அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

கியாமத் நாளின் அடையாளங்கள்

மகளின் தயவில் தாய்

மகளின் தயவில் தாய்..
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50


பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

'
வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50

குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும்,மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

'
நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(
இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(
ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306


பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808


ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல் : முஸ்லிம் 3971, 5098


உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

'
உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான்,முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'
அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.

நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 7119

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(
யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1.
எனது மரணம்

2.
பைத்துல் முகத்தஸ் வெற்றி

3.
கொத்து கொத்தாக மரணம்

4.
நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5.
அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6.
மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.

நூல் : புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 -
புகை மூட்டம்

2 -
தஜ்ஜால்

3 - (
அதிசயப்) பிராணி

4 -
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 -
ஈஸா (அலை) இறங்கி வருவது

6 -
யஃஜுஜ், மஃஜுஜ்

7 -
கிழக்கே ஒரு பூகம்பம்

8 -
மேற்கே ஒரு பூகம்பம்

9 -
அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 -
இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.


புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(
அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(
அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(
அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்

(
மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

புரியாதத் தத்துவம்

islamic_dress.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

புரியாதத் தத்துவம்

புருவங்களை உயர்த்தும்;

ரணம் கொடுக்கும் வார்த்தைகளை

தினம் தொடுக்கும் அறிவாளிகள்!

சமதர்ம சமாதனப் பேச

மிடுக்கு ஆடையுடன்

ஒலிக்கும் குரல்

தரங்கெட்ட தரணியிடமிருந்து!

அனாச்சாரத்தில் அமர்ந்து

கலாச்சாரத்தைப் உரைக்கும்;

உலகத்திற்கு எப்போது உறைக்கும்!

மூடிச் செல்லும் எங்களுக்கு

முத்திரையிடும் உலகம்;

பெண்ணடிமை என்று!

மாற்று வண்ணத்தில்

வேற்று மக்கள் அணிந்தால்

ஒட்டுப்போடும் உலகம்;

நாங்கள் அணிந்தால் மட்டும்

வேட்டு வைக்கும் கிரகம்!

காட்டாறு உணர்வுக்கு

அணைப்போட நினைத்து;

அணைத்ததை படம்பிடித்த

பத்திரிக்கைக் கதையுண்டு இங்கே

பாதிரியார்கள் கன்னிகாஸ்திரி

பாதங்கள் கோலம் போடும் அங்கே!

நித்திரையைக் கெடுக்கும்

உன் மனதிற்க்காக நான்

முகத்திரையிட்டு வந்தேன்;

ஆபாசத்திற்கு முத்திரையிட்டுள்ளேன்!

ஒழுக்கத்திற்கு உடையிட்டு

நடைப்போட்டு வந்தோம்;

எதிர்புக்குரல் ஒலித்தாலும்

எதிர்த்து நின்று ஜெயிப்போம்!

அந்த ஏழு விஷயங்கள்



بســــم الله الـر حـمـن الرحـــيــم
எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி, மனிதன் அனுபவிக்க அனுமதித்துள்ள இறைவன், அவற்றில் ஆகுமானவை எது..? தடுக்கப்பட்டவை எது..? என்பதையெல்லாம் விளக்கி, அந்த மனிதனை பக்குவப்படுத்தி, பண்பாளனாக மாற்றி, சுவனத்திற்கு உரியவனாக மாற்ற தன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதர்களையும் அனுப்பி வைத்தான். அந்த தூதர்கள் குறித்து, அதிலும் குறிப்பாக ரஸூல்[ ஸல்] அவர்கள் குறித்து நமக்கு கட்டளையிடும் போது,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். [59 ; 7 ]
என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

அந்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் பல்வேறு ஏவல், விலக்கல்களை சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஏழு ஆகுமான விஷயங்களும், ஏழு தடுக்கப்பட்ட விஷயங்களும் புஹாரியில் 6235 மற்றும் பல்வேறு இலக்கங்களில் காணப்படுகிறது. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகிறது;

ஏவப்பட்ட விஷயங்கள்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

நாம் நோயாளிகளை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கோ, அல்லது வீடுகளுக்கோ செல்வோம். ஆனால் யாரை விசாரிப்போம் என்றால் அவர்கள் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அல்லது நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். அல்லது ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் விசாரிப்போம். இந்த நிலை மாறவேண்டும். அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் அவர் நோயுற்ற செய்தியறிந்தால் நாம் நலம் விசாரிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோய் விசாரிக்க சென்றால்,
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' .

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
என்ற நபியவர்கள் காட்டித்தந்த துஆவை நோயாளிகளுக்காக நாம் செய்யவேண்டும்.

2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை அவரது வீட்டில் பார்த்து விட்டு நடையை கட்டுபவர்கள் நம்மில் பெரும்பாலோர் உண்டு. காரணம் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று, அடக்கம்செய்யும் வரை உடன் இருந்தால் அதற்கு கிடைக்கும் நன்மையை அறியாத காரணத்தினால்தான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். [புகாரி 1325 ]
இரண்டு மலையளவு நன்மையை அள்ளித்தரும் செயலான ஜனாசாவுக்காக தொழுதல், பின் தொடர்தல், அடக்கம் செய்தல் ஆகிய செயலை இனியும் நாம் விடலாமோ..?

3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது அரிதாகிவிட்டது. ஆடு, மாடு தும்முவது போல் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்படியே தும்மியவர் சொன்னாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவு பெரும்பாலோருக்கு இல்லை. காரணம் தும்மியவருக்கு பதிலளிப்பதும் ஒரு நல்லமல் என்ற அறியாமைதான்.

4. நலிந்தவருக்கு உதவுவது.

நலிந்தவர்களுக்கு நம்மில் பலர் உதவி செய்கிறோம். அதை இன்னும் அதிகமாக செய்யவேண்டும். அமைப்புகள் பல நலிந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. பாராட்டுகிறோம். ஆனால் அவைகளை விளம்பரப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் விளம்பரப் படுத்தியே ஆகவேண்டும் என அமைப்புகள் கருதினால், குறைந்த பட்சம் உதவி பெறுபவரின் முகத்தை மறைத்தாவது படத்தை வெளியிட முன்வர வேண்டும்.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.

அநீதியிழைத்தல் என்பது ஒருவருக்கு அவரது சொத்து- மானம்- உயிர் ஆகியவற்றில் அநீதியிழைக்கப் பட்டிருக்கலாம். அப்படி ஒருவர் அநீதிக்கு உள்ளானால், அவரை அநீதிக்கு உள்ளாக்கியவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்திட உதவவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தனக்கு பிடிக்காதவர்களின் கண்ணியத்தை கப்பலேற்றும் வேலையை கற்றறிந்தவர்களே செய்வது வேதனைக்குரியதாகும்.

6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

ஸலாம் சொல்லுதல் என்பது பெரிய தாடி, ஜிப்பா சகிதம் ஒரு கெட்டப்பில் இருப்பவர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் என்றாகி விட்டது. மேலும் நாகரிக வளர்ச்சியில் ஸலாம் காணாமல் போய், 'குட்மார்னிங்' வழக்கில் வந்துவிட்டது. முஸ்லிம்களில் கணிசமானோர் குட்மார்னிங் சொல்வதை பார்க்கிறோம். குட்மார்னிங் சொன்னால் மார்க்கத்தில் எந்த நன்மையுமில்லை. ஆனால் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் பத்து நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மைகளும் கிடைக்கும். இது சொன்னவருக்கு கிடைப்பதாகும். கேட்டு விட்டு பதில் சொல்பவருக்கும் இதுபோன்ற நன்மை கிடைக்கும். இப்படி எந்த செலவும் செய்யாமல் நன்மைகளை கொள்ளையடிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாமா..?

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

சத்தியம் செய்தவர் மார்க்கத்திற்கு உட்பட்ட சத்தியத்தை செய்திருப்பின், அந்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் உதவ வேண்டும். ஒருவர் பொருளாதார விஷயத்தில் ஒரு சத்தியத்தை செய்திருப்பார். எதிர்பாராத விதமாக அவர் பொருளாதார பின்னடைவை சந்தித்து சத்தியத்தை நிறைவேற்ற முடியா நிலையில் இருப்பார். இப்படிப்பட்டவருக்கு நாம் உதவி செய்வதன் மூலம் நாம் நன்மையை அடைந்து கொள்ளமுடியும்.
தடுக்கப்பட்டவைகள்;
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது என்பது வசதி படைத்த சில முஸ்லிம்கள் கவுரவமாக கருதுகிறார்கள். ஏழைகள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்காது. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் கட்டளையை ஏற்று வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணல்- பருகுதல் செய்வதை சஹாபாக்கள் நஞ்சென வெறுத்துள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்கள்;

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.[புகாரி 5632 ]

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
முஸ்லிம்களில் பெரும்பாலான ஆண்கள் தங்கம் அணிபவர்களாக இருக்கிறர்கள். இன்னும் திருமண நேரத்தில் பெண் பேசும்போதே மாப்பிள்ளைக்கு தனியாக இத்தனை சவரன் போடவேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆண்கள் தங்கம் அணிவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். கழுத்தில் மைனர் செயினோடும், கையில் பிரஸ்லேட்டோடும் இவர்கள் செய்யும் அளப்பரை தாங்க முடியலை. ஆனால் அவை நரகத்தின் நெருப்பு என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி[ஸல்] அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதை தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா என்று கேட்டார்கள். நபி[ஸல்] அவர்கள் சென்றபிறகு, அந்த மோதிரத்தை எடுத்து அதை வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதருக்கு கூறப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அதை தூர எறிந்திருக்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதை ஒருபோதும் நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார்.[முஸ்லிம்]

தங்கம் அணியும் விசயத்தில் இறைத்தூதரின் கட்டளைக்கு சஹாபாக்கள் எந்த ளவு கட்டுப்பட்டுள்ளார்கள். இன்று நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

இங்கே பாட்டின் அனைத்து வகைகளையும் ஆண்களுக்கு நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் திருமணம் என்றாலே மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க ஊர்வலம் வருவார். இன்று நாகரிக மாற்றம் காரணமாக திருமணத்தில் பட்டு அணிவது குறைந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தில் பட்டு அணிவது முற்றிலும் ஒழிந்து விட்டது என்று கூறிட முடியாது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள்."மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [புகாரி எண்; 886 ]

இம்மை பகட்டுக்காக பட்டாடை அணியும் ஆண்கள் மறுமை பாக்கியத்தை இழக்கத் தயாரா என்பதை சிந்திக்கட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் ஏவியதை செய்பவர்களாக, தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

காலத்திற்கு ஏற்ற சிறுகதை....

Page 02 of 02

இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)


ரண நிலையம்.

ph-1.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

நொடிகளும் படிநுனியில்

அழுத்தம் கொடுத்த இதயம்;

அழமட்டுமே முடிந்தக் கண்கள்;

மனம் தந்த வலியால்

மயான அமைதிக்கொண்ட

விமான நிலையம்!

விட்டுப்பிரிய வந்திருக்கும்

திக்குத்தெரியா மக்கள்;

புரியாத மொழிகள்;

விழிகளால் பேசுவோம்;

வலி ஒன்றென்பதால்!

எத்தனை முறைப் பிரிந்தாலும்

அத்தனை முறையும்

அழுகிறேன்;

அழுவதற்கு வெட்கப்படத்

தேவையில்லா இடம்!

கனமான இதயத்தால்

இலகுவானது கைப்பெட்டி;

முரண்டுப்பிடித்த பாதமோ

நகர மறுக்கும்!

உன்னை விட்டு

விலக வெறுக்கும்!

சுற்றம் சூழ

கண்ணீர் மல்க

இதயம் விலக;

விட்டுப்பிரிகிறேன்

இறிதியாகத் தொட்டுச்செல்கிறேன்!

கலங்க வைக்குது "கட்டிப்பிடி' கலாசாரம்

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள், நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி', சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.


Friday, October 15, 2010

தெலுங்கானா மாநிலம் அமைந்தால்முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு:சந்திரசேகரராவ் அறிவிப்பு


ஐதராபாத்:''தனி தெலுங்கானா மாநிலம் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்இ'' எனஇ தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.இ) தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் டி.ஆர்.எஸ்.இ கட்சியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது.


அப்போது கட்சியில் இணைந்த முஸ்லிம் தலைவர்களை வரவேற்றுப் பேசிய டி.ஆர்.எஸ்.இ தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு குறித்து அரசியல் கட்சிகள் முழங்கினாலும்இ அனைத்து தட்டு முஸ்லிம் மக்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதே உண்மை. ஆந்திராவில் ஆட்சி நடத்திய எந்த ஒரு கட்சியும்இ முஸ்லிம்கள் நலத்திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டி.ஆர்.எஸ்.இ கட்சி மட்டுமே முஸ்லிம் சமுதாயம் மீது அக்கறை கொண்ட உண்மையான மதசார்பற்ற கட்சி.

இதற்குச் சான்றாகஇ தனி தெலுங்கானா அமைந்தால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். டி.ஆர்.எஸ்.இ ஆட்சி அமைக்கும் பட்சத்தில்இ முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். தவிரஇ அமைச்சரவையில் நான்கு அல்லது ஐந்து முஸ்லிகள் இடம் பெறுவர்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

திரை விலக்க மாட்டோம்....

hijab our right.jpg

உன் எச்சில்
ஊறும் இச்சைக்காக
தடைச்செய்ய நினைத்தாயோ;
எங்களைத் தடுத்திடத் துடித்தாயோ!

அடிமை ஏதுமில்லை
தனிமைப் பட்டமும் இல்லை;
உன் பசிக்கொண்ட
பார்வைக்கு வழியவந்து
ஒளிந்திருக்கிறேன்!

தடுமாறும்
தடம்மாறும் உன்
மனதிற்குத் திரைப்போட
நான் திரையிட்டுவந்தேன்!

கல்விக் கற்க
பள்ளிக்கு திறந்து வரச்செய்கிறாய்;
அறிவு செய்யும் வேலைக்கு
அங்கம் காட்டச்சொல்கிறாய்!

விபச்சாரத்திற்கு வித்திட்டு
உபச்சாரம் செய்கிறாய்;
பெண்ணடிமைக்கு மாற்று பெயரிற்று
கலாச்சாராம் என்கிறாய்!

வெத்துப் பேச்சிக்கு
விலைப்போக மாட்டோம்;
வெட்டிப் போட்டாலும்
திரைவிலக்க மாட்டோம்!

கைக்கூலி....



call.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒப்பற்ற
ஒப்பனையில்லா
உன் பாசம்!

விழி முழுதும்
நீயானதால்
தழும்பிக் கொண்டு
தண்ணீர் சிந்தும்!

கை நிறையப்
பணம் இருந்தாலும்
மனம் மட்டும் கனக்கும்;
இதயத்தின் ஓர் இடுக்கில்
இறுக்கும்!

திட்டமிடாமல் உனைத்
திட்டநினைக்கும் போது
சற்றென உதிக்கும் - உன்
கர்ப்பக் கால கலக்கம்!

எட்டி உதிக்கும்
நம் பிள்ளையை
தொட்டுப் பார்க்கச்
சொல்லி ரசிப்பாய்!

உன் பிரசவத்தை
நினைத்தாலே எழுந்து நிற்கும்
என் ரோமங்கள்;
இப்போது அதை நினைத்தாலும்
தவிடுப் பொடியாகும்
என் கோபங்கள்!

வெட்கித் தலைக்குனியும்
என் விழி இரண்டும் பூமிக்கு;
கனம் என உனை நினைத்துக்
கைக்கூலி கேட்டதிற்கு!

கர்பகாலத்தில் செய்யவேண்டியவைகள் ( தாய் சேய் நலன் )


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.


· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.