நாம் செழித்து உள்ளத்
தொகுதிகளைப்;
பகுதி வைத்து
நம் சேர்க்கையைப்
பங்குவைத்துப்
பந்திப் படைக்கும்
தேர்தல் களம்!
ஒன்றுப்பட்டு
விரல் நீட்டி;
மைப் பூசிய விரலாலே
எதிரிகளின் முகத்திற்குக்
கரிப்பூசி நம் முகம் சிரிக்க
வாய்ப்புகள் உண்டோ;
நன்மைச் செய்யும்
நன் மக்கள்;
ஆளுக்கொருத் திசையில்
ஆதரவிற்குக்
குரல் கொடுக்கலாமா;
ஒன்றுப்படும் வாய்ப்பை
மூடி நிற்கலாமா;
ஒன்றுப்பட்டு
ஒருவருக்காவது
விதைத் தூவுங்கள்;
வருங்காலத்
தலைமுறைகளுக்கு
வழித்தாருங்கள்!
துருவி எடுக்கும்
குறைகள்;
ஒருபோதும் நிறையாகாது;
ஒட்டியிருக்கும்
காழ்ப்புணர்ச்சியைக்
கழட்டிவிடும் நேரம்;
வென்றுக்காட்ட
ஒன்றாய் இருந்துக்
குரல் கொடுக்க
இது தருணம்!
No comments:
Post a Comment