குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம்
நாகர்கோவில், ஜன. 23: கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஜமாஅத் தலைவர் எம். இப்ராஹிம்கான் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஏ. மீரான்மைதீன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்றங்கரைபள்ளிவாசல் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதுபட்டு முடங்கிப்போகும் நிலையுள்ளது. இவற்றுக்குப் பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கேரளத்திலிருந்து வரும் முஸ்லிம் பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிவாசலுக்கு செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழக உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்களுக்கான 3.5 சத இடஒதுக்கீடு அரசாணையின்படி பணியிடங்களை நிரப்புதவதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை பொதுச்செயலர்கள் ஏ. சம்சுதீன், செய்யது முகம்மது, ஏ. அஷ்ரப், எஸ். சரபுதீன், கபீர், பி. மீராசா, ஏ. ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொருளாளர் பி. ஹிமாம் பாதுஷா வரவேற்றார். எம். ஜெகபர் அலி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment