அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 10, 2009

எரிவாயு பற்றாக்குறையால் நடுநடுங்கும் பல்கேரியா

எரிவாயு பற்றாக்குறையால் நடுநடுங்கும் பல்கேரியா


ரஷ்ய எரிவாயு விநியோகம் நின்றதால் நாட்டின் மத்திய ஊராட்சி வெப்பச் சேவை பாதிப்படைந்து, பல மில்லியன் பல்கேரியர்கள் தங்கள் வீடுகளில் குளிரில் நடுங்குகிறார்கள்.
கம்யூனிஸ்ட் காலத்தில், பல்கேரியர்கள் எப்போதும் தங்களது அண்டை நாடான ரஷ்யாவை எரிவாயு விநியோகத்திற்கு நம்பியிருந்தனர். அத்தியாவசிய எரிசக்தி இல்லாத தற்போதைய நிலையை அவர்கள் அனுபவித்ததே இல்லை. ஏற்கனவே துன்பப்படும் பல்கேரியர்களை மேலும் துன்பப்படுத்தும் வகையில் வெப்பநிலை பூஜியத்திற்குக்கீழே சரிந்துவிட்டது.
எரிவாயு பற்றாக்குறையால் ரேடியேட்டர்கள் குளிர்ந்துவிட்டன. சரியான வெப்பநிலைக்குத் தண்ணீரைச் சூடேற்ற போதிய எரிசக்தி இல்லை.
“என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவிக்கிறேன்,” என்றார் மூன்று வயது சிறுவனின் தாயான வர்ஜீனியா பொயிட்சீவா. இவர் தலைநகர் சோஃபியாவில் வாழ்கிறார்.
“எங்கள் வீட்டில் இதமான சூடேற்ற மத்திய வெப்பச் சாதனம்தான் ஒரே வழி. மத்திய சாதனத்தின்வழி சூடேற்றப்படும் தண்ணீர் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும்
“சுடுநீர் நின்றுவிட்டால் என் கணவரின் பெற்றோருடன் நாங்கள் தங்கவேண்டும். அவர்களிடம் மின்சாரத்தில் இயங்கும் சாதனம் இருக்கிறது, எங்களிடம் இல்லை,” என்றார் அவர்.
ரஷ்ய எரிவாயுவைப் பல்கேரியா முற்றிலும் நம்பியிருப்பதால், கடுமையான எரிசக்தி இன்னலை பல்கேரியா எதிர்நோக்குவதாகப் பிரதமர் சர்கெய் ஸ்டனிஷெவ் ஒப்புக் கொண்டார்.
எரிவாயு விநியோக நிறுத்தத்தால் தொழிற்சாலைகளும் ஊராட்சி வெப்ப மையங்களும் பாதிக்கப்பட்டன.
எரிவாயு வெப்பச் சாதனத்தை நம்பியிருந்த 72 பள்ளிகள் புதன்கிழமை மூடப்பட்டன. இந்நிலையில், மின்சாரத்திற்கு எழுந்துள்ள கூடுதல் தேவையை மின்சக்தி ஆலையால் சமாளிக்க முடியாது என்று எரிசக்தி அமைச்சர் எச்சரித்திருக்கிறார். -பிபிசி

No comments: