காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் ஹேமந்த் கர்க்கரே 26/11 அன்று கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். ஹேமந்த கர்கரே கொல்லப்படுவதற்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்தோ அல்லது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரிடமிருந்தோ எந்த மிரட்டலுக்கு ஆளாக்கப்படவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார்.
இங்கே யார் மும்பை தாக்குதலை நடத்தினார்கள்? என்பதோ, அல்லது யார் கர்கரேயை கொன்றார்கள்? என்பதோ கேள்வி அல்ல, மாறாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய கர்கரே ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது தான் கேள்வி.
பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் விவகாரத்தில் ஆஜம்கரிலிருந்து பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதி பொய் வழக்கு போட்ட வழக்கை விசாரித்த கர்கரே கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். 26 ஜூலை 2008 முதல் 26 நவம்பர் 2008 வரை இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களிலும் ஆர்.எஸ்.எஸின் பங்கு உள்ளதை வெளிப்படுத்தியதற்காக கர்கரேயை கொலை செய்ய அவர்கள் முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதே போன்று ஆர்.எஸ்.எஸ் இந்திய சுதந்திர போராட்டத்தை எதிர்த்தது. அதனுடைய சித்தாந்த கொள்கையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பல முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்கள் தான் தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொலை செய்ய தூண்டியது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் நேருவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்த்தும், அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்தும் மேலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனக்கலவரம், தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கெல்லாம் முக்கிய காரணமாக ஆர்.எஸ்.எஸ் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
ஜவஹர்லால் நேரு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்யை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஒரு சமயம் டெல்லியில் அவர்கள் ஒரு கலவரத்தை ஏற்படுத்திய சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீது லத்தி சார்ஜ் தொடுத்து அவர்களை அடக்கினார்.
அதே போன்று இந்திராகாந்தியும் தனது ஆட்சிகாலத்தில் இவர்களால் ஏற்பட்ட பல பிரச்சனைகளை முறையாக கையாண்டார். இவர்கள் சட்டபுரம்பாக உருவாக்கிய பல கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினார் அதில் பனாரஸ் ஹிந்து பல்கழைக்கழகமும் அடங்கும்.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி அன்று திக்விஜய்சிங் சி.என்.என் ஐ.பி,என் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று அளித்தார். அவரை பேட்டி எடுத்த ராஜ்தீப் சர்தேசி வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் திக்விஜய்சிங் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார். இதன் மூலம் ராஜ்தீப் தான் ஒரு பார்பனிய பத்திரிக்கையாளன் என்பதையும், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்ன் அபிமானி என்பதை நிரூபித்துள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும்போது மும்பை தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் ற்கு தொடர்பு உண்டு என்று புத்தகம் ஒன்றை எழுதியதற்காக அஜீஸ் புர்னேயை குற்றவாளி என்று ஒதுக்கி அவரை நாடு கடத்தவேண்டும் என்று வெளிப்படையாக தன்னுடைய பார்பன வெறிக்கொள்கையை வெளிப்படுத்தினார்.
தொலைக்காட்சியில் திக்விஜய்சிங்கை பேட்டி எடுக்கும்போது கர்கரே தன்னுடைய நண்பர்தான் என்று ராஜ்தீப் கூறினார். மும்பை தாக்குதலுக்கு பின் ராஜ்தீபை நேரடியாக சந்தித்து தாக்குதலைப்பற்றிப் பேசும்போது வழக்கமாக குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கஸாப் தான் காரணம் என்றும் ராகேஷ் மரியா கொடுத்த விசாரணை அறிக்கையின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த ராகேஷ் மரியா என்பவர் யார்? என்று பார்த்தால் இஸ்ரேலிய உளவுப் பிரிவாம மொஸாத்தின் உழவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகப்படுபவர் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பிரதீப் கவுஸல் என்பவர் கூறும்போது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய அதன் துணை அமைப்புகளை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், அவர்களுக்கும் மொஸாத்திற்க்கும் ரகசிய தொடர்பு உண்டு என்பதையும் வெளிப்படையாக தெரிகிறது. பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் செயல்பட்டுவரும் அனைத்து ஜிஹாதிய அமைப்புகளும் மொஸாத் மற்றும் சி.ஐ.ஏ வினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தான் என்பதை நன்கு நினைவில் கொள்ளவேண்டும். சமீபத்தில் யேமன் நாட்டில் உள்ள ஒரு அமைப்பிற்க்கும் மொஸாத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
நான் ஒரு பிராமணன், மேலும் நான் ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடிய பக்தன் இருந்தும் நான் திக்விஜய்சிங்கின் கூற்றிற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். எல்லா தீவிரவாத அமைப்புகளைக்காட்டிலும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்க்குகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ் கும் மொஸாதிற்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, மொஸாத் அமைப்போ இந்தியாவின் அழிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்க
ஆனால் நான் ஒன்றை தெளிவாக கூற முடியும் அது என்னவென்றால் இந்தியாவில் வாழக்கூடிய கோடிக்கணக்கான் ஹிந்துக்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அரக்கணை இல்லாமல் ஆக்க துணையாக இருப்பார்கள் என்று பிரதீப் கவுஸல் கூறினார்.
No comments:
Post a Comment