துக்களை நாம் எதிர்த்து வருகிறோம்.
சமீபத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒன்றை வழக்கம்போல பொறுப்பற்றத்த னமாக கூறியிருக்கிறார். இலங்கையிலிருந்து 2 ஆயிரம் முஸ்லிம்கள் பாகிஸ் தான் சென்று தமிழர்களை ஒழிப்பதற்காக ஆயுதப்பயிற்சி எடுக்கிறார்கள் என ராமதாஸ் பேசியுள்ளார்.
புலிகளின் இன பயங்கரவாதத்திற்கு தமிழர்கள், தலித்துகள், முஸ்லிம்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப் படுபவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர் கள் மீது கோபம் கொள்வது இயல்பானது, நியாயமானது.
வன்னியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிராமணர்களுக்கு எதிராக அவர்கள் கோபம் எப்படி இயல்பானதோ நியாய மானதோ அதுபோலத்தான். இன்னும் சொல்வதெனில் அதைவிட ஒருபடி மேலானதுதான்.
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டாயிரம் முஸ்லிம்கள் புறப்பட்டிருக் கிறார்கள் என பேசியிருக்கிறார். ஒருவேளை அந்த செய்தியை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக புறப்படவில்லை, புலிகளுக்கு எதிராகத்தான் புறப்பட்டிருக் கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
காரணம், அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என இலங்கை முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம்களும் ஒருசேர எதிர்த்து வருகின்றனர்.
இந்த உண்மை டாக்டர் ராமதாஸ் போன்ற அரைகுறை அரசியல்வாதி களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதற்காக ஆதாரமற்று பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
தனது மக்கள் தொலைக்காட்சி உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் ரேட்டிங்கில் முதலிடம் பெறவேண்டு மென்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவது நல்லதல்ல.
புலிகளுக்கு வந்திருக்கும் ஆபத்தை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் வந்த ஆபத்தாக சித்தரிக்கும் போக்கும் நல்லதல்ல. உண்மையில் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அல்லது ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறும் மத்திய அரசை கண்டித்து, மத்திய மந்திரி பதவியிலிருந்து தனது மகன் அன்புமணி ராஜினாமா செய்ய முடிவெடுக்க வேண்டும்.
அப்போதுதான் டாக்டர் ராமதாஸ் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார் என்பதாக புரிந்து கொள்கின்றோம்.
பழ.நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் அரசியல் லாபங்களை கருத்தில் கொள்ளாமல் ஈழ விவகாரத்தில் செயல்படுகிறார்கள் என்பது பலரின் கருத்து. ஆனால் டாக்டர் ராமதாஸ் மீது இதே கருத்து யாருக்கும் ஏற்படவில்லை. அவர் நடிக்கிறார் என்பது எல்லோருக் கும் நன்றாகவே புரிகிறது. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் நிதானமாக பேசுவது நல்லது, தான்தோன்றித்தனமாக பேசுவது அவருக்கு நல்லதல்ல என்பதை மட்டும் தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்.
No comments:
Post a Comment