அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்த திஹார் கண்காணிப்பாளர் அந்தமான் சிறைக்கு மாற்றம்!!!

டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து தனது அறையில் உட்கார வைத்து ஹாயாக பேசிக் கொண்டிருந்த சிக்கிய திஹார் சிறை கண்காணிப்பாளர் பரத்வாஜ் அந்தமான் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

திஹார் சிறையில் பெருமளவில் குளறுபடிகள், கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி சலுகை காட்டுவது நிலவுவது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை என்ற பெயரைப் பெற்றது திஹார் சிறை. இங்கு கைதிகள் மனித நேயத்துடன் நடத்தப்படுவதாலும், சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கையாலும் பலராலும், பல அமைப்புகளாலும் பாராட்டப்பட்டதாகும்.

இந்த நிலையில் சிறையில் விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு வரம்பு மீறி சலுகைகள் காட்டப்படுவதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சமீபத்தில் சிறைக்கு அதிரடியாக வருகை தந்து சோதனை மேற்கொண்டார் மாஜிஸ்திரேட் பிரிஜேஷ் குமார் கார்க். அப்போது பல கைதிகளின் அறைகள் திறந்து கிடந்ததையும், கைதிகள் சுதந்திரமாக நடமாடி வருவதையும் கண்டு அவர் திடுக்கிட்டார். அதற்கு உச்சமாக, சுரேஷ் கல்மாடி, சிறைக் கண்காணிப்பாளர் பரத்வாஜின் அறையில் உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டபடி அவருடன் ஹாயாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது என்ன என்று பரத்வாஜிடம் அவர் கேட்டபோது, மருத்துவப் பரிசோதனைக்காக செல்ல காத்திருக்கிறார் கல்மாடி என்று பதிலளித்துள்ளார் பரத்வாஜ். சரி, அதற்காக ஒரு கைதியுடன் இப்படி உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு பரத்வாஜிடமிருந்து பதில் வரவில்லை.

சிறையில் கல்மாடியின் அறை மூடப்படுவதே இல்லையாம். அவர் சுதந்திரமாக இருக்கிறாராம். எப்போது நினைத்தாலும் அவர் வெளியில் வந்து கண்காணிப்பாளர் அறையில் அமர்ந்து பேசுவாராம். சிறைக்குள் சுதந்திரமாக நடமாடி வந்துள்ளார் கல்மாடி என்று நீதிபதி கார்க்குக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறையில் நடந்து வரும் விதி மீறல்கள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக மேல் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பியுள்ளார் கார்க்.

இந்த விவகாரத்தையடுத்து தற்போது பரத்வாஜ் அந்தமானில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார். அவர் வருகிற 8ம் தேதி அங்கு போய் பணியில் சேர வேண்டும்.

மேலும் பரத்வாஜ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறையின் கண்காணிப்பு அதிகாரி திணேஷ் காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐசி ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையின் அனைத்துக் கண்காணிப்பாளர்களையும் அழைத்துப் பேசிய சர்மா, கைதி யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் பாரபட்சம் காட்டக் கூடாது, சலுகை காட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் நீளமான கடல் பாலம் திறப்பு! !

உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் வியாழக் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.

சீனாவின் கிழக்குத் துறைமுக நகரான கிங்டாவோவையும் ஹாங்டாவ் தீமையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூரம் 26.4 மைல்களாகும்.

சுமார் 7,500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அகலம் 110 படி அடிகள். 5000 தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் கடந்த திங்கள் கிழமையன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வியாழக் கிழமையன்று பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டது.

2006ஆம் ஆண்டு முதல் இரு வேறு குழுக்களாகப் பணியார்கள் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் 22 இதன் இணைப்புப் பணிகள் முடிவுற்றன.

உலகின் நீண்ட கடல் பாலமாகப் புகழ் பெற்றுள் க்குய்ங்டாவ் ஹாவாயன் பாலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கே இந்தப் புகழைப் பெற்றிருக்கும். இதன் நீளத்தைவிட அதிக நீளம் உடைய மற்றொரு பாலத்தை அமைக்கும் பணியையும் சீனாவே மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தையும் ஹாங்காங் மற்றும் மகாவ் ஆகியவற்றையும் இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்கும் பணியை கடந்த டிசம்பர் மாதம் சீனா தொடங்கியுள்ளது. 30 மைல்கள் தொலைவுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டு நிறைவுறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை தொடக்கம்!!

டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கின் விசாரணை நாளை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கோடை விடுமுறையையொட்டி கோர்ட் செயல்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை முதல் மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நாளை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது முனனாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு ஆஜர்படுத்தப்படுவர்.

உச்சநீதி்மன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிறப்பு சிபிஐ கோர்ட் விசாரித்து வருவது நினைவிருக்கலாம்.

நாளை முதல் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் தொடங்கவுள்ளன.

இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் 14 தனி நபர்கள் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 2வது வாரத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

முதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, யூனிடெக் நிறுவன எம்.டி. சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, கெளதம் தோஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.

2வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.

பத்மநாபசுவாமி கோவிலில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள்!!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின், ரகசிய அறைகளில் இருக்கும் விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள், சிலைகள் உள்ளிட்ட பொருட்களை கணக்கெடுக்கும் பணி நேற்றும் தொடர்ந்தது. நேற்றைய கணக்கெடுப்பின் போது, தங்க விஷ்ணு சிலை ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த விஷ்ணு சிலையில், விலை மதிப்புமிக்க கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களின் மதிப்பு, 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு, முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு எடுத்துக் கொள்ள தடை விதித்தது.சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி, அறைகளை திறக்க துவங்கியது. மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நான்காவது அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த அறை இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. இதில், தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள், விளக்குகள், தங்கத்தாலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்கள் இருந்தன. பிரமிக்கத்தக்க வகையில், விலைமதிப்பில்லாத வைர, வைடூரிய, தங்க, வெள்ளி பொருட்களும் இருந்தன.

இந்நிலையில், ரகசிய அறைகளில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் பணி ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அப்போது, அற்புதமான கலைவண்ணத்தில் உருவான தங்க விஷ்ணு சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த விஷ்ணு சிலையில், விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மரகத கற்கள், பலவிதமான தங்க செயின்கள், ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் போன்றவையும் இருந்தன. கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்களின் மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என, கூறப்படுகிறது.பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் வைக்கப்பட்டிருந்த, பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி, 1932ம் ஆண்டிலும் நடந்ததாக, அப்போதே மலையாள மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக சித்திரை திருநாள் பொறுப்பேற்ற பின், இந்த ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. அப்போது, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் இருந்தாக கணக்கிடப்பட்டுள்ளது. இருந்தாலும், நகைகளின் மதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

பாதுகாப்பு அதிகரிப்பு: கோவிலில் தங்கம், வைரம், விலை மதிப்புமிக்க சிலைகள் என, ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதால், நேற்று முதல் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை நிரந்தரமாக்குவது குறித்து நேற்று பேட்டியளித்த கேரள டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ், ""இப்புதிய பாதுகாப்புப் பணியில், விரைவில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள், நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்பில் ஈடுபடுவர். அதற்கான பணிகள் விரைவாக நடக்கும்,'' என்றார்.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்பு!!!

சென்னை:பொறியியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்க குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த புதிய விதிமுறைகளுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 45 சதவீதம், பொதுப் பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் இந்த தகுதி மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தற்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,), 2011-12ம் ஆண்டுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதம், மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்த இந்தப் புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக உயர் கல்வித் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள், தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. புதிய விதிமுறைகளால், இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். "பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இந்த விதிமுறையால், பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் மேலும் உயரும். எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி விதிமுறைகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சிறப்பு அரசு பிளீடர் சம்பத்குமார் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

மாணவர்கள் நலன் காக்க...!கடந்த மாதம் 14ம் தேதி, டில்லியில் பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு வகுத்துள்ள தற்போதைய விதிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என, கோரியிருந்தார். இதுகுறித்து மத்திய அரசும், ஏ.ஐ.சி.டி.இ.,யும் எந்த முடிவும் எடுக்கவில்லை.பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை உடனே துவங்க வேண்டிய நிலையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பொறியியல் கல்வி பயின்று பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி வழங்கிய அறிவுரையின்படி, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.ஐகோர்ட் பிறப்பித்த தடை உத்தரவின் மூலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் நலன் காக்கப்பட்டுள்ளது.

அழகிரி, மம்தா மோசமான அமைச்சர்கள் ...

புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை!


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கைதாகி, ஒரு மாதம் முடிந்த நிலையில்,  திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள்  சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும்  பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழியின் சிறைவாசம் தொடர்கதையாகியுள்ளது. இதையடுத்து அதிர்சியடைந்த திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி ஓடோடி சென்று தனது மகளை பார்த்து வந்துள்ளார். தந்து மகளுடனான அவரது சந்திப்பு குறித்து கேட்கப்பட கேள்விக்கு,
 
'திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 
கனிமொழி கைது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக பத்திரிக்கைகளில் எழுதிய அவதூறு செய்திகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார் என்று கூறும் கலைஞர் அவர்களே! சற்று பின்னோக்கி திரும்பி பாருங்கள். இன்று உங்கள் ஒரு மகளின் சிறைவாசத்திற்கு உள்ளம் குமுறும் நீங்கள், ஒரு குண்டு வெடிப்பை காரணமாக வைத்து ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக்கி குமுறச்  செய்தீர்களே! கோவை குண்டுவெடிப்பையொட்டி குற்றவாளிகள் என்று நீங்கள் கைது செய்த அனைவரையும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் கைது செய்தீர்களா? மதானி என்று ஒருவரை கைது செய்து பத்து ஆண்டுகள் அடைத்தீர்களே! அவரும் உங்கள் மகளை போன்று பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தாரே! அப்போதெல்லாம் இன்றைக்கு சி.பி. ஐ. உங்கள் மகள் மீதான வழக்கில் ஜாமீன் மறுப்பதற்கு காரணமாக கூறும், ''அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது' என்ற இதே வாசகத்தை கொஞ்சம் மாற்றி, இவரை ஜாமீனில் விட்டால் சாட்சியை கலைத்து விடுவார் என்று கோர்ட்டில் உங்கள் அரசு   PP   சொல்லவில்லையா? மதானி ஒரு நிரபராதி என்று கோர்ட்டு தானாக விடுதலை செய்யும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்களே! மதானி ஜாமீன்  விஷயத்தில் ஜெயலலிதாவின்  பாதையில்  பயனித்தீர்களே!
ஒரு மாத காலம்  சிறையில் உங்கள் மகள் இருப்பதால் துடிக்கும் உங்களுக்கு, பத்து வருடம் சிறையில் இருந்த மதானியின் குடும்பத்தின் வலி இப்போது புரிகிறதா கலைஞரே?
 
கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார் என்று உருகும் கலைஞரே! அன்று தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்ட போதும் மதானிக்கு ஜெயலலிதாவும்-தொடர்ந்து நீங்களும் ஜாமீன் மறுத்தீர்களே! 
 
கனிமொழி தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் வாதம் வைக்கும் கலைஞரே, ஆயிஷா என்ற பெண் தீவிரவாதியை தேடுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வீட்டு படுக்கை அறைவரை வந்து சல்லடை போட்டார்களே, பெண்கள் மதரசாக்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறினார்களே, பர்தா அணிந்தபெண்களெல்லாம் ஆயிசாவோ என சந்தேகத்தோடு சோதித்தார்களே உங்கள் காவல்துறையினர் அந்த ஆயிஷா ஞாபகமிருக்கிறதா.. கலைஞரே?
 
சங்கீதாவாக இருந்த அப்பெண்  ஆயிஷாவாக மாறி, ஒரு முஸ்லிம் வாலிபரை மணக்க, அவர்களுக்கு அல் உம்மா ரபீக்  என்ற சகோதரர்   அடைக்கலம் தந்து உதவி செய்ய, அதையே காரணமாக்கி அந்த தம்பதியை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உங்கள் காவல்துறை உள்ளே தள்ள, மூன்று ஆண்டுகள பிணையில் கூட வரமுடியாமல் அந்த தம்பதிகள் தனி தனி செல்லில் வாட, அவர்களது பிள்ளை பெற்றோரை பிரிந்து அனாதையாக வளர்ந்தானே! அப்போது அந்த ஆயிஷாவுக்கும் தாய்ப்பாசம் இருந்தது உங்களுக்கு தெரியவில்லையா கலைஞரே!
 
அன்று மதானி பத்து ஆண்டுகளாக தனது பிள்ளைகளை பிரிந்த வேதனை இப்போது புரிகிறதா கலைஞரே! மதானி மட்டுமல்ல;  உங்களால் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு அப்பாவியும் தனது பிள்ளையை-மனைவி- தாய்- தந்தையை பிரிந்து வாடினார்களே! அவர்களுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்க நீங்கள் அதாவது உங்கள் அரசு தடையாக நின்றதே! அன்றைக்கு அவர்களும் அவர்களது குடும்பமும் இப்படித்தானே துடித்திருக்கும்?
 
ஒரு குண்டுவெடிப்பிற்காக சம்மந்தப்பட்டவர்கள்  என்று கூறப்படும் சிலரோடு, சம்மந்தமில்லாத பலரை நள்ளிரவில் கூட வீடு புகுந்து உங்கள் காவல்துறை கைது செய்தபோது சம்மந்தப்பட்ட முஸ்லிம்கள் துடித்த வேதனையை உங்களை நள்ளிரவில் கைது செய்தபோது உணர்ந்திருப்பீர்கள். செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும்  அப்பாவி கைதிகளின் பிள்ளைகளும்- குடும்பத்தாரும் படும் வேதனையை கனிமொழி கைதின் மூலம் உணர்ந்திருப்பீர்கள். ஆம் கலைஞரே! 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'  தானே!
 

தயாநிதிமாறனை பதவி நீக்கக்கோரி பாஜக போராட்டம் அறிவிப்பு ..

நாட்டையே உலுக்கிய 2G அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலுக்குக் காரணமான அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலககோரி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

லோக்பால் மசோதா; அனைத்துக்கட்சி கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படுமா என்பது சந்தேகம் ...

புதுடில்லி: அரசு தரப்பில் ஒரு வரைவு மசோதாவும், சமூகஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சியினர் தரப்பில் ஒரு வரைவு மசோதாவும் என நிலவிவரும் பிரச்னையை முன்நிறுத்தி இன்று முடிவு ஏற்படுத்துவதற்காக ஆளும் காங்கிரஸ் அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டியுள்ளது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே , பாபா ராம்தேவ் மற்றும் எதிர்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனையடுத்து இந்த மசோதாவில் பிரதமர், நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொண்டுவரப்பட வேண்டும் என ஒரு சாராரும், மற்றொரு சாரர் ( ஆளும்கட்சி) ஒரு நிலையாக நிற்பதுவுமாக உள்ளது. இந்த மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.,தலைவர் அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பான இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்தை வலியுறுத்துவோம் என்றார்.

இந்த கூட்டத்தில் தனது கருத்திற்கு ஆதரவு தருமாறு தியாகி அன்னா ஹசாரே அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். நேற்று காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசிய அவர் செய்தியாளர்களிடம் ஹசாரே, மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனான சந்திப்பு, பயன் உள்ள வகையில் இருந்தது. எங்கள் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதா குறித்தும், அரசு பிரதிநிதிகள் தயாரித்த வரைவு மசோதா குறித்தும், அவரிடம் விளக்கினோம். இரண்டு மசோதாக்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் விளக்கினோம்.

குறிப்பாக, 15 முக்கியமான பிரச்னைகள் குறித்து, அவரிடம் எடுத்துக் கூறினோம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியபின், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, சோனியா உறுதி அளித்தார்.கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, சரியான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது நடக்கவில்லை என்றால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் ஆகஸ்ட் 16 முதல், திட்டமிட்டபடி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தை சிவசேனா புறக்கணித்துள்ளது.