அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 4, 2009

தமிழகத்தில் வெற்றி யாருக்கு?


· நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு. கூட்டணி 41 சதவிகித வாக்குகளை பெற்று 20-22 தொகுதிகளிலும், அதி.மு. அணி 39 சதவிகித வாக்குகளைப் பெற்று 18-20 தொகுதிகளிலும், விஜயகந்த தலைமையிலான தே.மு.தி. 12 சதவிகித வாக்குகளை பெற்று எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன..

· தமிழகத்தில் 2004ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு, கூட்டனிக்கு (பா.., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட) கிடைத்த வாக்குகள் 57 சதவிகிதம். அதி.மு. வுக்கு கிடைத்த வாக்குகள் 35 சதவிகிதம்.

· இந்த ஆண்டு 2009 ல் தி.மு. கூட்டனியை விட்டு பா.. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால் தி.மு. இழக்கப்போகும் வாக்குகள் 6 சதவிகிதம் மட்டுமே (57-6=51), ஆனால் தி.மு. விலிருந்து விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி. வுக்கு மாறி விழப்போகும் வாக்குகள் 10 சதவிகிதம் (51-10=41). அதாவது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த முறை தி.மு. இழக்கப்போகும் மொத்த வாக்குகளின் சதவிகிதம் 16 சதவிகிதம். .தி.மு. கூடாரத்திற்கு கூண்டோடு சென்ற பா.. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்படும் வாக்கு இழப்புக்களை விட தி.மு. வுக்கு மிகப்பெரிய தலைவலியாக- சவாலாக இருக்கப்போவது விஜயகாந்த். இந்த முறை தி.மு. கூட்டனிக்கு 20-22 தொகுதிகள் கிடைக்கலாம்.

· 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் .தி.மு. கூட்டனிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 35 சதவிகிதம், பா.. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்ததால் .தி.மு. கூட்டனிக்கு அதிகப்படியாக கிடைக்கப்போகும் வாக்குகள் 6 சதவிகிதம், (35+6=41) ஆனால் .தி.மு. கூட்டனியிலிருந்து விஜயகாந்த்துக்கு ஆதரவாக விழப்போகும் வாக்குகள் 2 சதவிகிதம் (41-2=39). அதாவது, ஜெயலலிதா மிகவும் திறமையான முறையில் கூட்டனி அமைத்த போதிலும் - கடந்த தேர்தலை விட இந்த முறை 4 சதவிகித வாகுகளையே பெறப்போகிறார் (35 சதவிகிதம் லிருந்து 39 சதவிகிதம்). இந்த தேர்தலில் .தி.மு. கூட்டனிக்கு 18-20 தொகுதிகள் கிடைக்கலாம்.

· இந்த பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி. வுக்கு 12 சதவிகித வாக்குகள் கிடைத்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றியடைய போவதில்லை. ப்ல தொகுதிகளில் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டு - சில தொகுதிகளில்வைப்புதொகையைக்கூட இழக்கும் நிலையை சந்திக்கலாம்.. பிரபல அரசியல் விமர்சகர்கள்எந்த தொகுதியிலும் வெற்றியடைய முடியாததே.மு.தி. வுக்கான 12 சதவிகித வாக்குகளைவீணடிக்கப்பட்ட வாக்குகளாககுறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றியடையா விட்டாலும் 12 சதவிகித வாக்குகளை பெற்று இந்த தேர்தலின் மூலம் தி.மு. மற்றும் .தி.மு. வின் வெற்றியை பாதிக்கும் அல்லது நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகப்போகிறார் விஜயகாந்த..

· கருணாநிதியும்..ஜெயலலிதவும் கூறுவதுபோல் எந்த அணியும் வெற்றிக்கூட்டனிகளாக மாறி 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடியாது..

· அடுத்த சட்ட மன்ற தேர்தலில் - தமிழக அரசியலைகலக்கப்போகும்ஒரே அரசியல்வாதியாக வளர்ச்சியடைய போவது விஜயகாந்த் மட்டுமே. அதனால் கருணாநிதி-செயலலிதா மற்றும் இராமதாஸ் ஆகியோர் விஜயகாந்த்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்..(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)

· அதெல்லாம் சரி...முக்கியமான விஷயத்துக்கு வருவோம்..

· தேர்தல கூட்டனி நிர்ணயிக்கப்பட்டு - தொகுதிகள் பங்கிடப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் தொடங்கிவிட்ட இந்த வேளையில், தமிழக முஸ்லிம்களை..’சமுதாய சொந்தங்களைமிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய மனிதநேய மக்கள் கட்சி எந்த அணியில் உள்ளது..எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லையே..ஏன்?

· தமிழக முஸ்லிம்களின் அரசியல் அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் மருத்துவர் இராமதாஸ் தொடங்கிவைத்த

· இந்திய தேசிய மக்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன?

· (NDTV-யில் நேற்று (31 மார்ச் 2009, இரவு 9 மணிக்கு) ஒளிபரப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு தகவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்த தேர்தல் கணிப்பு பிரபல ஆய்வு நிறுவனமான GFKMode மற்றும் NDTV யால் இணைந்து நடத்தப்பட்டது

· தோழமையுடன்

·


·

No comments: