அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, November 25, 2009

லிபரன் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது - த.மு.மு.க தலைவர்

லிபரன் அறிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவருமான ஜவாகிருல்லா. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது , முன்பே தெரிந்ததுதான் என்றாலும் வரவேற்கத்தகுந்தது" என்று கூறியுள்ளார்.


பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து 17 வருடங்கள் கழிந்த நிலையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள லிபரன் விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் "நீதிமன்றங்களால் நிரந்தர தீர்வு காணமுடியாத இந்த பிரச்னைக்கு ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா?" என்ற கேள்விக்கு பதிலளித்த ஜவாகிருல்லா, "இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப் பட்டு அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

No comments: