பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment