அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, January 14, 2010

கல்லுரியில் முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு தடையா?

இலங்கை: வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியில் குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சி நெறியைத் தொடரும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதுகுறித்த கல்லூரியில் பயின்று வரும் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் ஆரம்பத்தில் பர்தா அணிந்து நாங்கள் கல்லூரிக்கு வந்ததாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்லூரிக்கு வந்த பணிப்பாளரே முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாது எனும் தடையை அறிமுகப்படுத்தியதாக அங்கு கல்வி பயிலும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கிணங்க தற்போது கல்லூரி நிருவாகம் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை கழற்றுமாறும் காற்சட்டை அணியாது தாதிகள் அணியும் வழமையான உடையையே அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அம் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

இதுசம்பந்தமான விசயத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கல்லூரி நிருவாகத்தை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து ஓரிரு வாரங்கள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் மீண்டும் இத்தடை விதிக்கப்பட்டு அது இன்று வரையும் தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் அமைச்சர்களும் சமூக,மனித உரிமை ஆர்வலர்களும் இந்த விசயத்தில் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும், இல்லையென்றால் நாங்கள் இக்கல்வியை பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இம்மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

inneram.com

No comments: