இதுபற்றி அத்வானி குறிப்பிடுகையில், 'நீண்ட நாட்களாக விஜயசாந்தியை எனக்கு தெரியும். அவரை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டார். மாநில பாஜக தலைவர் தத்தாத்ரேயா, "விஜயசாந்தியின் வருகை, இந்த ரத யாத்திரைக்குப் புதிய பலத்தைக் கொடுத்து இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
நடிகையாக இருந்த விஜயசாந்தி, முதலில் பாஜகவில் சேர்ந்து தன் அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். பின்னர் அதில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அதன் பின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அத்வானியை நேரில் சந்தத்திலிருந்து அவர் விரைவில் பாஜகவில் சேரலாம் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment