அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

கலங்க வைக்குது "கட்டிப்பிடி' கலாசாரம்

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள், நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி', சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.


Friday, October 15, 2010

தெலுங்கானா மாநிலம் அமைந்தால்முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு:சந்திரசேகரராவ் அறிவிப்பு


ஐதராபாத்:''தனி தெலுங்கானா மாநிலம் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்இ'' எனஇ தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.இ) தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் டி.ஆர்.எஸ்.இ கட்சியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது.


அப்போது கட்சியில் இணைந்த முஸ்லிம் தலைவர்களை வரவேற்றுப் பேசிய டி.ஆர்.எஸ்.இ தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு குறித்து அரசியல் கட்சிகள் முழங்கினாலும்இ அனைத்து தட்டு முஸ்லிம் மக்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதே உண்மை. ஆந்திராவில் ஆட்சி நடத்திய எந்த ஒரு கட்சியும்இ முஸ்லிம்கள் நலத்திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டி.ஆர்.எஸ்.இ கட்சி மட்டுமே முஸ்லிம் சமுதாயம் மீது அக்கறை கொண்ட உண்மையான மதசார்பற்ற கட்சி.

இதற்குச் சான்றாகஇ தனி தெலுங்கானா அமைந்தால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். டி.ஆர்.எஸ்.இ ஆட்சி அமைக்கும் பட்சத்தில்இ முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். தவிரஇ அமைச்சரவையில் நான்கு அல்லது ஐந்து முஸ்லிகள் இடம் பெறுவர்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

திரை விலக்க மாட்டோம்....

hijab our right.jpg

உன் எச்சில்
ஊறும் இச்சைக்காக
தடைச்செய்ய நினைத்தாயோ;
எங்களைத் தடுத்திடத் துடித்தாயோ!

அடிமை ஏதுமில்லை
தனிமைப் பட்டமும் இல்லை;
உன் பசிக்கொண்ட
பார்வைக்கு வழியவந்து
ஒளிந்திருக்கிறேன்!

தடுமாறும்
தடம்மாறும் உன்
மனதிற்குத் திரைப்போட
நான் திரையிட்டுவந்தேன்!

கல்விக் கற்க
பள்ளிக்கு திறந்து வரச்செய்கிறாய்;
அறிவு செய்யும் வேலைக்கு
அங்கம் காட்டச்சொல்கிறாய்!

விபச்சாரத்திற்கு வித்திட்டு
உபச்சாரம் செய்கிறாய்;
பெண்ணடிமைக்கு மாற்று பெயரிற்று
கலாச்சாராம் என்கிறாய்!

வெத்துப் பேச்சிக்கு
விலைப்போக மாட்டோம்;
வெட்டிப் போட்டாலும்
திரைவிலக்க மாட்டோம்!

கைக்கூலி....



call.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒப்பற்ற
ஒப்பனையில்லா
உன் பாசம்!

விழி முழுதும்
நீயானதால்
தழும்பிக் கொண்டு
தண்ணீர் சிந்தும்!

கை நிறையப்
பணம் இருந்தாலும்
மனம் மட்டும் கனக்கும்;
இதயத்தின் ஓர் இடுக்கில்
இறுக்கும்!

திட்டமிடாமல் உனைத்
திட்டநினைக்கும் போது
சற்றென உதிக்கும் - உன்
கர்ப்பக் கால கலக்கம்!

எட்டி உதிக்கும்
நம் பிள்ளையை
தொட்டுப் பார்க்கச்
சொல்லி ரசிப்பாய்!

உன் பிரசவத்தை
நினைத்தாலே எழுந்து நிற்கும்
என் ரோமங்கள்;
இப்போது அதை நினைத்தாலும்
தவிடுப் பொடியாகும்
என் கோபங்கள்!

வெட்கித் தலைக்குனியும்
என் விழி இரண்டும் பூமிக்கு;
கனம் என உனை நினைத்துக்
கைக்கூலி கேட்டதிற்கு!

கர்பகாலத்தில் செய்யவேண்டியவைகள் ( தாய் சேய் நலன் )


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.


· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.


மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்

உலக மக்களுக்குமனந்திறந்து சொன்னவை
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து சொன்ன சில செய்திகள் இன்றும் மறக்க முடியாதவைகளாகும்.
1. இஸ்லாத்திற்கு நான் ஒருசுதந்திரமான சேவகன், என்னை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்,
எனது இலக்கியப் படைப்புக்கள், புத்தகங்கள் எதற்கும் பதிப்புரிமை கொடுத்துவரையருக்கவில்லை. அதனால் எவர் வேண்டுமானாலும் இலவசமாகவெளியிடலாம் அல்லது போதியளவு அச்சிட்டு விற்பனை செய்யலாம்.

2. எனது ஒளி ஒலி நாடாக்களும் அப்படித்தான், எதற்கும் பதிப்புரிமை இல்லை.எவர் வேண்டுமானாலும் அதனை நல்லதுக்கு பயன்படுத்தலாம்.

3. வாழும் காலத்தில் எந்த நாட்டுக்கு, பகுதிக்கு என்னை அழைத்தாலும் எனதுசெலவில் நான் அங்கு வந்து நிகழ்ச்சிகள் செய்வேன், விவாதங்கள்,கலந்துரையாடல்கள் என்று எந்த ஏற்பாடுகளாகட்டும் அதற்கு நான் தயார்.


4. உலகிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் மேற்கொண்டுஅங்குள்ள மாணவர்களுக்கு கருத்தறங்குகளை நடத்த எந்த நேரமும் தயாராகஇருக்கின்றேன், இஸ்லாத்தைப் படித்துவிட்டு மக்களிட்த்தில் பிரச்சாரகராக கடமையாற்றும் அனைத்து அழைப்புபணியாளர்களுக்கும் மதங்களுக்கிடையில் ஒப்பீட்டாய்வு முறையைப் படிப்பிப்பதில் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

5. பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்குத் தேவையானவழிகாட்டல்களை முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கு தெளிவுபடுத்த தயாராகஇருப்பதாக தனது அபூதாபி தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கியநேர்காணலில் பகிரங்கப்படுத்தினார்.

6. கிறிஸ்துவ போதகர்கள் தங்கள் மதத்தை பறப்பும் பிரதேங்களின் வாழும் போது மிக்க் கவனமாக இருக்கும்படியும் அவர்களின் தூண்டிலில் சிக்குண்டு மாட்டிகொள்ள வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் வேண்டிக்கொண்டார்.

கிறிஸ்வ போதகர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் போன்று நடித்தே முஸ்லிம்களை மதமாற்றிவிடும் செயல்பாட்டுடையவர்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

7. முஸ்லிம் சமூகம் அதிகமாக அல் குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டும்.

8. அல் குர்ஆனுடன் பிற மதவேத நூல்களை ஒப்பீட்டாய்வு செய்து அதனை பிறருக்குப் போதிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தை உலக மக்கள் எல்லோருக்கும் போதிப்பதற்காக பல பிற மத வேத நூல்களைத் தேடிக் கற்றுக்கொண்டது போல் பல நாட்டு மொழிகளையும் கற்றுக்கொண்டார், அவர் ஆங்காங்கே பட்டியலிட்ட சில மொழிகளை இங்கு நான் பட்டியல் படுத்தியிருக்கிறேன்.
1. குஜராத்தி,
2. ஆபிரிக்கானா,
3. ஆங்கிலம்,
4. அரபு,
5. உருது,
6. ஹிந்தி,
7. சூளு,
8. பிரான்ஸ்,
9. இந்துநெசியன்,
10. ஹீப்ரு,
11. கிரேக்,
12. ஜெர்மனி
13. பெங்காளி
14. டச்
நான் அறியா இன்னும் பல.

இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு


GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,
மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் :044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க அஹமது இப்ராஹிம் - 9841464521
அல்லது E-mail to sithiqu.mtech@gmail.com


இஸ்லாமியனாக நான்

Beard.JPG

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லோருக்கும்

எல்லாம் உண்டு

பொத்தாம் பொது

தத்துவம் சோஷியலிசம்;

ஆண்மைக்கு அறிகுறியாய்

ஆண்மீகத்திற்கு அடிப்படையாய்

கழிக்காமல் என் கன்னத்தோடு

உறவோடும் முடி வளர்த்தால்

தாலிபானிஸம்!

பாரபட்சம் கொண்டப்

பார்வையால்;

வருத்தெடுக்கும் வார்த்தையால்

நொறுக்கித்தள்ளும் எங்களை

அறுத்தெறியும் உலகம்!

மதம் கொண்டு

வதம் செய்யத் துடிக்கும்

காவிகள் சுமந்தால்

சாமியார்;

ஒருக் கன்னத்திற்கு

மாற்றுக் கன்னம் என்று

அமைதிப் போர்வைக்குள்

குர் ஆன் எரிப்புக்கு

குரல் கொடுத்த வெள்ளைக்

கொள்ளையன் சுமந்தால்

பாதிரியார்;

உரம் கொண்டு

வாளைக் கரம் கொண்ட

வகையினர் சுமந்தால்

சர்தார்;

எல்லோருக்கும் உள்ள;

எல்லோரையும் போல

நான் வளர்த்தால்;

தாடிக்கு தடித்த வார்த்தையால்

கடித்து துப்பும் மனநோயாளிகள்

தந்தப் பட்டங்கள்

தீவிரவாதி பயங்கரவாதி!

சமநிலை சறுக்கி

சமநோக்கிற்கு

சாவு மணி அடித்து;

சமதர்மம் ரணதர்மமாய்

குத்தப்பட்டு பிதைக்கப்பட்டு;

பாதிக்கப்பட்ட வரலாற்றுக்கு
நாயகனாய் இஸ்லாமியனாக நான்!


Sunday, October 3, 2010

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.



அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும்,மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில்அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்துஅமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992
ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.

இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும்,பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும்,சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.

ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச்சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்.....


இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி : சிறுபான்மையினருக்கு ஏதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்யும் புரட்டும் – 1

‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை. அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”
- பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.
தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம். பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை. மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.
70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம். ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.
இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.
வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான். திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும். ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை. பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது. அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது. கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன. அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது. இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.
இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.
தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன். காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே. தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.
இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான். இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான். மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.
இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது. எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது. மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.
ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும். பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.
மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.
தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும். பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.
இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது. பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள். வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.
தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.
இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல. ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.
இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான். போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம். ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல. இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்