Tuesday, October 20, 2009
கோட்சேவின் பாணியில் கோவா குண்டுவெடிப்பு!
நாதுராம் கோட்ஷே என்பவர் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றார். இஸ்மாயில் என்று பச்சை குத்தியதற்கு காரணம் காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. அதுபோன்று, அவ்வப்போது கோட்சேவின் வாரிசுகள் எங்காவது எதையாவது செய்துவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் கட்டுவதில் வல்லவர்கள். அவ்வளவு ஏன் தர்காவில் குண்டு வெடித்தாலும், மசூதியில் குண்டுவெடித்தாலும் காவல்துறை பாய்ந்து கைது செய்வது முஸ்லிம்களைத்தான். தீவீரவாதம் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு மட்டுமே குத்தகை விடப்பட்டது என்ற தோற்றம் இருந்த நிலையில், மகாராஷ்டிராவின் மாவீரன் கர்கரே போன்ற நல்ல உள்ளம் கொண்ட நடுநிலையான அதிகாரிகளால் மாலேகான்-தென்காசி போன்ற பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் கோட்ஷே வாரிசுகளின் அதாவது இந்துத்துவா பயங்கரவாதிகளின் கைவரிசை உலகுக்கு படம்பிடித்து காட்டப்பட்டது. அந்தவரிசையில்,
கோவாவில் பானாஜி எனும் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் கொடும்பாவியை எரித்து விமரிசையாக கொண்டாடுவதற்காக மக்கள் கூடும் இடத்தில் குண்டுவைத்து பெறும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்துவா வாதிகள் இருவர் ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளுடன் சென்று வெடிகுண்டை வைக்கும்போது எதிர்பாராத விதமாக, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்களே; அதுபோன்று அவ்விருவரும் அந்த வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் மாண்டுள்ளனர். இவர்களை பற்றிய விசாரணையில் அவ்விருவரும் 'சனாதன் சன்ஸ்தா' ஆசிரமத்தோடு தொடர்புடையவர்கள் என்றும், இந்த ஆசிரமம், மாலேகான் புகழ் பெண் தீவிரவாதி பிரக்யாவுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் செய்திகள் கூறுகின்றன.
இறந்துபோன அந்த தீவிரவாதிகள் திட்டப்படி, நரகாசுரன் கொடும்பாவி எரித்து கொண்டாடுவதற்காக பெரும்பாலான மக்கள் கூடும் அந்த இடத்தில், அந்த நேரத்தில் வெடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்...?
தீபாவளியை சீர்குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி..? என்று ஆரம்பித்து லோக்கல் லஸ்கர் அல் தொய்பா தொடங்கி, இன்டெர் நேஷனல் அல்-காயிதாவரை தொடர்பு படுத்தி பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டு தங்களின் கல்லாவை நிரப்பியிருக்கும். காலாவதியான பாரதீய ஜனதா கட்சிக்கும் இதன் மூலம் அரசியல் செய்ய ஒரு கருப்பொருளும் கிடைத்திருக்கும். இதற்கெல்லாம் வழிவிடாமல், நியாயமான அதிகாரிகளால் இந்த சம்பவத்தின் உண்மை நிலை வெளிவந்துள்ளது. நாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டுகிறோம். மக்களை அச்சுறுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே! ஆனால் தீவிரவாதிகள் யார் என்பதற்கு அவர்களின் செயல்பாடுகள் அளவுகோலாக இருக்கவேண்டுமேயன்றி, அவர்கள் சார்ந்த மதம், அளவுகோலாக கருதப்படக்கூடாது என்பதுதான் இந்தியாவை நேசிக்கும் எல்லோரின் விருப்பமும் ஆசையுமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment