இஸ்லாமாபாத், ஜன.22-
ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மாரியட் ஓட்டலில் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த மனித வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஓட்டல் பலத்த சேதம் அடைந்தது. புனரமைக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம்தான் அந்த ஓட்டல் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு செரினா ஓட்டலில் குடியரசு தின விழாவை கொண்டாட இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக நேற்று இந்திய தூதரகம் திடீரென அறிவித்தது. ஆனால் விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்பட வில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் விழா ரத்து செய்யப்படுவதாக மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில் இந்த விழா ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment