இஸ்ரேல் ஜெருஸலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தொடர்ந்து தனது குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறது. இந்த செயலை அமெரிக்கா கண்டித்திருந்த போதும், இஸ்ரேல் அதனைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் தனது குடியேற்றத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் மத்தியகிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியிருப்புகளை நிறுத்துவது அவசியம் என ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் வற்புறுத்தியுள்ளார்.
அதேவேளையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தனது ஜெருசலக் குடியிருப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் மத்திய கிழக்கு அமைதிக்கு ஒத்துழைப்பு வழங்க இக்குடியிருப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐநா கண்டனம் குறித்தோ, அமெரிக்க அரசின் வேண்டுகோள் குறித்தோ தாம் கவலைப்படப் போவதில்லை என இஸ்ரேலியப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் அறிவித்துள்ளார். ஜெருசலக் குடியிருப்புகள் முன்னர் அறிவித்தபடி எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
source:inneram
No comments:
Post a Comment