அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 2, 2009

தேனியில் மாயமான பா.ம.க., பிரமுகரை ஆஜர்படுத்த இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு

மதுரை: "தேனியில் மாயமான பா.ம.க., சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் சேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி,' இன்ஸ்பெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த ரியாசூதீன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:

என் சகோதரர் சேக் அப்துல்லா ஓமியோபதி டாக்டர். பா.ம.க., சிறுபான்மை பிரிவு செயலாளராக உள்ளார். இவரின் மகள் கஜீரா. வேறு பள்ளியில் பயின்ற இவரை தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சேர்க்க சேக் அப்துல்லா திட்டமிட்டார். அப்பள்ளியின் செயலாளர் வெங்கடேசன் கூறியபடி ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழையும் வாங்கி விட்டார். தற்போது கஜீராவை பள்ளியில் சேர்க்காமல் பள்ளி செயலாளர் இழுத்தடித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் கஜீராவின் மாற்று சான்றிதழை பள்ளி செயலாளர் கிழித்து விட்டார். சேக் அப்துல்லா தேனி போலீசில் புகார் கொடுத்தார். தேனி மாவட்ட பா.ம.க.,வினர் பள்ளி நிர்வாகம் குறித்து போஸ்டர் அச்சிட்டு ஓட்டினர். இதனால் சேக் அப்துல்லாவை வெங்கடேசன் மிரட்டினார். ஜூன் 20 ல் வெளியில் சென்ற சேக் அப்துல்லா வீடு திரும்பவில்லை.

பள்ளி செயலாளர், தலைவர் ஜெயசீலன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் திருப்பதி ஆகியோர் இதற்கு பின்னணியில் உள்ளனர். அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, சரவணகாந்தி ஆஜராயினர். சேக் அப்துல்லா குறித்து அரசு வக்கீல் டேனியல் மனோகரன், தேனி போலீசாரிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பிறகு நீதிபதிகள், "சேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும்,'' என இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர்.

No comments: