பாரதீய ஜனதா மாவட்டத்தலைவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதுடன், மேலும் 5 நபர்களுக்கு கத்திக்குத்தால் காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மாண்டிய உதயகிரி பகுதிகளில் தொடங்கிய கலவரம் மைசூரின் நகரப்பகுதிகளுக்கும் பரவியது.
மைசூர் புலிகேசி நகரில் சொந்த வீட்டிற்கு முன்பு மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த மாவட்டத்தலைவர் கிரிதரை 2 மோட்டார்பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் கத்தியால் குத்தியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.சாத்தமாரநகள்ளி காலனியில் கவுடியா நகரில் வாஜித் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காயமடைந்த நூற்றுக்குமேற்ப்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடைப்பெற்ற கலவரத்தில் 16 வயது ஜுனைத் பாஷா, திருப்பதி என்ற அப்பு, முபாரக் ஆகியோர் கொல்லப்பட்டனர்.மேலும் 38 பேர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.மைசூர் சுபாஷ் சந்திரபோஷ் ரோட்டில் அரபிக்கல்லூரியும்,கைதமா நகள்ளி மதீனா மஸ்ஜிதும் அமைந்திருந்த காம்பவுண்டிற்குள் பன்றியைக்கொன்று அதன் மாமிசங்களை வீசியெறிந்ததுதான் கலவரம் ஏற்பட காரணம்.ராஜீவ் நகரில் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடைகளும்,பள்ளிக்கூடங்களும் அடைத்துக்கிடக்கின்றன.
வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.மாநில டி.ஜி.பி அஜய்குமார் சிங் மைசூரிற்கு வந்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கலவரம் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக அவர் கூறினார்.
news source:thejas malayalam daily
No comments:
Post a Comment