அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

Funny Creative Foody People Art

 
 

 
 
 
 
 
 

 
 
 
 
 
 


சரவணா ஸ்டோர்ஸில் கோடிக் கணக்கில் தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்!

தியாகராய நகர் மற்றும் புரசை வாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  வியாழக் கிழமைக் காலை முதல் 500 க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். 

இந்தச் சோதனையில் கோடிக் கணக்கிலான மதிப்புடைய கணக்கில் வராத தங்கக் கட்டிகள், பணம் மற்றும் ஆவணங்கள் வருமானவரித் துறையினர் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் கைப் பற்றப் பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பை தெரிவிக்க வருமானவரித் துறையினர் மறுத்து விட்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த கடந்த 6 வருட வருமானவரி கணக்கை வருமானவரி துறையினர் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  சரவணா ஸ்டோர்ஸில் நடைபெற்ற சோதனை காரணமாக இரு நாட்கள் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடப் பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் பட வில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

120 ஹமாஸ் போராளிகள் கைது-இஸ்ரேலின் அடாவடி


1745780
காஸ்ஸா:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவத்தின் அக்கிரமத் தாக்குதல் ஐந்தாவது தொடர்ந்த வேளையில் நேற்று 120 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.
தெற்கு மேற்கு கரையிலிருந்து இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் போலீஸ் அறிவித்துள்ளது. கைதுச் செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் எம்.பி முஹம்மது முத்தலக் அபூஜெய்ஷாவும் உட்படுவார்.
இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக நேற்று முன் தினம் ஹமாஸ் தலைமை அறிவித்தது. வியாழக்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸா முனையில் தொடரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
அதேவேளையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் நடத்திய விமானத் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை துவங்கியதிலிருந்து இதுவரை 15 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சார்ந்தவர்களின் கொலைக்கு பின்னணியில் தாங்கள் இல்லை என ஹமாஸின் தலைமை தெரிவித்தபோதும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!

sleeping positions2 Adorable sleeping positions
 முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!.......

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல்உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றிசோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போதுஇந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்)இன்னும்மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன்4:142)
எனவேசோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டுஅன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமாஅதற்குநபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால்நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறதுஉறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராகசோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கிபஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!
இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து,ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள்அரை வயிறு சாப்பிட்டுகால் வயிறு தண்ணீர் குடித்துகால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!
நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கிதஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கிஅதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில்சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
யா அல்லாஹ்! கவலைதுயரம்இயலாமைசோம்பல்கஞ்சத்தனம்கோழைத்தனம்,மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)
ஆகையால்ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும்.நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும்தீர்வு’.
சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.
Thanks
TMB

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


 Description: Description: imagesCA7JYJEB
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்குசெலவழிக்கப்படுகிறது.
ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பானகபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹஸாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்ப்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு சைபர் உலகில் பெருமளவிலான பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ்இ-மெயில்ஃபேஸ்புக்ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும்,மனீஷ் ஸிஸோடியுமாவர்.
தகவல் உரிமைச்சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹஸாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியை கொலைச் செய்த கொலைக்கார கும்பலானஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பிபஜ்ரங்தள்யுவமோர்ச்சா,ஏ.பி.வி.பி போன்றவையாகும். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹஸாரேவுக்காகவீதிகளில் இறங்கியுள்ளனர்.
யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி)இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹஸாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்க்பரிவார அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால் ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹஸாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடுச்செய்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும்,ஏ.பி.வி.பியும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.
ஹஸாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிப்பெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப்போவதாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.
முன்பு கறுப்புப்பணத்திற்கு எதிராக போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது.