| |
முஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே.
அவற்றுள் 'மனித நீதிப் பாசறை' அமைப்பினர் சட்ட ரீதியான எதிர்ப்புகளைக் காட்டி, அல்லாஹ்வின் அருளால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தினமலர் பத்திரிகைக்கு எதிராகப் பல்வேறுபட்ட வழக்குகளை மனித நீதிப் பாசறை அமைப்பினர் தொடுத்து, வழக்கில் தாங்கள் குறுக்கீடு செய்து வாதாடும் உரிமை கோரி இருந்தனர்.
கடந்த 05.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் அடுத்தடுத்து 10,12,15 ஆகிய தேதிகளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 15.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் "தினமலர் பத்திரிகை இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதானது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டக் கூடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தொடர்புடைய தினமலர் நிர்வாகிகளைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு வாதாடினார்.
மனித நீதிப் பாசறையினர் தொடுத்துள்ள வழக்குகளில் தங்களைக் கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வேங்கடபதி, ஆர். ராகவன், ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்னதாக மனுச் செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, "ஊடகத்துறைக்கு வழங்கப் பட்டுள்ள எழுத்துச் சுதந்திரம் என்பது பொதுமக்களுள் ஒரு சாராரின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதற்கும் ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் வழங்கப் பட்டிருக்கும் லைஸென்ஸ் அல்ல. மனித வரலாற்றில் பெரும் ஆளுமையுடைய ஒருவரைக் குறித்து செய்தி வெளியிடப் படும்போது உச்சமான எச்சரிக்கையோடு பரிசீலித்து வெளியிட வேண்டும். இல்லையேல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பின்விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது" என்று தனது தீர்ப்பைத் தொடங்கி,
allowing such practice would affect national integrity and imperil the constitutional aspirations.
என முடித்தார்.
தினமலர் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்ற நியாயமான தீர்ப்புக்கு மட்டுமின்றி "The freedom given to the press should not be treated as a licence to denigrate the feelings of a section of the people and to divide communities for sleazy gains" என்ற ஆணித்தரமான கருத்துகளுக்காவும் நீதிபதி ரகுபதி பாராட்டுக்குரியவராவார்.
அக்கருத்து, இனிவரும் காலத்தில் சிறுபான்மையினரது மத உணர்வுகளோடு விளையாட நினைக்கும் எழுத்து வன்முறை முயற்சிகளுக்கு அணைபோட்டுத் தடுக்கும்.
***** ஓமன் நாட்டில் தினமலர் இணையத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
***** தமிழகத்தில் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
Saturday, January 31, 2009
தினமலருக்கு (நீதியின்) அடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment