அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, April 6, 2009

தாடி வைப்பது தாலிபானிஸமா? -- தமிழ்நாடு உலமா கவுன்சில் எதிர்ப்பு


மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசு உடனே தலையிட்டு மதச்சார்பின்மையின் பெயரால் மத உரிமைகளையும், பாதுகாப்பாத்திற்கு பதிலாக அதற்கு எதிராக நீதிபதிகள் செயல்படாமல் தடுக்க உரிய சட்டதிருத்ங்களைமேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உலமா கவுன்சில் வலியுறுதுவதாக அதன் செய்திகுறிப்பில்வெளியிட்டுள்ளது..



No comments: