தடை வந்த பின்னனி
இந்து சமுதாயத்தில் பலதார மணம் என்பது பல்லாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.அச்சமுதாயத்தில் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் போலித்தனமாக மேல்நாட்டு வாழ்க்கை முறையினைப் பின்பற்றி இந்நாட்டிலும் ஒருதார மண முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
1955ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட HINDU MARRIAGE ACT இந்து திருமணச்சட்டம் பலதாரமணத்தினைத் தடை செய்தது.இச் சட்டப்படி இந்து மதத்தினைச் சேர்ந்த ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் செய்யும் பொழுது இருவரில் யாருக்கும் சட்டப்பூர்வமான மற்றொரு துணை உயிருடன் இருக்ககூடாது.அவ்விதம் இருந்தால் இரண்டாம் திருமணம் செல்லாததாக (void) கருதப்படுவதுடன் அப்படிச் செய்பவர்கள் தண்டனைக் குரிய குற்றம் செய்தவர்களாவார்கள்.MODERN HINDU LAW -P.96
No comments:
Post a Comment