Thursday, November 19, 2009
முஸ்லிம் லீக் கட்சி - போலீசார் மோதல் இருவர் பலி; 15 போலீசார் படுகாயம்
நவம்பர் 19,2009,00:00 IST
Important incidents and happenings in and around the world
காசர்கோடு : முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இருவர் பலியானார். கேரள மாநிலம் வடக்கு பகுதியில், காசர்கோட்டில் முஸ்லிக் லீக் மாநில தலைவர் ஹைதர் அலி சிகாப் தங்கல், பொதுச் செயலர் குஞ்ஞாலிக் குட்டி ஆகியோருக்கு, கட்சியின் மாவட்ட கமிட்டி மூலம் பலத்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி, காசர்கோடு புதிய பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்கு சில மீட்டர் தூரத்தில், ஒரு பிரிவினர் அங்கிருந்த கடைகள் மீது, திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில், அக்கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அக்கும்பல், போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காசர்கோடைச் சேர்ந்த முகமது ஷபீக் (22) என்பவர் பலியானார். கத்திக் குத்து காயங்களுடன் இருவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், முகமது அஸ்கர்(26) என்பவர் இறந்தார். இச்சம்பவத்தில், 15 போலீசார் காயமுற்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான முகமது ஷபீக், அரேபிய நாட்டில் பணியாற்றி வந்தார். திருமணத்திற்காக, இரண்டு வாரங்கள் முன் தான் ஊருக்குத் திரும்பினார். முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. காயமுற்ற போலீசார், மங்களூரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment