அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, June 25, 2011

தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி ஒரு பார்வை..


டகங்கள் பின்பற்றும் அரசியல் மற்றும்அவை வாசகர்களிடையே ஏற்படுத்தும்அரசியல் தாக்கம்விளைவு பற்றிபொதுவாகப் பேசப்படுகிறதுஎனினும்அவற்றைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகஅவை செய்துவரக்கூடிய அரசியல்செயல்பாட்டை தோலுரித்துக்காட்டுவது மிகவும் அவசியம்.
தமிழ் நாளிதழ் உலகில் பெரியஅளவுக்குவிற்பனையாகி பரவலானவாசகர்களைக்கொண்டிருக்கக்கூடியவை தினத்தந்தி,தினமலர்தினகரன்தினமணிஉள்ளிட்டவை.


இதில் நடுநிலை நாளேடு எனப்படும்தினமணி வெகு காலமாக பார்ப்பனிய சிந்தனையை மையப்படுத்திசெயல்படும் நாளிதழ் என்ற விமர்சனம் உண்டுஎனினும் உலகமய காலமாற்றத்தில் தினமணி விற்பனையில் சுருங்கிஅது இன்று தள்ளாடித்தளர் நடைபோட்டு வருகிறதுஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்கும்தினமணி ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள்படித்த மேட்டுக்குடியினர்நாளிதழ் என்ற அதன் பழைய அடையாளத்தை அநேகமாக இழந்துவிட்டது என்று சொல்லலாம்எனவே அந்த நாளிதழின் மூலம்நிகழ்த்தப்படும் அரசியல் செயற்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்கு உட்பட்டதுஎன்பதைச் சொல்ல வேண்டும்.

தினகரன் கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம்காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள்தெளிவாக அறிவர்அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்பஅரசியல் சதிராட்டத்தில்தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும்பணியை தினகரன் செய்து வருகிறது. (.ம்கலைஞரை பிராண்ட்டாகபயன்படுத்துவதுஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்துஅழகிரி,கனிமொழியை கழற்றி விடுவதுதினகரனைக் கூர்ந்து நோக்குவோர்இதை அறியமுடியும்ஆனால் இது மட்டுமே தினகரன் செய்யும் வேலைஎன்று நினைத்து விடக் கூடாதுஇதனிலும் முக்கியமாக தினகரன் நவீனதாராளமயக் கொள்கையை மிக வலுவாக ஆதரித்துஇடதுசாரிமுற்போக்கு சக்திகளை மிக இழிவாகக் காட்டி கீழே தள்ளும் வேலையைநன்கு திட்டமிட்ட முறையில் மிகமிக கவனமாகச் செய்து வருகிறது.ஒவ்வொரு நாள் தினகரனையும் எடுத்துவைத்துப் பேசினால் இதைதிட்டவட்டமாக நிரூபிக்க முடியும்இதுதான் நிரந்தர ஆபத்தானதுஇதன்வாசகப் பரப்பு தமிழகத்தில் தினத்தந்திதினமலருக்கு அடுத்துமூன்றாமிடத்தில் தான் இருக்கிறது. (அதாவது விற்பனை அடிப்படையில்பிரதிகள் சற்று முன்பின் கூடுதலாக இருந்தாலும் வாசகர் வாசிப்பில்மேற்கண்ட இரண்டையும் அடுத்தது தான் தினகரன்.) எனவேஒப்பீட்டளவில் தினகரனும் வரம்புக்கு உட்பட்டது தான்.

இப்போது தினமலர்இது தினமணிதினகரனை விட ஆபத்தானநஞ்சேற்றும் காரியத்தைச் செய்து வருகிறது என்பதை பொதுவானமுற்போக்கு நோக்கர்கள் அறிவர்தினகரன் செய்யத் தயங்கும் ஒருவிசயத்தை தினமலர் கூசாமல் செய்யும்அதுதான் மதவெறிநஞ்சேற்றுவதுபார்பனியத்தின் அரசியல்சமூககலாசாரக் கூறுகளைஅதன் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறதுஜனநாயகத்தின் இடத்தில்தனிமனிதத்துவத்தை நிறுத்துவதுஆன்மிகம் என்ற பெயரில்மதப்பழமையைத் திணிப்பதுஉலகமகா யோக்கியனைப் போல் தனக்குமுன்னால் இருக்கும் எல்லா விசயங்களையும் மிக மிகக் கீழ்த்தரமாகத்தாக்குவதுகருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது என்பதை விட அறிவுரைசொல்லும் தொனியில் வெளிப்படுத்துவது என அதன் ஒவ்வொருஅம்சமும்பாங்கும் வர்ணாஸ்ரமத்தின் நவீன வெளிப்பாடு தான்.

எனவே இடதுசாரிதிராவிட இயக்கங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட எதிர்க் கருத்தாளன் தினமலர் என்று சொல்ல முடியும்.கண்ணுக்குத் தெரிந்த எதிரி என்பதால் இதை நாம் அறிந்துவெளிப்படையாக விமர்சிக்க முடிகிறதுஅதேசமயம் அரசியலை புரிந்துகொண்ட அல்லது அறிந்து கொண்ட வாசகர் பரப்பு மிக மிகக் குறைவுஎனும்போது அதற்கு அப்பால் அது சென்றடையும் வாசகர்கள்(பெரும்பாலும் கீழ் மத்திய தர வர்க்கத்தார்எத்தகைய தாக்கத்துக்குஇரையாக்கப்படுகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இப்போது நாம் பேசப் போவது தினத்தந்தி பற்றிதமிழ் நாட்டில் நாளிதழ்வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.தினத்தந்தி படித்துத் தான் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று திரைப்படநடிகைகள் சொல்வதைப் பலர் படித்திருப்போம்பொதுவாக தினத்தந்தியைஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டுஆட்சியாளர்களைஆதரித்தால் அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கானரூபாய் வருமானத்தைப் பெறலாம் என்பது தான் இதற்கு பின்னணிஎன்பர்இந்த இதழ் நிகழ்த்தும் அரசியல் மிக மிக நுட்பமானது.

ஆளும்கட்சி பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும் முன்பெல்லாம்இவர்கள் செய்வது முன்னுரிமையை மாற்றிக் கொள்வது தான்அதாவதுஆளும்கட்சி செய்திகளை முதல் பக்கத்தில் அல்லது வாசகர்களின்பார்வைக்கு எளிதில் படும் வண்ணம் இடம் பெறச் செய்துஎதிர்க்கட்சிகள்செய்திகளை ஏதோ ஒரு மூலையில் போட்டிருப்பார்கள்எதிர்க்கட்சிசெய்திகளை பின்னுக்குத் தள்ளுவார்களே அல்லாது போடாமல்விட்டுவிடமாட்டார்கள்ஆனால் தற்போது தினத்தந்தியின் இந்தசெயல்பாட்டிலும் வேறுபாடு தெரிகிறது.

எந்தச் செய்தி எந்தப் பக்கத்தில் வர வேண்டும்எந்தப் படம் இடம் பெறவேண்டும்எது வரக்கூடாது என்பது உள்பட தமிழக முதல்வரின்கடைக்கண் பார்வைக்கேற்பத் தான் தினத்தந்தி வெளிவருகிறதுஇதுபோகிற போக்கில் சேற்றை வாரிவீசும் குற்றச்சாட்டு அல்லதமிழகத்தின்சற்றேரக்குறைய ஒரு கோடி வாசகர்களை - அதுவும் அடித்தட்டுஉழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தமிழர்களைச் - சென்றடையும் நாளிதழ்என்பதால் கூர்ந்து கவனித்துதொடர்ந்து படித்து வருவதால் இந்தமதிப்பீட்டை முன்வைக்கிறேன்.

அதற்கு ஒரேயொரு நிரூபணம் இன்றைய (நவம்பர் 27) தினத்தந்திநாளிதழ்நீராராடியா தொலைபேசி உரையாடல் பதிவு பற்றி அதிமுகதலைவி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்துள்ளார்அது திமுகவைஅப்பட்டமாக அம்பலப்படுத்துவதாக உள்ளதுஇந்த செய்தி தினத்தந்தியில்இடம் பெறவேயில்லைஅதாவது சற்றேரக்குறைய ஒரு கோடிப் பேரிடம்இந்த தகவல் மறைக்கப்பட்டு விட்டதுஆனால் திமுகவை யாரும் வீழ்த்தமுடியாது என்ற கருணாநிதியின் செய்தி வாசகர் கவனத்தை ஈர்க்கும்இடத்தில் உள்ளது.

திமுக எதிர்ப்புணர்வு அல்லது அதிமுக ஆதரவு உணர்வு என்றஅடிப்படையில் இதைச் சொல்லவில்லைஇங்கு வலியுறுத்திக் கூறவிரும்புவதெல்லாம்நான்கு முன்னணி நாளிதழ்களில் தினத்தந்திநிகழ்த்தும் இத்தகைய அரசியல் செயல்பாடு தான் மிகுந்த விளைவைஏற்படுத்தக்கூடியது என்பதுதான்.

ஒவ்வொரு நாள் இதழையும் எடுத்து வைத்து விலாவாரியாக விளக்கிக்கூறும் அளவுக்கு இந்த நாளிதழ்கள் அரசியல் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனஇதை அம்பலப்படுத்துவது மக்கள் அரசியலைமுன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமானதுமிகப் பெரும் கூட்டுச்செயல்பாட்டோடு இதை நடத்த வேண்டிய தேவை உள்ளது

1 comment:

Anonymous said...

Read my testimony.
For those people who are lupus sufferers and maybe reading this, I find it hard that people are still ignorant when it comes to LUPUS and have no idea what the illness is all about and still flippant about it even in the medical world.
After my daughter collapsed at home she was seen by one of the Consultants in the Lupus Unit who performed more tests and confirmed that she was negative with the Anti-RO antibodies. when I was told this, as I was slowly thinking I was losing my marbles and this was all in my head.
The Doctor prescribed a course of treatment but said that it would take about 8-9 months for the drugs to start working. I felt relieved to think that there was light at the end of the tunnel but still quite daunted by her having to cope with feeling the way. After 2months of taking the medication the symptoms seemed to get worse, She had fevers, cold sweats, chest pains, constantly nauseous and she was finding it difficult to breathe. Her Doctor thought that the difficulty breathing may have been caused by one of the anti-inflammatory drugs and stopped them straight away.

But Everything started to get easier from the point we came across Dr Itua Herbal Medicine through (www.drituaherbalcenter.com). When I first contacted Dr Itua Herbal Center through his email : drituaherbalcenter@gmail.com. He told us that the drugs they'd used had aggravated the Lupus and caused it to flare more badly. The miraculous new treatment (Herbal Medicine) was for her to start the medicine sooner which was my thoughts, which of course was helpful.
His medicine is very effective, she experienced no symptoms for the past 3year. If you/your relatives have the same problem, do not expose yourself to more danger, use a herbal remedy that is safe and effective. Contact Dr Itua directly for any type of disease.