ஊத்தங்கரை, ஜன. 20: ஊத்தங்கரை அருகே 4 சிறுமிகளுக்கு நடத்தவிருந்த திருமணங்கள் அரசு அதிகாரிகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டன.
தகவலின்பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியர் முகந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையனின் மகள் பூங்கொடி (14), கிருஷ்ணணின் மகள் சரண்யா (14), கன்னையாவின் மகள் செம்பருத்தி (15), சண்முகத்தின் மகள் திவ்யா (14) ஆகியோருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களது பெற்றோர்களுக்கு சிறுமிகளுக்கு திருமணங்கள் நடத்துவது தவறு என அரசு அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து, திருமணங்கள் நடைபெறவிருந்தது நிறுத்தப்பட்டது.
இக்கிராம மக்கள் கல் உடைக்கும் தொழிலுக்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும், அதனால் சிறுவயதிலே சிறுவர்களுக்கு திருமணம் செய்வதாகவும் கிராம மக்கள் கூறினர்.
No comments:
Post a Comment