கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம்,
’’தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் கட்சி சின்னம் வரைந்து விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்ற விதி முன்பே இருந்தாலும், இந்த முறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். சுவர் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு தரப்பில் புதிய வேலைகள், திட்டங்கள் அறிவிக்க கூடாது. இலவச உதவி பொருட்கள் தரக்கூடாது. அமைச்சர்கள் அரசு முறை சுற்றுப்பயணம் செல்லக்கூடாது. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அரசு வாகனம் பயன்படுத்தக்கூடாது.
தேர்தலில் பிரச்னை ஏற்பட்டாலோ, வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க அலுவலர்களுக்கு செல்போன் தரப்படும். செல்போன் டவர் கிடைக்காத இடங்களில் வயர்லெஸ் பயன்படுத்தப்படும்.
வாக்குச்சாவடி அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்க ஒரு சிடி தயாரித்துள்ளோம். இது அதிகாரிகளுக்கு தரப்படும்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 15 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வரலாம் என தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்திருந்தது. இந்த முறை இந்த ஆவணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment