பெங்களுர்: கால்பந்து ஒன்றை திருடினான் என்ற குற்றச்சாட்டிற்க்காக விசாரணையின்றி மாணவன் ஒருவன் 6ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டு கிடக்கிறான்.அவனை வெளியே கொண்டுவர மனித உரிமை கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் அக்ரம் பாஷா(12) அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த ம் ஆண்டு பள்ளியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்து கால்பந்து ஒன்று காணமல் போனது. இதையொட்டி அக்ரம் பாஷா மீது பள்ளி நிர்வாகத்தால் தும்கூரில் உள்ள திலக்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசாரால் அக்ரம் கைது செய்யப்பட்டு தும்கூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். அவனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை அவர்களுக்கென்று உள்ள சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் அக்ரம் விஷயத்தில் அவனை நேராக பெங்களூர் கொண்டுவந்து பரப்பன அக்ரகாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.
6ஆண்டுகள் சிறைவாசம்
அதன் பிறகு அவன் மீதான விசாரணை கோர்ட்டுக்கு வரவே இல்லை. இப்படி எவ்வித விசா௦ரணையும் இல்லாமல் அக்ரம் பாஷா ஆண்டுகளாக சிறைப்பறவையாக இருந்து வருகிறான். 12வயதில் சிறைக்குத் தள்ளப்பட்ட அக்ரம் பாஷாவுக்கு தற்ப்போது 18வயது ஆகிறது. அவனது வழக்கை ஏற்று நடத்த யாருமே முன்வரவில்லை.
இந்நிலையில் அக்ரம் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதன் பிறகு இவ்வழக்கு இளம் குற்றவாளிகளுக்கான நீதிமன்ற வாரியத்தின் பரீசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த வாரியம் அக்ரமை ரூ 3ஆயிரத்துக்கு ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. என்றாலும் அவனால் விடுதலை ஆகமுடியவில்லை. காரணம் அவன் மீதான வழக்கு விசாரணை விரைவில்(6ஆண்டுகளுக்குப்பின்) தொடங்க இருக்கிறது.
மனித உரிமை கமிஷன்
எந்த விசாரணையும் இல்லாமல் சிறைவாசகம் அனுபவித்து வரும் அக்ரம் பாஷாவுக்கு உதவ 'சிக்ரம்' என்ற சமூக சேவை அமைப்பும்,கர்நாடக மாநில மனித உரிமை கமிஷனும் முன்வந்துள்ளன. அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் வகையில் அவனது வழக்கை ஏற்று நடத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கவே ஆண்டுகள் என்றால்,வழக்கு முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள்
No comments:
Post a Comment