அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 6, 2011

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியது எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு!!!

சென்னை : தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன்  மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான். சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். 

கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது. 


பயந்துபோன பள்ளி ஆசிரியர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஹரீஸ், ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், ஹரீஸ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.  

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ஹரீஸ் காலையில் என்னுடன் காரில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தான். நான் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், அவன் இறந்து விட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டதாக கூறி கதறி அழுத்தார். 

No comments: