புதுடெல்லி:உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிறையில் இருந்துக்கொண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகள் உள்பட 30 கொடிய கிரிமினல்கள் போட்டியிடுகின்றார்கள்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர், ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்த்துவா தீவிரவாதி ரமேஷ் உபாத்யாயா ஆகியோர் உ.பி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜான்பூரில் பரிய்யா தொகுதியில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஹிந்து மகாசபா சார்பாக ரமேஷ் உபாத்யாயா போட்டியிடுகிறார். சிறையில் இருந்து கொண்டே போட்டியிடும் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே. சமாஜ் வாதி கட்சிதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா ப்ரேம் பிரகாஷ் சிங் ஆகா முனாபஜ்ரங்கி ஜான்பூரில் அப்னா தள் சார்பாக போட்டியிடுகிறார். அஹ்மதாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப்ரிஜேஷ்சிங் சந்தவ்லி ப்ரகதிஷீல் தொகுதியில் போட்டியிடுகிறார். 1994-ஆம் ஆண்டு ஆஸம்கரில் 13 பேரை கொலைச்செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்தாம் ப்ரிஜேஷ். கொலை, பாலியல் வன்புணர்வு உள்பட 40 க்ரிமினல் குற்றவழக்குகளில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அலகாபாத் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆதிக் அஹ்மத் பஸ்தி சிறையில் உள்ளார். ஜிதேந்திர சிங் பப்லு ஃபைஸாபாத் சிறையில் உள்ளார். இவர் பிகாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு உ.பி.காங்.தலைவர் ரீதா பகுகுணா ஜோஷியின் வீட்டை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பப்லு. அன்று பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான பப்லு பின்னர் அக்கட்சியை விட்டு விலகி அப்னா தளில் சேர்ந்தார். பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கி பாந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ புருஷோத்தம் நரேஷ் திரிவேதி நரைனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மதுமிதா கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமன் மணி திரிபாதி அவரது மாமா ஷியாம் நாராயண் திரிவேதி ஆகியோர் சிறையில் இருந்தே போட்டியிடுபவர்களில் அடங்குவர்.
நேற்று நடந்த முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 109 பேர் க்ரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். கடந்த சட்டசபை தேர்தலை விட தற்போது 10 சதவீதம் க்ரிமினல் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment