அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 6, 2011

தமிழகம்-கேரளா இடையேயான உறவை சீர்குலைப் பவர்களுக்கு தண்டணை : உம்மன் சாண்டி!!!



திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரத்தை பயன்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவை சீர்குலைக்கும் வகையில் கலவரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் மீதான வன்முறையை கேரளாவில் சிலர் ஏவியுள்ளனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்களைக் குறி வைத்து கடும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தாக்கப்பட்டுளளன.


இதனையடுத்து, எல்லை நகரமான குமுளியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அந்த பாதை வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, 'முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நாம் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்'.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், குறிப்பாக தமிழகத்துடனான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: