அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

ஆங்கில பாடப் பயிற்சி 10 (Simple Past Tense)

இன்று Grammar Patters 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். அவற்றை இன்று விரிவாகக் கற்கப் போகின்றோம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று 73 வாக்கியங்களில் 3, 4 காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை இன்று விரிவாகக் கற்போம்.

3. I did a job
4. I didn’t do a job.

இவை இரண்டும் இறந்தக்கால சொற்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால சொற்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர். இந்த இறந்தக்கால சொற்களின் பயன்பாடுப் பற்றி இன்று விரிவாகக் கற்போம்.

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I
/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். இதில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Did
+ I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், Auxiliary verb துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் ஆயிரக்கணக்கான புதுப் புது வாக்கியங்களை நாமாகவே உருவாக்கி அவற்றை கேள்விப் பதிலாகவும் மாற்றி அமைத்துவிடலாம்.

உதாரணம்:

Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.

Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, I spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, I didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு

2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.

3. I applied for vacancies.
நான் விண்ணப்பித்தேன் தொழில் வாய்ப்புக்காக

4. I forgave him.
நான் மன்னித்துவிட்டேன் அவனை.

5. I travelled by MTR.
நான் பிரயாணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)

6. I came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.

7. I asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.

8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.

9. I wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.

10. I borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.

11. I lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு

12. I cracked jokes with others.
நான் பகிடிவிட்டேன் மற்றவர்களுடன்.

13. I boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.

14. I got wet.
நான் நனைந்தேன்.

15. I gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.

16. I got confrontation with my Boss.
நான் எதிரெதிராகச் செயல் பட்டேன் என் தலைவனுடன்.

17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.

18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.

19. I got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.

20. I read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.

21. I escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.

22. I studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.

23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.

24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.

25. I deposited money to the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசை வங்கியில்.

26. I born in 1998.
நான் பிறந்தேன் 1998 ல்.

27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்

28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.

29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.

30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.

31. I learned driving in Hong Kong.
நான் கற்றேன் வாகனம் ஓட்ட ஹொங்கொங்கில்

32. I met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.

33. I married in 1995.
நான் திருமணம் செய்தேன் 1995 ல்.

34. I played Guitar.
நான் வாசித்தேன் கிட்டார்.

35. I visited Thailand last year.
நான் (பார்க்கச்) சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.

36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

37. I sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.

38. I paid in Installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.

39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.

40. I went to university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.

41. I repaid the loan.
நான் திரும்பச் செலுத்தினேன் கடன்.

42. I arrived ten minutes ago.
நான் வந்தடைந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பே.

43. I lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பெங்கொக்கில் இரண்டு வருடங்களாக.

44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.

45. I left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.

46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.

47. I practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் கடந்த இரவு.

48. I forgot her.
நான் மறந்தேன் அவளை.

49. I decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.

50. I wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.

Homework:

பயிற்சி 1: மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.

Subject + Main verb
I spoke in English. - நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. - நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. - அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. - அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. - அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English. நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. - அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.

பயிற்சி 2: ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றிப் பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுத்தத் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப் பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.

பயிற்சி 3: இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்து முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.

குறிப்பு:


சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்துக் கற்கலாம்.

1. Regular verbs - with regular verbs + ed
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.

1. Regular verbs - எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காக – ed இணைந்து வருபவைகள்.

உதாரணம்:

I played cricket
I visited Japan last year
I watched TV last night

Study போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.

உதாரணம்:

I studied English.

Live, Love போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - d யை மட்டும் இட்டால் போதும்.

உதாரணம்:

I lived in Australia for two years.

2. Irregular verbs - இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையை மனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.

I fell off a horse yesterday.
I went to school
I taught English
I wrote a letter
I slept yesterday

இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]

yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past

இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation)

குறிப்பாக எல்ல "regular verbs" களின் முடிவின் போதும் – ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.

Agreed - எக்gரீட்d
Loved - லவ்ட்d
Judged - ஜட்ஜ்ட்d
Begged - பெக்ட்d
Cleaned - க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.

Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.

Needed - நீdடட்d
Collected - கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun

ஆங்கிலம் பயிற்சி அட்டவணை (Irregular verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.

"Irregular verbs" களை அட்டவணையாக ப்ளொக்கரில் எழுத முடியாமையினால் அட்டவணை ஒழுங்கில் "ஆங்கிலம் உதவி பக்கம்" எழுதியுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்று அவற்றைப் பார்க்கலாம். இருப்பினும் அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்து இங்கே இட்டுள்ளோம். பிழையற்ற ஆங்கில உச்சரிப்பிற்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறவும்.

irregular vers.mp3








இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இப்பாடத்தில் மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக ஒழுங்கில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு: welcome to aangilam.blogspot.com Aangilam listening practice in Tamil

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் என்பதால், அதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம்.

நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றை எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஒரு ஆங்கிலக் கட்டுரையை எழுதி தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் நீங்கள் எழுதலாம். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும்.

எமது இந்த ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடங்காத கேள்விகள் இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி, English listening Practice, through Tamil, in Tamil, with Tamil, English irregular verbs with Tamil Explanation.
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun English Irregular verbs listening practice in Tamil,

ஆங்கில பாடப் பயிற்சி 8 (there is)

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் “இருக்கிறது” என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான "have/have got" டை மையப்படுத்தியக் கிரமர் பெட்டர்னைக் கற்றோம்.

இன்று "there is" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை கற்கப் போகின்றோம். இந்த "there is" எனும் சொல்லும், நாம் சென்றப் பாடத்தில் கற்ற "have" எனும் சொல்லும் தமிழில் "இருக்கிறது" எனும் ஒரே அர்த்ததைத் தான் தருகின்றது. இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வேறுப்பட்டவை. இவ்வேறுப்பாட்டை இன்றையப் பாடத்தில் நாம் கற்கலாம்.

There is - "இருக்கிறது" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை 22 வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கெனவே கற்ற "கிரமர் பெட்டன்களைப்" போல், இதையும் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். எமது ஆங்கில பாடப் பயிற்சியில் வழங்கப்படும் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொண்டாலே நீங்கள் பாதி வெற்றிப் பெற்றுவிட்டதற்கு சமனானதாகும்.

Well begun is half done


நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால், எமது பாடப் பயிற்சிகளை மிகவும் எளிதாக கற்பதற்கு Grammar Patterns 1 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

Practice the following grammar Patterns daily.

1. There is a book.
இருக்கிறது ஒரு புத்தகம்.

2. There is not a book. (isn’t)
இல்லை ஒரு புத்தகம்.

3. There are books.
இருக்கின்றது புத்தகங்கள். (பன்மை/ Plural)

4. There are not books. (aren’t)
இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

5. There can be a book.
இருக்க முடியும் ஒரு புத்தகம்.

6. There can't be a book.
இருக்க முடியாது ஒரு புத்தகம்.

7. There will be a book.
இருக்கும் ஒரு புத்தகம்.

8. There won't be a book.
இருக்காது ஒரு புத்தகம்.

9. There was a book.
இருந்தது ஒரு புத்தகம்.

10. There would have been a book.
இருந்திருக்கும் ஒரு புத்தகம்.

11. There were books.
இருந்தது புத்தகங்கள். (பன்மை/ Plural)

12. There must be a book.
(நிச்சயமாக) இருக்க வேண்டும் ஒரு புத்தகம்

13. There must have been a book.
இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)

14. There may be a book.
இருக்கலாம் ஒரு புத்தகம்.

15. There may have been a book.
இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.

16. There has to a book.
இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

17. There have to be books.
இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

18. There should be a book.
இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

19. There ought to be a book.
எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

20. There has been a book.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கிறது ஒரு புத்தகம்.

21. There had been a book.
அப்போதிருந்து/அக்காலத்திலிருந்து இருந்தது ஒரு புத்தகம்.

22. There have been books.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கின்றது புத்தகங்கள். (பன்மை/ Plural)

Home work:

• There is a book on the table (3, 4, 11, 17, 22 Plural)
• இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்

• There is an election in USA (3, 4, 11, 17, 22 Plural)
• இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்

• There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
• இருக்கின்றது இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்

• There are 1652 languages in India (1, 2, 9, 16, 20 Singular)
• இருக்கின்றது 1652 மொழிகள் இந்தியாவில்

• There are 6760 languages in the world (1, 2, 9, 16, 20 Singular)
• இருக்கின்றது 6760 மொழிகள் உலகத்தில்

• There are hundred of vegetable items in the market (1, 2, 9, 16, 20 Singular)
• இருக்கின்றது நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்

கவனிக்கவும்:

ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

பன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களின் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.

குறிப்பு 1:

Have - There is இரண்டுக்குமான வேறுபாடுகள்

1. தனக்கு, அல்லது தனக்கே சொந்தமாக இருக்கிறது எனும் உரிமையைக் குறிப்பதற்கு "have" பயன்படுகின்றது.

2. "there is" - பொதுவாக இருப்பவற்றைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது.

உதாரணமாக: I have a book எனும் போது “எனக்கு இருக்கிறது ஒரு புத்தகம்.” என்று பொருள்படுகின்றது. அதாவது தனக்கு உரிமையாக அல்லது தன்னிடம் "ஒரு புத்தகம் இருக்கிறது" என்பதை இவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது.

"There is a book on the table "எனும் வாக்கியத்தைப் பார்ப்போம். இதில் “இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்” என்று கூறப்படுகின்றது.

அப் புத்தகம் யாருடையது? யாருக்கு உரிமையானது? என்பதைப் பற்றியெல்லாம் இங்கே குறிப்பிடப்படவில்லை. பொதுவாக "ஒரு புத்தகம் இருக்கிறது" அது மேசையின் மேல் இருக்கிறது" என்பதை மட்டுமே கூறுகின்றோம். (அது யாருடையது என்பது எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளரைக் குறிப்பிடாமல் பேசுகின்றோம்) இதுப்போன்று பொதுவாக "இருக்கிறது" என்பதை வெளிப்படுத்த "there is" பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 2:

Here – இங்கே
There – அங்கே
Here and there – இங்கும் அங்கும்

"There" என்றால் “அங்கே” என்றே தமிழில் பொருள்படுகின்றது. ஆனால் இந்த கிரமர் பெட்டர்னில் “there+” எனும் சொல்லுக்கு அவ்வாறான அர்த்தம் கொள்ளவேண்டாம், “இருக்கிறது” எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்துங்கள்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

Grammar Patterns 7

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு (Verb) வினைச்சொல்லை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை (Noun) 32 விதமாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.

இன்றைய "கிரமர் பெட்டர்ன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டே இன்றைய “கிரமர் பெட்டனை” நாம் வடிவமைத்துள்ளோம்.

Have எனும் சொல்லின் தமிழ் அர்த்தம் “இருக்கிறது” என்பதாகும். உதாரணமாக "I have work." எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை, இருந்தது, இருக்கலாம், இருக்கும், இருந்திருக்கும், இருந்திருக்கலாம் என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி இன்று பயிற்சி செய்வோம்.

நாம் ஏற்கெனவே பயிற்சி செய்த மற்ற Grammar Patterns களைப் போல் இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகைத் தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இப்பாடப் பயிற்சியைத் தொடர இலகுவாக இருக்கும்.


சரி இன்றைய பாடத்தைத் தொடருவோம்.

Practice the following Grammar Patterns Daily

1. I have work.
2. I have got work.
எனக்கு இருக்கிறது வேலை.

3. I don’t have work.
4. I haven't got work.
எனக்கு இல்லை வேலை.

5. I had work.
எனக்கு இருந்தது வேலை.

6. I didn't have work.
எனக்கு இருக்கவில்லை வேலை.

7. I may have work.
8. I might have work.
9. I may be having work.
எனக்கு இருக்கலாம் வேலை.

10. I must have work.
எனக்கு இருக்க வேண்டும் வேலை.

11. I should have work.
எனக்கு இருக்கவே வேண்டும் வேலை.

12. I ought to have work.
எனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.

13. I must be having work.
எனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.

14. I could have had work.
எனக்கு இருக்க இருந்தது வேலை.

15. I should have had work.
எனக்கு இருக்கவே இருந்தது வேலை.

16. I may have had work.
எனக்கு இருந்திருக்கலாம் வேலை.

17. I must have had work.
எனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.

18. I would have had work.
எனக்கு இருந்திருக்கும் வேலை.

19. I shouldn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

20. I needn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

21. I will have work.
எனக்கு இருக்கும் வேலை.

22. I won't have work.
எனக்கு இருக்காது வேலை.

23. I wish I had work.
எவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.

Homework:

இன்று நாம் கற்ற இந்த "கிரமர் பெட்டர்னை" போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.

1. I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.
2. I have money
எனக்கு இருக்கிறது பணம்.
3. I have a Tamil dictionary
எனக்கு இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.
4. I have a kind heart.
எனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.
5. I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறது/றார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.
6. I have fever.
எனக்கு இருக்கிறது காய்ச்சல்.
7. I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.
8. I have a beautiful house
எனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.
9. I have a car
எனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.
10. I have pass port.
எனக்கு இருக்கிறது கடவுச்சீட்டு.

ஓர்/ஒரு என்பதற்கு "a" என்றும் "an" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant இங்கே பார்க்கவும்.

குறிப்பு:

“இருக்கிறது” எனும் சொல்லின் ஆங்கில அர்த்தம் "have" ஆகும். இந்த “have” எனும் சொல் குறிப்பாக “இருக்கிறது” என்று பொருள்பட்டாலும், அது தனக்கே, அல்லது தனக்கு சொந்தமாகவே இருக்கிறது எனும் உரிமையைக் குறிக்கவே பயன்படுகிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.

1. "Possession" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:

உதாரணம்:

Does he have a car?
அவனுக்கு இருக்கிறதா ஒரு மகிழூந்து?

Do you have a beautiful house?
உனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு?

2. "Relationships" உறவுமுறைகளைத் தொடர்பாக பேசுவதற்கு:

உதாரணம்:

How many brothers do you have?
எத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்?

3. "Illnesses" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:

உதாரணம்:

Do you have fever?
உனக்கு இருக்கிறதா காய்ச்சல்?

Do you have cough and cold?
உனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்?

4. "Characteristics" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:

Do you have an interview?
உனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு?

Do you have a kind heart?
உனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்?

உரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ "Have" அல்லது "have got" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும்.

I have work.
I have got work. இவ்விரண்டு சொற்களுக்கும் "எனக்கு இருக்கிறது வேலை" என்றே தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். have/ have got எனும் இரண்டு சொற்பதங்களுமே ஒரே மாதிரியான அர்த்தத்தையே தருகின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:

இங்கே நாம் "have got" என்று பயன்படுத்தியிருப்பதால், இங்கு காணப்படும் "got" எனும் சொல் "get" இன் Past Tense/Past Participle லாக வரும் "got" என கருதிவிடவேண்டாம்.

இந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதைக் கீழே கவனியுங்கள்.

Do you have a cold?
Have you got a cold?

Yes, I have a cold.
Yes, I have got a cold.

Do you have a house in the country?
Have you got a house in the country?
Yes, I have a house in the country.
Yes, I have got a house in the country.

Do you have any brothers or sisters?
Have you got any brothers or sisters?
No, I don’t have any brothers or sisters.
No, I haven’t got any brothers or sisters.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இது மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதற்கு முன்பாகவே இந்த "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி.

ஆங்கில பாடப் பயிற்சி 6 (Grammar Patterns)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். இன்று ஒரு பெயர்ச் சொல்லை "Noun" உதாரணமாக எடுத்து அதை 32 வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

"பெயர்ச்சொல்" என்பது குறிப்பாக பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கு பயன்படுகின்றன.

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

இதைச் சற்றுப் பாருங்கள் சர்மிலன் என்பது ஒரு நபரின் பெயர். அதாவது சர்மிலன் என்பது ஒரு பெயர்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் ஒரு பெயர் சொல்லை வைத்து, சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், இருந்திருப்பார், இருக்கலாம், இருந்திருக்கலாம், இருக்கவேண்டும், இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் எத்தனையோ விதமாக நாம் தமிழில் பேசுகின்றோம் அல்லவா! அதேப் போன்று தான் இப்பாடத்தில் ஒரு பெயர்ச்சொல்லை வைத்து 32 விதமான வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளது.

பெயரைக் குறிப்பிடாமல் பெயர்சொல்லுக்குப் பதிலாக அவன், அவர், இவன், அவள், இவள், அது, இது என்பதெல்லாம் சுட்டுப்பெயர்களாகும். அவ்வாறு சுட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியும் பயிற்சி செய்யலாம். அவ்வாறு இங்கே "சர்மிலன்" எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி) "அவர்" எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யலாம்.

இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும்.

Grammar Patterns 4...

Practice the following Grammar Patterns daily.

1. He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. (மனேஜர்)

2. He can be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டும்.

15. He should be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே (இருக்க) வேண்டும்.

16. He ought to be a Manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.

18. He needn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a Manager.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a Manager.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகக் கூடாது.

24. He shouldn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது.

28. He should have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

29. He ought to have been a Manager.
அவருக்கு எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

32. He being a Manager, he knows the work.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில் அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:

மேலே நாம் பயிற்சி செய்தது போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக மாற்றி எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She is a domestic helper.
அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண்.

Karunanithi is a Chief Minister.
கருனாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஒரு தலமை நிறைவேற்று அதிகாரி கொங்கொங்கின்.

குறிப்பு:

உதாரணம் "is" என்று இடப்பட்டிருக்கும் இடங்களில் நான் சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி.

கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!


 இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களை இழிவு படுத்தியும் நடைபெறும் உலகம் தழுவிய ஊடகப் போரின் தளபதிகளில் ஒருவர் நெதர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் என்பவர். இஸ்லாமிய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்ட வில்டர்ஸ் மீது வழக்கு தொடுக்கும்படி அரசு தரப்பு வழக்குரைஞருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. Freedom Party என்ற கட்சியின் தலைவரான வில்டர்ஸ் சென்ற ஆண்டு இஸ்லாமை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தியும் குர்ஆனை ஹிட்லரின் 'Mein Kampf' என்ற புத்தகத்துடன் ஒப்பிட்டும் சர்ச்சைக்குரிய ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டிருந்ததோடு தனது இஸ்லாமியக் காழ்ப்பை உலகம் முழுக்கப் பரப்புவதற்காக இணையத்தில் ஒரு தளத்தையும் நடத்தி வந்தார். 'நெட்வொர்க் சொல்யூஷன்' என்ற இணையதளங்களைப் பதிவு செய்யும் நிறுவனம் வில்டர்ஸின் கயமைத் தனத்தை அறிந்து, அவரது தளத்தை முடக்கியது. இப்போது, "ஒரு ஜனநாயக அமைப்பில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, கருத்துச் சுதந்திரம் என்பதற்கு ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைவது அவசியமாகிறது" என நெதர்லாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"இந்தத் தீர்ப்பு, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" என வில்டர்ஸ் வர்ணித்தார். "பொது விவாதங்களில் பங்கெடுப்பது ஒரு அபாயகரமான நடவடிக்கையாக மாறி விட்டது. பொது விவாதங்களில் கருத்துத் தெரிவிப்பவர்கள் வழக்குகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை உருவாகி விட்டது" என்று அவர் சலித்துக் கொள்கிறார். தன்னை மட்டுமல்லாது, தங்கள் நாடு 'இஸ்லாமிய மயமாதலை' எதிர்க்கும் எல்லா டச்சுக் குடிமகன்களையும் இந்தத் தீர்ப்பு பாதிக்கும் என அவர் எச்சரித்தார். "என் வாயை அடைத்து விட்டால், நமது கலாச்சாரத்திற்கு ஆதரவாக வேறு யார் குரலெழுப்புவார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக வில்டர்ஸ் தரப்பின் வாதங்களைப் பரிசீலித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, அவரது 'ஒருதலைப் பட்சமான பொதுப்படை வாதங்கள்' அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் இயல்பான பேச்சுரிமை சலுகையையும் மீறியது எனத் தெரிவித்தது. "பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்கள் மீதும் அவர்களது நம்பிக்கைகள் மீதும் வில்டர்ஸ் தெரிவித்திருந்த கருத்துகள் வெறுப்புணர்வையும் பாகுபாடுகளையும் தூண்டிவிட்டன என்பதால், அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்" என உத்தரவு பிறப்பித்ததாக நீதிமன்ற அறிக்கை தெளிவு படுத்தியது.

இஸ்லாமை ஹிட்லரின் நாஜியிசத்துடன் ஒப்பிட்டு, முஸ்லிம்களை அவமதித்ததற்காக வில்டர்ஸ் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது பற்றியும் நீதிமன்றம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது. சென்ற ஆண்டு வில்டர்ஸ் தெரிவித்த கருத்துகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் நிகழ்ந்தது என்பதால் அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க வாய்ப்பில்லை என அரசு வழக்குரைஞர் அலுவலகம் முடிவு செய்திருந்தது. அந்த முடிவைத்தான் நீதிமன்ற உத்தரவு மாற்றியிருக்கிறது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அரசு வழக்குரைஞர் தரப்பு, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும், வழக்கு தொடர்பான விசாரணகளை உடனடியாகத் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தது.

வில்டர்ஸ் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த ஜெரார்ட் ஸ்போங் என்ற பிரபல வழக்குரைஞர், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றார். "இது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ந்து வெறுப்புணர்வை கொட்டிவரும் விட்லர்ஸ் பற்றி நமது தளத்தில் முன்பு வெளியிடப்பட்ட கட்டுரைகளை இந்தச் சுட்டிகளில் காணலாம்.

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

குர்ஆன் திரிப்புத் திரைப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு!

தினமலருக்கு (நீதியின்) அடி!


தினமலருக்கு நான்காவது நீதியின் அடிமுஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே.

அவற்றுள் 'மனித நீதிப் பாசறை' அமைப்பினர் சட்ட ரீதியான எதிர்ப்புகளைக் காட்டி, அல்லாஹ்வின் அருளால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தினமலர் பத்திரிகைக்கு எதிராகப் பல்வேறுபட்ட வழக்குகளை மனித நீதிப் பாசறை அமைப்பினர் தொடுத்து, வழக்கில் தாங்கள் குறுக்கீடு செய்து வாதாடும் உரிமை கோரி இருந்தனர்.

கடந்த 05.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் அடுத்தடுத்து 10,12,15 ஆகிய தேதிகளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 15.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் "தினமலர் பத்திரிகை இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதானது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டக் கூடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தொடர்புடைய தினமலர் நிர்வாகிகளைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு வாதாடினார்.

மனித நீதிப் பாசறையினர் தொடுத்துள்ள வழக்குகளில் தங்களைக் கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வேங்கடபதி, ஆர். ராகவன், ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்னதாக மனுச் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, "ஊடகத்துறைக்கு வழங்கப் பட்டுள்ள எழுத்துச் சுதந்திரம் என்பது பொதுமக்களுள் ஒரு சாராரின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதற்கும் ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் வழங்கப் பட்டிருக்கும் லைஸென்ஸ் அல்ல. மனித வரலாற்றில் பெரும் ஆளுமையுடைய ஒருவரைக் குறித்து செய்தி வெளியிடப் படும்போது உச்சமான எச்சரிக்கையோடு பரிசீலித்து வெளியிட வேண்டும். இல்லையேல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பின்விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது" என்று தனது தீர்ப்பைத் தொடங்கி,

allowing such practice would affect national integrity and imperil the constitutional aspirations.

என முடித்தார்.

தினமலர் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்ற நியாயமான தீர்ப்புக்கு மட்டுமின்றி "The freedom given to the press should not be treated as a licence to denigrate the feelings of a section of the people and to divide communities for sleazy gains" என்ற ஆணித்தரமான கருத்துகளுக்காவும் நீதிபதி ரகுபதி பாராட்டுக்குரியவராவார்.

அக்கருத்து, இனிவரும் காலத்தில் சிறுபான்மையினரது மத உணர்வுகளோடு விளையாட நினைக்கும் எழுத்து வன்முறை முயற்சிகளுக்கு அணைபோட்டுத் தடுக்கும்.

*****

ஓமன் நாட்டில் தினமலர் இணையத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*****

தமிழகத்தில் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்!


படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!" என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

நன்றி: குமுதம்


நோன்புதான் மாண்பு!


உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று
உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க
வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து
வழங்கிய அருட்கொடைதான் வளமான ரமளான் நோன்பு!Image

ஈகைத் திருநாள் என்று எல்லோரும் இறைபுகழ் பாடும்
இந்த ரமளான் நாளில் இயன்றவரை பொருள் கொடுத்து
வாகைசூழ் அல்லாஹ்வின் வானமுத அருளைப் பெறவே
வாருங்கள் தோழர்களே வலுவாக கரம் சேர்ப்போம்!!

சுவனம் திறந்திருக்கும் ரமளானில் சுமைகள் குறைந்துவிடும்
சோம்பல் ஷைத்தான்கள் சுருண்டு நிற்பர் விலங்கிற்குள்ளே
எவரும் அடையும் வண்ணம் ஏற்றமிகு ஓர் இரவு
இருக்கின்ற முப்பதில் எப்படியும் வந்தே தீரும்!

ஆவலுடன் அதை அடைய அன்றாடம் நோன்பு நோற்றால்
அல்லல் பல தீரும் அவனருள் தினம் கிட்டும்
நாவதனை அடக்கி நற்செயல் நிதம் புரிந்தால்
நாயன் மன்னிப்பை நமக்கு நல்கியே மகிழ்ந்திடுவான்!!

கையிலுள்ள ரமளானை காற்றில் பறக்க விட்டு
நிலையில்லா வரும் ஆண்டில் நோன்பிருக்க எத்தனித்து
காத்திருந்த பல பேரை காணவில்லை இப்போது
காற்றான உயிர் மூச்சு நின்று விடும் எப்போதும்!

காலத்தை உணர்ந்து இங்கே கடமை ஆற்றி
கருத்தாக நோன்பு நோற்றால் - மாதங்கள் ஆயிரத்தின்
சாலச்சிறந்த நன்மைபல சாற்றப்படும் நம்மீது
சரியான பாதை செல்ல சலிக்காதீர் தீனோர்களே!!

வியக்க வைக்கும் மருத்துவத்தை விஞ்ஞானம் காணும்முன்பே
விந்தை நோன்பின் மூலம் விடியலை கொண்டு வந்து
தயக்கமின்றி எல்லோரும் தாரணியில் நலம் பெறவே
தக்கதோர் மருத்துவத்தை தந்ததுதான் அல் குர்ஆன்!

அண்ணல் நபி வாழ்முறையும் அவர் சொன்ன நன்னெறியும்
அன்றுமுதல் இன்று வரை அகலாமல் இருப்பதற்கு
எண்ணம் கொண்ட இஸ்லாத்தை யாரேனும் வெறுப்பாரோ
எளிதாய் வாழ்ந்திடவே இன்றே உறுதி கொள்வீர்!!

இஸ்லாத்தில் இருப்பதினால் இச்சலுகை கிட்டுமென்றால்
எல்லோரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு தயக்கம் ஏனோ?
முஸ்லிமாய் வாழ்ந்திடவே முடிவு செய்துவிட்டோம் என்றால்
முகத்தழகும் அகத்தழகும் முத்துபோல் பளிச்சிடுமே!

ஒன்றுபட்ட இஸ்லாத்தில் உயர்தாழ் பேதமில்லை
உலகில் உள்ளோர் போற்றும் உன்னத நெறியிதுவே
தொன்றுதொட்டு இன்றுவரை எல்லோரும் சோதரரே
துடிதுடிக்கும் பகைமையினி தோற்றுவிடும் நம்மிடமே!!

நாடிய காரியத்தை நடத்தி வைக்க "இறை" இருக்க
நாம் ஏன் அஞ்ச வேண்டும் நானிலத்தில் பயத்துடனே
தேடிய பொருள் கொடுத்து தேவையை பூர்த்தி செய்ய
தென்றலாய் அல்லாஹ்வே திக்கெட்டும் வருவானே!

நன்றி சொல்லி நாம் தொழுவோம் - நாயனுக்கே
புகழனைத்தும் - நபியவர்கள் மொழி மழையில்
நனைந்திடுவோம் தினம் தோறும் - நாட்டிலுள்ள
முஸ்லிம்கள் நலம் பெறவே நல்லபல துவா கேட்போம்!!

ஆக்கம்: அபு ஷமீம்

இறைநாமத்தின் சிறப்பு


பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.
(
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா 3797)

என் இனிய இஸ்லாமிய உள்ளமே,

உனக்கு என் மனம் நிறைந்த சாந்திப்பூக்கள்…

அஸ்ஸலாமு அலைக்கும்.

"அல்லாஹ்வின் நினைவில் நனைந்திருக்கும் நாவுகள் பாக்கியம் பெற்றவை" என்று எங்கோ வாசித்ததாக உன் மடலில் எழுத்துக் கோர்த்திருந்தாய்.

திக்ர் என்றால் அகில உலகையும் படைத்தாளும் இரட்சகனை ஞாபகிப்பதாகும்.

அந்த இனிய திக்ர் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களை, எனக்கும் உனக்குமாய் இங்கு ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.

அல்குர்ஆனின் சில வார்த்தைகளை ஓசை நயத்துடன் ஓதுவதை மட்டும் திக்ர் என்பதாய் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூக அமைப்பில், திக்ரின் உண்மை வடிவமும் நோக்கமும் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

உதடுகளில் சிறகடிக்கும் வார்த்தைகள் உள்ளங்களைத் தட்ட முடியாமலிருக்கும் சோகம் நேர்ந்திருக்கிறது.

அல்லாஹ்வின் பார்வையில் எடை கனக்கும் திக்ர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

திக்ர் என்ற அறபுச் சொல்லின் அர்த்தம் நீ அறிவாயா?

திக்ர் என்பது அல்லாஹ்வின் சொல்லான அல்குர்ஆனையும் அதை அழகுடன் ஓதுவதையும் குறிக்கும்…

திக்ர் என்பது முழுவதுமாய் சிரம் தாழ்த்தும் தொழுகையைக் குறிக்கும்.

உளம் உருகி இருகரம் ஏந்தி அல்லாஹ்வைப் பிரார்திப்பதும் திக்ர்தான்.

இறை புகழ் பாடுவதால் ஈரமாயிருக்கும் நாவும் திக்ரில்தான் திளைத்து இருக்கிறது.

அறிவைத் தேடுவதும் அதனைத் தெளிவாகக் கற்பிப்பதும்கூட திக்ர் என இஸ்லாம் சொல்கிறது.

படைத்தாளும் இறைவனின் ஏவல்களை ஏற்று நடப்பதும் விலக்கியவை தவிர்த்தலும் திக்ரின் இன்னொரு வடிவம்தான்.

உள்ளத்தால் அல்லாஹ்வை எண்ணிப் பார்ப்பதும் திக்ர்தான்.

திக்ரின் உள்ளடக்கத்தை இப்படிச் சொல்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர்:

கண்களின் திக்ர் அல்லாஹ்வை நினைத்து அழுவதிலிருக்கிறது.

செவிகளின் திக்ர் அல்லாஹ்வின் புகழை செவிமடுப்பதிலிருக்கிறது.

நாவின் திக்ர் அல்லாஹ்வைப் புகழ்வதிலிருக்கிறது

கைகளின் திக்ர் அல்லாஹ்வாக்காய் கொடுப்பதிலிருக்கிறது.

உடலின் திக்ர் அல்லாஹ்வுக்கு நாணயமாய் நடப்பதிலிருக்கிறது.

உள்ளத்தின் திக்ர் அல்லாஹ்வின் மீது அச்சமும் நம்பிக்கையும் வைப்பதிலிருக்கிறது.

ஆன்மாவின் திக்ர் அல்லாஹ்வை முழுவதுமாய் ஏற்று அவனுக்காய் வாழ்வதிலிருக்கிறது.

மொத்ததில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையே திக்ர்தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்….

உன்னை விட ஒருவன் அல்லது ஒருத்தி அழகில், செல்வத்தில், குடும்பப்பாரம்பரியத்தில் அல்லது செல்வாக்கில் உயர்ந்திருப்பதைக் கண்டால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துடித்து வரட்டும் ‘மாஷா அல்லாஹ்’

பொறாமையின் மஞ்சனித்த உன் விழிகள் அமைதி கொள்ளும்.

இனியில்லை என்று அழுக்கு உடையும் பசியடைத்த கண்ணுமாய் வருகிறானே அந்தக் குருட்டுப்பிச்சைக்காரன், அவனைப் பார்….

உன் உள்ளம் அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தும்.

அந்த நீலம் பூசிய வானம் பார்…

கிரணக்கரம் நீட்டும் நிலவின் புன்னகை பார்….

அந்திக் குருவியின் சிறகைப்பார்…

புதிய குழந்தையின் சிலிர்ப்பு பார்�….

சொல்!

அல்ஹம்துலில்லாஹ்!

சொல்!

அல்லாஹு அக்பர்!

உரக்கச்சொல்!

அந்த மலை முகடுகள்

அந்த மேகப்பஞ்சு…..

காற்று துளைத்துச் செல்லும் விமானம்

எல்லாம் எதிரொலிக்கட்டும்��….

உண்மையான திக்ரின் வலிமை புரியாததால்தான் இன்று வேறு விடயங்கள் எம் திக்ராகி விட்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.

அல்லாஹ்வின் நினைவு பயிரிடப்பட வேண்டிய உள்ள நிலங்களில் இன்று களைகள் ஓங்கித் தளைத்திருக்கின்றன.

களைகள்தாம் பயிர்கள் என்றும் பயிர்தாம் களைகள் என்றும் சடவாத உலகம்

சத்தியம் செய்து என்னையும் உன்னையும் நம்பச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது.

அல்லாஹ்வைப் புகழ வேண்டிய நாவுகளில் ஆபாச வார்த்தைகள், விரசமான கேலிகள்…

அடுத்தவன் உயர்வில், சந்தோஷப் படாது தீப்பிடித்து எரியும் இதயங்கள்….

கொடுப்பது எப்படிப் போனாலும் சுரண்டி எடுப்பதிலேயே சந்தோசப் படுகின்ற கரங்கள்….

சுஜூதில் தலை வைத்து விட்டு, உலகம் முழுவதும் சுற்றி வரும் உள்ளம்.

இப்படி இப்படியாய்….

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, உதட்டில் முணுமுணுப்பாய் ஒட்டியிருக்கும் ‘அல்ஹம்துலில்லாஹ்’வுக்கும் உருட்டும் தஸ்பீஹ்மணியில் தேய்ந்து போயிருக்கும் ‘சுப்ஹானல்லாஹ்’வுக்கும் என்ன பெறுமதி இருந்து விடப்போகிறது?

ஒன்று புரிந்து கொள்…..

கிழிந்து போன உடைகளுடன் அரேபியப் பாலைவனங்களிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்தது இந்த திக்ர்தான்….

ஹமாஸின் இதயத்துடிப்பு அஹ்மத் யாஸீனுக்கு நரைத்த வயதிலும் நரைக்காத உள்ளத்தைத் தந்தது இதே திக்ர்தான்….

கல்வியமைச்சைத் தூக்கி எறிந்து விட்டு தூக்குக்கயிற்றுக்கு கழுத்தை நீட்டும் துணிவை செய்யித் குதுபுக்கு எது கொடுத்தது?

திக்ர்��…

திக்ர் ... ஒரு வாளை விட வலிமையானது…

ஒரு பாறையின் நெஞ்சையும் ஈரப்படுத்தக் கூடியது…

என் இனிய நண்பா,

அர்ஷில் நிழல் பெறும் ஏழு பேரில் அல்லாஹ்வை நினைத்து தனிமையில் விழிநீர் சிந்திய இளைஞனை எண்ணிப்பார்…

நமக்கும் அந்தப் பாக்கியம் வேண்டாமா?

அல்லாஹ்வை எமது உள்ளங்களிலிருந்து அழித்து விடுவதற்காய் அத்தனை ஊடகங்களும் அணிசேர்ந்திருக்கின்றன.

தொடும் தூரத்தில் நீண்டிருக்கும் துப்பாக்கிக் குழலை அறியாது துள்ளி விளையாடும் குழந்தைகளாய் ….நானும் நீயும் சடவாதத்தின் முன் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கும் துக்கத்தை வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.

பொறுத்தது போதும்…

இறந்து கிடந்த உள்ளங்களை அல்லாஹ்வின் நினைவு கொண்டு உயிர்ப்பிப்போம்.

மெல்லிய பனிதூவும் அதிகாலைகளில் அல்லாஹ்வை நினைத்து உயிர் ஏங்கி அழட்டும்…

அறிவைத் தேடுவதிலும் அதனைக் கற்பிப்பதிலும் எமது உள்ளங்கள் தாகிக்கட்டும்.

அல்லாஹ்வின் தீன் இந்தப்பூமியில் நிலை நாட்டப்பட முன் எமது இதயங்களில் விதையாகி வேர் விட்டு விருட்சமாய் வளர வேண்டும்.

இனியவனே,

வா

மீண்டுமொருமுறை ஓங்கிச் சொல்வோம்

அல்லாஹு அக்பர்

- சமீலா யூசுப் அலி - இலங்கை