கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காஸ்ஸாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளையும்,பெண்களையும் கொன்று பள்ளிக்கூடங்களையும்,மருத்துவமனைகளயும் தகர்த்த இஸ்ரேலின் தாக்குதல் மனப்பூர்வம் திட்டமிட்டு நடத்தியது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
22 நாள்கள் நீண்ட தாக்குதல் எல்லா சர்வதேசச்சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டுச்செய்த போர்க்குற்றங்கள் என்று தீவிர விசாரணைக்குப்பின் ஆம்னெஸ்டி தயாராக்கிய 117 பக்க தெளிவான அறிக்கையில் குற்றஞ்சாட்டுகிறது. சர்வதேச சட்டங்கள் தடைச்செய்த அபாயகரமான ஆயுதங்களால் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 1400 பேரில் 900 பேர் அப்பாவிகள். இதில் 300 குழந்தைகளும் 115 பெண்களும் உட்படும்.ஹமாஸ் முன்னர் தயாரித்த புள்ளி விபரங்கள் உண்மை என்று நிரூபிக்கிறது ஆம்னெஸ்டியின் அறிக்கை.
இஸ்ரேலின் அநீத தாக்குதல்களில் நிகழ்ந்த கொலைகள் தவறுதலாக நடந்த விபத்து அல்ல.மொட்டைமாடிகளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீதும்,நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்த மருத்துவமனை பணியாளர்கள் மீதும் நடத்திய தாக்குதல்கள் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது. நிராயுதபாணிகளான நிரபராதிகளான பெண்களையும் குழந்தைகளையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றது கைக்கு எட்டும் தூரத்தில் வைத்து.வெள்ளை பாஸ்பரஸ் போன்ற தடைச்செய்யப்பட்ட ஆயுதங்களைத்தான் காஸ்ஸாவில் சிவிலியன்களுக்கெதிராக இஸ்ரேல் உபயோகித்தது என்று விசாரணைக்கு தலைமை வகித்த ஆம்னெஸ்டியின் டொனடெல்லா ரோவெரா தெளிவுப்படுத்துகிறார். ஹமாஸ் போராளிகள் குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஆம்னெஸ்டி மறுக்கிறது.காஸ்ஸாவில் வீடுகளில் அத்துமீறி நுழைந்து அவற்றை ராணுவமுகாம்களாக மாற்றி அங்குள்ளவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது இஸ்ரேல்தான் என்று ஆம்னெஸ்டி குற்றஞ்சாட்டுகிறது.இஸ்ரேலை நோக்கி ஃபலஸ்தீன் போராளிகள் நடத்திய தாக்குதலில் 13 சிவிலியன்கள் மட்டும்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆனால் இதுவும் போர்க்குற்றம்தான் என்றும் அந்த அறிக்கையில் ஆம்னெஸ்டி கூறுகிறது.
No comments:
Post a Comment